![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
வைத்தீஸ்வரன் கோயிலுக்கு பலநூறு கி.மீ பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்திய நகரத்தார்
தாங்கள் வேண்டுகளுக்காகவும் வழிநடைக்கு துணையாகவும் கொண்டு வந்த மஞ்சள் தடவிய வேப்பிலை கட்டிய குச்சியினை வேண்டுதல் நிறைவேறியதற்கு காணிக்கையாக கோயில் கொடிமரத்தில் செலுத்தினர்
![வைத்தீஸ்வரன் கோயிலுக்கு பலநூறு கி.மீ பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்திய நகரத்தார் Mayiladuthurai: The Nagarathar who walked to the Vaitheeswaran temple and paid their dues வைத்தீஸ்வரன் கோயிலுக்கு பலநூறு கி.மீ பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்திய நகரத்தார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/26/46520836e04ecfce382d7649e9e5b7c4_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நவ கிரகங்களில், செவ்வாய் பகவான், செல்வ முத்துக்குமார சுவாமி, சித்த மருத்துவத்தின் மூலவரான தன்வந்திரி சித்தர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
மேலும், இங்கு வரும் பக்தர்களின் நோய்களைப் போக்கும் ஐதீகம் கொண்ட மூலவர் வைத்தியநாத சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு நோய் தீர்த்து வருகிறார். இந்தகோவிலில் அமைந்துள்ள தீர்த்த குளத்தில் நீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டு கோவிலில் வழங்கப்படும் பிரசாதமான திருச்சாந்துருண்டையை உட்கொண்டால் 4448 வகையான வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம்.இத்தகைய சிறப்பு வாய்ந்தஇக்கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் இரண்டாவது செவ்வாய்கிழமை குலதெய்வ வழிபாடு நடத்துவதற்காக, காரைக்குடி, கந்தர்வகோட்டை, சிவகங்கை, பரமகுடி, மானாமதுரை, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பல நூறு கிலோமீட்டர் பாதயாத்திரையாக வைத்தீஸ்வரன்கோயிலுக்கு வருவது வழக்கம்.
தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கா? - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம்
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்றால் வழிபாடு தடைபட்டிருந்த நிலையில் இந்தாண்டு திரளான மக்கள் வழிபாடு செய்ய வைத்தீஸ்வரன் கோயில் திரண்டுள்ளனர். நகரத்தார் மக்கள் கிராமம் கிராமமாக சித்திரை மாதம் முதல் செவ்வாய் கிழமை விரதம் இருந்து புறப்படுட்டு இரண்டாவது செவ்வாய் கிழமை இங்கு வந்து சேர்கின்றனர். குலதெய்வ வழிபாடாகவும், அதே சமயம் ஸ்ரீ தையல்நாயகி அம்மன் தங்கள் ஊர் பெண் என்ற ஐதீகத்தின்படி மக்கள் சீர்வரிசையை கூண்டு வண்டிகளில் ஏற்றியும், நடைபயனமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
இந்த ஆண்டும் பாதயாத்திரையாக சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பங்கேற்று தையல்நாயகி அம்மனை தரிசனம் செய்தனர். தாங்கள் வேண்டுகளுக்காகவும் வழிநடைக்கு துணையாகவும் கொண்டு வந்த மஞ்சள் தடவிய வேப்பிலை கட்டிய குச்சியினை வேண்டுதல் நிறைவேறியதற்கு காணிக்கையாக கோயில் கொடிமரத்தில் செலுத்தினர். மீண்டும் மறு வேண்டுதல் நிறைவேற அங்கிருந்து ஒரு குச்சியை தங்கள் வீடுகளுக்கு கொண்டு செல்கின்றனர். திருவிழாவை முன்னிட்டு 2000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்கள் வசதிக்காக சீர்காழி, மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 250 சிறப்பு பேருந்துகள் இயக்கபட்டு வருகிறது.
கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் இனி அரசு விழா.. ஓமந்தூராரில் சிலை - முதல்வர் பேரவையில் அறிவிப்பு
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)