மேலும் அறிய

டெல்டா மாவட்டங்களில் விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டைகளை கொண்டு வருவோம் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உறுதி

டெல்டா மாவட்டங்களில் விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டைகளைக் கொண்டு வருவோம்.  திருவாரூர் மாவட்டத்திற்கு விரைவில நல்ல செய்தி வரும் என்று தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.

தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டைகளைக் கொண்டு வருவோம். திருவாரூர் மாவட்டத்திற்கு விரைவில நல்ல செய்தி வரும் என்று தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.

தஞ்சை நாடாளுமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம்

இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் தஞ்சை ஜெயராம் மஹாலில் நடந்தது. தஞ்சை மத்திய மாவட்ட செயலாளரும், திருவையாறு எம்எல்ஏவான துரை. சந்திரசேகரன் வரவேற்றார். முன்னாள் எம்பிக்களும், உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர்களுமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், எல். கணேசன், தலைமை செயற்குழு உறுப்பினரும், தஞ்சாவூர் எம்எல்ஏவுமான டி.கே.ஜி நீலமேகம், திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கலைவாணன், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான அண்ணாதுரை, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விவசாயம் சார்ந்த தொழிற் பேட்டைகள் வரும்

இதில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேசியதாவது: திராவிட மாடல்ஆட்சியில் மகளிர் உரிமைத்தொகை, நான் முதல்வன் உட்பட பல திட்டங்களை செயல்படுத்தி பல மாநிலங்களுக்கு முன் உதாரணமாக முதல்வர் ஸ்டாலின் உள்ளார். தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றுள்ள எம்பி முரசொலிக்கு ஒரு கோரிக்கை. தஞ்சையில் எம்பி அலுவலகத்தை திறக்க வேண்டும். இங்கு வரும் கட்சிக்காரர்கள் மற்றும் பொதுமக்களை அமர செய்து அவர்களின் கோரிக்கைகளை பெற்று தீர்வு காண வேண்டும். தஞ்சை மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டம் என்பதால் இங்கு ஏற்கனவே சிட்கோ தொழிற்பேட்டைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பணி விரைவில் தொடங்கப்படும். கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் விவசாயம் சார்ந்த தொழில்பேட்டை விரைவில் கொண்டு வரப்படும். திருவாரூர் மாவட்டத்திற்கு விரைவில் நல்ல செய்தி வரும். இவ்வாறு அவர் பேசினார்.

23 நாட்களில் 8500 கி.மீ. பயணம்

நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது: தமிழக முதல்வர் இந்த கட்சிக்கு தலைவராக பொறுப்பேற்று தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் இந்த தேர்தலில் 23 நாட்களில் 8500 கிலோமீட்டர் பயணம் செய்து 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார். அடுத்து சட்டமன்றத் தேர்தலிலும் 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறுவோ.ம் இந்த வெற்றிக்கு காரணமான திமுக கூட்டணியில் உள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மூத்தோர் வகுத்த சீனியர் திட்டங்களை இளையோர் செயல்படுத்தியதால் இந்த வெற்றி கிடைத்துள்ளது. இந்த கொண்டாட்டம் முடிந்து விட்டது. அடுத்து நமது மக்களுக்கு நிறைய திட்டங்களை செய்ய வேண்டும் வீடு வீடாக சென்று நந்தி தெரிவிக்க வேண்டும் இது அடுத்து வரக்கூடிய 2026 தேர்தலுக்கு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்

கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு

இதில் காங்கிரஸ் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் லோகநாதன், மாநகர தலைவர் பி.ஜி.ராஜேந்திரன், திராவிடர் கழக மாநில பொதுச் செயலாளர் ஜெயக்குமார்,  மாவட்ட தலைவர் அமர் சிங், மதிமுக தஞ்சை மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன், சிபிஐஎம் தஞ்சை மாவட்ட செயலாளர் சின்னை. பாண்டியன், நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர் நீலமேகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், , சிபிஐ தெற்கு மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி, மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் பாதுஷா, திமுக மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளரும், மாநகராட்சித் துணை மேகமான அஞ்சுகம் பூபதி மற்றும் பலர் பேசினர்.

செயல்வீரர்களுக்கு நன்றி தெரிவித்து தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் சா.முரசொலி உரையாற்றினார். தஞ்சை மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான சண். ராமநாதன் நன்றி கூறினார்.

கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், து. செல்வம், மகேஷ் கிருஷ்ணசாமி, சட்டதிட்ட குழு உறுப்பினர்கள் ராஜமாணிக்கம் இறைவன், மாநில மானாமதுரை துணைச் செயலாளர் மன்னை. சோழராஜன் மற்றும் திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget