மேலும் அறிய

அரசின் மொத்த வருவாயில் 87% வணிகவரி, பதிவுத்துறையில் இருந்து வருகிறது - அமைச்சர் மூர்த்தி பெருமிதம்

தமிழகத்தில் 3 லட்சத்துக்கும் மேலாக வணிகர்களுக்கு துறைரீதியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது . அதன்பிறகு 67 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்தது.

தமிழகத்தில் மற்ற துறைகளை விட அரசுக்கு வரக்கூடிய மொத்த வருவாயில் 87 சதவீதம் வணிகவரி மற்றும் பதிவு துறையில் இருந்து வருகிறது என அமைச்சர் பி.மூர்த்தி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

திருச்சி கோட்ட வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு அலுவலர்களுடன் கலந்தாய்வுக்கூட்டம்  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வரவேற்றார். கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது: தமிழகத்தில் மற்ற துறைகளை விட அரசுக்கு வரக்கூடிய மொத்த வருவாயில் 87 சதவீதம் வணிகவரி மற்றும் பதிவு துறையில் இருந்து வருகிறது. இத்துறைகள் மூலம் பெற்றுதர கூடிய வருவாயில் முதல்வர் தமிழகத்தில் பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை செய்ய முடியும்.

வணிகவரித்துறையை பொறுத்தவரை ஜிஎஸ்டி மூலம் கிடைக்கும் வருவாயை பல மடங்கு உயர்த்த வேண்டும். தமிழகத்தில் உள்ள வணிகர்கள் நியாயமாக, நேர்மையாக வணிகம் செய்யும் போது, அந்த ஜிஎஸ்டி வரியை சிலர் போலியாக பில் மட்டுமே கொடுத்து விட்டு அரசுக்கு ஜிஎஸ்டியை செலுத்தாமல் ஏமாற்றி வருகிறார்கள்.

தமிழகத்தில் 3 லட்சத்துக்கும் மேலாக வணிகர்களுக்கு துறைரீதியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது . அதன்பிறகு 67 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்தது. கடந்த பத்தாண்டு காலத்தில் இல்லாத அளவுக்கு வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவு துறை மூலம் அரசுக்கு ஓராண்டில் வருமானம் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3 லட்சம் வணிகர்கள் இருந்த நிலையில் தற்போது 6 லட்சமாக உயர்ந்துள்ளது.

உயர் அதிகாரிகள் மட்டும் நேர்மையாக இருந்தால் போதாது. செய்யாத 2017 -ம் ஆண்டு முதல் 2021 ம் ஆண்டு வரை லோக் ஆயுக்தா கமிட்டி மூலம் தமிழகத்தில் 6 லட்சம் கோடிக்கு மேலாக ஊழல் நடந்ததாக தெரியவந்துள்ளது உண்மை. ஆனால் எந்த காலத்தில், யாரால், எங்கு நடந்தது என தெரிவிக்காமல், தற்போது திமுக ஆட்சி காலத்தில் நடந்தது போல கூறுகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பள்ளிக்கரணை சதுப்புநில பகுதிகளில் பலஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எந்தந்த துறையினர் சம்மந்தப்பட்டுள்ளார்கள் என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அரசின் மொத்த வருவாயில் 87% வணிகவரி, பதிவுத்துறையில் இருந்து வருகிறது - அமைச்சர் மூர்த்தி பெருமிதம்
முதல்வரின் ஆக்கப்பூரமான செயல்களால் வணிகவரி மற்றும் பதிவுத்துறை மூலம் 1.50 லட்சம் கோடி வருவாயை பெற்று தர வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆட்சிகள் மாறலாம், ஆனால் அதிகாரிகள் அப்படியே உள்ளவர்கள். அதிகாரிகள் நேர்மையாக இருக்க வேண்டும். அப்படி அதிகாரிகள் தவறும் செய்யும் பட்சத்தில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

பதிவுத்துறை சட்டம் 1908 சட்ட திருத்தம் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் ஒப்புதல் கிடைத்து விடும். அதன் பிறகு போலியாக பத்திரவு பதிவு செய்தால் 3 முதல் 7 ஆண்டு சிறைத்தண்டனை கிடைக்கும். அதன்படி ஆவணத்தை எழுதுபவார்கள், அதற்கு சாட்சியாக போககூடியவர்கள் என அனைவருக்கும் தண்டனை. போலியாக பத்திரவு பதிவு செய்யப்பட்டது ரத்து செய்யப்படும்.

தமிழகத்தில் 50 இடங்களில் பழமையான பதிவுத்துறை அலுவலகங்களுக்கு புதிய கட்டிடம் கட்டவும், புதிதாக பிரிக்கப்பட்ட தாலுகாவுக்கு 29 அலுவலகங்களில் புதிதாக கட்டிடங்கள் கட்டவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் காலியாக உள்ள பத்திரவுபதிவு அலுவலர்கள் பணியிடங்களில் கூடிய விரைவில் நிரப்பப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், சாக்கோட்டை அன்பழகன், அண்ணாதுரை, அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா, சீர்காழி பன்னீர்செல்வம், தாட்கோ தலைவர் உ.மதிவாணன் மற்றும் வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை அதிகாரிகள் ஜோதிநிர்மலா சாமி, தீரஜ்குமார், ம.ப.சிவன்அருள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்கடுப்பேற்றிய நிர்வாகிகள்! கிளம்பிய தமிழிசை,வானதி! ஆபரேஷன் அதிமுகSathyaraj About TVK : ”தவெக - வில் பதவி கொடுங்க” ரூட் மாறும் சத்யராஜ்! கடுப்பில் திமுக?Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை..  டிராபிக் குறையுமா?
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை.. செம்ம அப்டேட்டா இருக்கே!
நான் சொல்வதை கேளுங்க! விஜய்க்கு புரட்சித்தலைவரின் குணம்! - செல்லூர் ராஜு
நான் சொல்வதை கேளுங்க! விஜய்க்கு புரட்சித்தலைவரின் குணம்! - செல்லூர் ராஜு
களமிறக்கப்பட்ட 10,000 ராணுவ வீரர்கள்.. மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்!
களமிறக்கப்பட்ட 10,000 ராணுவ வீரர்கள்.. மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! அடுத்த 7 நாட்களுக்கு கனமழை இருக்கு.!மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.!அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெறும் மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
Embed widget