மேலும் அறிய

நாகையில் கச்சா எண்ணெய் கடலில் கலந்து பாதிப்பு - அலுவலரை கடலில் தள்ளிவிட்டு மீனவர்கள் வாக்குவாதம்

நாகை அருகே பட்டினச்சேரி மீனவக் கிராமத்தில சென்னை பெட்ரோலியத்திற்கு சொந்தமான குழாய் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் கடலில் கலந்து பாதிப்பு மீனவர்கள் வேலை நிறுத்தம்.

நாகை மாவட்டம் நரிமணத்தில் சென்னை பெட்ரோலியம் கழகத்தின் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. காவிரி படுகையில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தினால் எடுக்கப்படும் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு லாரிகள், கப்பல்கள் மூலம் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

கப்பல்களுக்கு எண்ணெய்யை கொண்டு செல்ல நரிமணத்தில் இருந்து சென்னை பெட்ரோலியம் கழகத்தின் சுத்திகரிப்பு நிலையத்தில் சாமந்தான்பேட்டை வழியாக பட்டினச்சேரி மீனவக் கிராமம் வரை குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாயை கப்பலில் வரும் கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பு நிலைத்திற்கு எடுத்து செல்லவும் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், பட்டிச்சேரி மீனவக் கிராமத்தில் உள்ள சென்னை பெட்ரோலியத்திற்கு சொந்தமான குழாய் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் நேற்று இரவு கடலில் கலந்துள்ளது. கச்சா எண்ணெய்யில் இருந்து வெளியேறும் நெடி, வாயு ஆகியவை கண் எரிச்சல், மூச்சுத் திணறலை ஏற்படுத்தி வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

நாகையில் கச்சா எண்ணெய் கடலில் கலந்து பாதிப்பு - அலுவலரை கடலில் தள்ளிவிட்டு மீனவர்கள் வாக்குவாதம்

குழாய் உடைப்பில் இருந்து வெளியேறும் கச்சா எண்ணெய் சாமந்தான் பேட்டை மீனவ கிராமம் உள்ளிட்ட பல மீனவ கிராமங்களில் கடல் பகுதி வரை பரவியுள்ளது. இதனால் கடல் நீர் மாசு ஏற்பட்டு மீன்கள், நண்டுகள் உயிரிழந்து வருகின்றன.

குழாய் உடைப்பு குறித்து தகவலறிந்த சென்னை பெட்ரோலியக் கழக அதிகாரிகள், ஓ.என்.ஜி சி அதிகாரிகள், தீயணைப்புத்துறை அதிகாரிகள் ஆகியோர் குழாய் உடைப்பு இந்த இடத்தில் பார்வையிட்டு வருகின்றனர். அதேசயம் கடலில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து மீனவளத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.  சென்னை பெட்ரோலியம் கழகம் இந்த குழாய் அமைத்தபோது, பட்டினச்சேரி மீனவக் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாது என உறுதி அளித்த நிலையில் குழாய் உடைப்பால் பாதிப்பு ஏற்பட்டு வருவதையடுத்து கிராமத்தில் அவரசக் கூட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் சம்பந்தப்பட்ட மீனவர் கிராம மக்கள் கடலுக்குச் செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர் உடனடியாக இங்கு உள்ள குழாயினை அகற்றி விட வேண்டும் எனவும் அதுவரை தங்களது போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.

நாகையில் கச்சா எண்ணெய் கடலில் கலந்து பாதிப்பு - அலுவலரை கடலில் தள்ளிவிட்டு மீனவர்கள் வாக்குவாதம்

இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான சார்லி கப்பல் 435,436 இரண்டு கப்பல் மற்றும் டோனியர் விமானம் மூலம் கடலில் எந்த அளவு எண்ணெய் படர்ந்துள்ளது என்பதை கண்காணித்து வரும் அவர்கள் தடுப்பு குறித்து ஆலோசனை  மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அங்கு வந்த சிபிசிஎல் சேஃப்டி அலுவலர் கூகுள் என்பவரை கச்சா எண்ணெய் வெளியேறும் கடற்கரையில் மீனவர்கள் தள்ளிவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு குழாயினை ஏற்பட்ட அடைப்பை பழுது நீக்கம் வந்த ஊழியர்களை தடுத்து நிறுத்தி குழாய் இப்பகுதியில் இருக்கக் கூடாது அதை நிரந்தரமாக வேறு இடத்து மாற்ற வேண்டும் என தற்போது வலியுறுத்தி வருகின்றனர். தற்போது மாவட்ட நிர்வாகம் மீனவர்களுடன் அமைதிப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட பிறகு குழாயினை அடைக்கும் பணியில் சிபிசிஎல் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி
Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Embed widget