மேலும் அறிய

“எருமை மாடா நீ...” உதவியாளரை ஒருமையில் திட்டிய திமுக மூத்த அமைச்சர்

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மைக் முன்பு வந்தவுடன் தான் பேசுவதற்கான குறிப்பு பேப்பர் இல்லாததால் எங்கய்யா போனான் அவன். பரசுராமன் எங்கே?  என்று கேட்டார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் நிஃப்டெம்மில் இன்று 3ம் தேதி வேளாண்மை, உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சி தொடக்க விழா நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தனது உதவியாளரை எருமை மாடா நீ என ஒருமையில் பேசியது அனைத்து தரப்பினரையும் முகம் சுளிக்க வைத்தது.

தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் (நிஃப்டெம்மில்) ஆகியவை இணைந்து இன்று 3, 4 ஆகிய இரு நாட்களும் வேளாண்மை, உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சியை நடத்துகின்றன.

டெல்டா மாவட்டங்களின் விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்துதல் சார்ந்த வணிக சாத்தியக்கூறுகளை மேம்படுத்தும் வகையில், அசோசியேட்டட் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் மற்றும் இன்டஸ்ட்ரி ஆஃப் இந்தியா (ASSOCHAM), தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம்(NIFTEM-T), தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் (TNAPEX), மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் (MoFP1) ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து 'வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சி 2025" நிகழ்ச்சியை தஞ்சாவூர் நிஃப்டெம்  நிறுவன வளாகத்தில் இன்று ஜன. 3 மற்றும் 4ம் தேதிகளில் நடத்துகிறது.

“எருமை மாடா நீ...”  உதவியாளரை ஒருமையில் திட்டிய திமுக மூத்த அமைச்சர்

இந்த மாநாட்டில், அரசு, தொழில், விவசாயம் மற்றும் கல்வித்துறையைச் சேர்ந்த முக்கிய வல்லுநர்கள் பங்குகொண்டு, உணவு பதப்படுத்துதலில் தொழில்நுட்ப வளர்ச்சி, ஸ்டார்ட்-அப்களை செயல்படுத்துதல், திறன் மேம்பாடு வேலைவாய்ப்பு உருவாக்கம். சந்தை மற்றும் ஏற்றுமதி மேம்பாடு, திட்டமிடல் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் ஆகியவற்றை குறித்து விவாதிக்கின்றனர்.

தமிழ்நாட்டுக்கான வேளாண் தொழில்துறை மற்றும் விவசாய-உணவு சார் தொழில்துறை நிறுவனங்கள், மேம்படுத்த நிதியளித்தல் உட்பட பல தலைப்புகளில் குழு விவாதங்கள் நடைப்பெற உள்ளன. இரண்டு நாள் நடக்கும் இந்த  கண்காட்சியில் சுமார் 10,000 பார்வையாளர்கள், 700 முதல் 1,000 விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் சுமார் 300 உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்கள், வேளாண் தொழில்துறை இயந்திர உற்பத்தியாளர்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSMEs) பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கண்காட்சியில் 300க்கும் மேற்பட்ட உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் பிற தொடர்புடைய துறைகளை காட்சிப்படுத்தும் ஸ்டால்கள் இடம்பெறவுள்ளது. நிஃப்டெம்மில் உருவாக்கப்பட்ட வெற்றிகரமான கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள் மற்றும் இயந்திரங்களின் செயல்விளக்கமும் இடம்பெறவுள்ளது. இதன் தொடக்க விழாவில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், டி.ஆர்.பி.ராஜா, தஞ்சாவூர் எம்.பி., . ச.முரசொலி, எம்எல்ஏக்கள் திருவையாறு துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் டி.கே.ஜி. நீலமேகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசுவதற்காக எழுந்து வந்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மைக் முன்பு வந்தவுடன் தான் பேசுவதற்கான குறிப்பு பேப்பர் இல்லாததால் எங்கய்யா போனான் அவன். பரசுராமன் எங்கே?  என்று கேட்டார். வேக, வேகமாக ஓடி வந்த உதவியாளரை பார்த்து எருமை மாடா நீ ? பேப்பர் எங்கே என ஒருமையில் திட்டினார். பின்னர் பேப்பரை வாங்கி அதை அப்படியே தன் உதவியாளர் மீது விசிறி அடித்தார். அந்த பேப்பரையும் உதவியாளர் எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தார். விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் மூத்த அமைச்சரின் இந்த கண்ணியக்குறைவான பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது. பார்வையாளர்கள் பலரும் முகத்தை சுளித்தனர். விழாவிற்கு பின்னர் அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மகளிர்களுக்கு மாதந்தோறும் உரிமை தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை மற்ற மாநிலங்களும் பின்பற்றும் அளவிற்கு திராவிட மாடல் ஆட்சி நடந்து வருகிறது .

வடிகால் வாய்க்கால், கால்வாய்களில்  தூர்வாரும் பணிகளை முதலமைச்சரே நேரடியாக ஆய்வு செய்தார். இதனால் மழை, புயலால் பயிர்களின் பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் பயிர்கள் பாதிப்புக்காக ரூ.1023 கோடி அளவிற்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது பெய்த மழை புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கீடு செய்யும் பணி நடந்து வருகிறது. தற்போது பெய்த மழையில் நடவு செய்யப்பட்ட வயல்களில் இளம் பயிர்கள் பாதிப்பு, நெல் பயிர்கள் அழுகி பாதிப்பு போன்று 4 வகையான அளவில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது . அதற்கு ஏற்ப நிவாரணம் வழங்கப்படும். 

மத்திய அரசு நாம் கேட்ட நிவாரணத்தை வழங்கவில்லை. இருந்தாலும் தமிழக அரசே நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது . அமைச்சர் துரைமுருகன் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது . நாம் பாதிப்புக்கு நிதி கேட்டால் அதற்கு மத்திய அரசு இதுபோல் ரெய்டு நடத்தி நெருக்கடி கொடுக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Embed widget