மயிலாடுதுறை : தெர்மாகோலை தலையில் அணிந்து ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்
மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் தலையில் தெர்மாகோல் மாட்டி வந்து நூதன போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தெர்மாகோல் என்றால் முன்னாள் அமைச்சரை ஒருவரை நினைவு கூறும் நிலையில், மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ஒருவர் அவருக்கு போட்டி கொடுக்கும் வகையில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தனது எதிர்ப்பை பதிவு செய்த விதம் அனைவரையும் திரும்பிப்பார்க்க செய்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தின் ஒன்றியக் குழுக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திமுகவைச் சேர்ந்த காமாட்சி மூர்த்தி தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டாவது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் வடவீரபாண்டியன் என்பவர், தலையில் தெர்மாகோல் அட்டையை மாட்டிக்கொண்டும், கழுத்தில் தனது பெயரை தெர்மாகோல் அட்டையில் எழுதி தொங்கவிட்டுக் கொண்டும் ஒன்றியக்குழு கூட்டத்தில் பங்கேற்ற சம்பவம் அரங்கேறியது.
இது குறித்து தெர்மாகோல் மாட்டி வந்த இரண்டாவது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் வடவீரபாண்டியன் கூறுகையில், ஊராட்சி ஒன்றியம் கடும் நிதி நெருக்கடியில் தள்ளாடி வரும் நிலையில் தலைவர் மற்றும் ஒன்றிய ஆணையர்கள் அலுவலக அறைகள் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு உள்ளதாகவும், ஊராட்சி ஒன்றிய பொது நிதியை விரயம் செய்யாமல் தன் வார்டுக்கு சாலை வசதி, உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும், கிராமங்களுக்கு தேவையான குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய பயன்படுத்தலாம் என்றும், ஒன்றிய அலுவலக பலகையில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பெயர்களை இதுவரை எழுதவில்லை என்றும் அதற்காக எதிர்ப்பு தெரிவித்தும் நூதன முறையில் கூட்டத்தில் கலந்து கொண்டதாக வடவீரபாண்டியன் தெரிவித்தார். இச்சம்பவம் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடைசி இந்தியவரை மீட்டு, தாயகம் அனுப்பும்வரை நான் இங்கிருந்து வெளியேற மாட்டேன் - கிரண் ரிஜிஜூ
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் போதும், பாக்கெட் பிரச்சாரம் செய்யும் வித்யாசமான முறைகளை கையாண்டு பலரது கவனத்தையும் தன் பக்கம் இழுப்பார்கள். மயிலாடுதுறையில் அதையும் கடந்து தேர்தலில் வெற்றி பெற்று பதவி பெற்ற பின்னர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தனது கோரிக்கைகளையும், எதிர்ப்பையும் பயன்படுத்த தெர்மாகோலை தலையிலையும், கழுத்திலும் மாட்டிக் கொண்டும் பதிவு செய்த விதம் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.