மேலும் அறிய

தமிழ்நாடு முதலமைச்சர் குறித்த மக்களின் எண்ணம் ஈரோடு இடைத்தேர்தலில் எதிரொலித்துள்ளது - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

தமிழ்நாடு முதலமைச்சர் குறித்த மக்களின் எண்ணம் ஈரோடு இடைத்தேர்தலில் எதிரொலித்துள்ளது என மயிலாடுதுறையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

2023-24 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை மார்ச் 20 ஆம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என சட்டசபை சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யும் மூன்றாவது நிதிநிலை அறிக்கையாகும். தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 20 ஆம் காலை 10 மணிக்கு தொடங்குகிறது. கூட்டம் தொடங்கியதும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வாசிக்க உள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் குறித்த மக்களின் எண்ணம் ஈரோடு இடைத்தேர்தலில் எதிரொலித்துள்ளது - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

இந்நிலையில் திமுக தேர்தல் அறிக்கையின்படி வேளாண் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளாக தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல், இந்த ஆண்டும் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. பெரும்பாலும் மார்ச் 21ஆம் தேதி தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது. இதை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். இதில் விவசாயிகளுக்கு பல்வேறு அறிவிப்புகள் மற்றும் சலுகைகளும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் குறித்த மக்களின் எண்ணம் ஈரோடு இடைத்தேர்தலில் எதிரொலித்துள்ளது - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நாககுடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுப்படி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் 2023- 2024 ஆம் ஆண்டுக்கான தனி நிதிநிலை அறிக்கை தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ மெய்யநாதன், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயளர் சமயமூர்த்தி, வேளாண்மை உழவர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை, சர்க்கரை துறை முதன்மை செயலாளர் விஜயராஜ்குமார் உள்ளிட்ட வேளாண் துறையைச் சேர்ந்த பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். 

தமிழ்நாடு முதலமைச்சர் குறித்த மக்களின் எண்ணம் ஈரோடு இடைத்தேர்தலில் எதிரொலித்துள்ளது - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

இக்கூட்டத்தில் மயிலாடுதுறை நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், அரியலூர் ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று தங்கள் கருத்துக்களையும், விவசாயிகளுக்கு தேவையான தொழில்துறை வசதிகளையும் தங்கள் குறைகளையும் கூறி தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, தஞ்சாவூர் மாநிலங்களவை உறுப்பினர் கல்யாண சுந்தரம், மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ராமலிங்கம், மயிலாடுதுறை, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இந்த கருப்பு கேட்ப கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் குறித்த மக்களின் எண்ணம் ஈரோடு இடைத்தேர்தலில் எதிரொலித்துள்ளது - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

அதனைத் தொடர்ந்து கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கூறியதாவது: விவசாயிகளின் கருத்துக்களை கேட்டறிந்து அதற்கேற்ற பட்ஜெட்டை உருவாக்க வேண்டும் என்ற தமிழ்நாடு முதல்வரின் ஆணையின்படி மயிலாடுதுறை நாகை, திருவாரூர் தஞ்சாவூர், கடலூர், அரியலூர் ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டுள்ளது. விவசாயிகள் மத்தியில் தமிழ்நாடு முதலமைச்சர் குறித்து நல்ல எண்ணம், ஆதரவு உள்ளது. இந்த ஆதரவு தற்போது நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவில் எதிரொலித்துள்ளது. தமிழக முதலமைச்சர் விவசாயத்தில் காட்டும் ஆர்வம் காரணமாக நெல் உற்பத்தியில் 40 ஆண்டு வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளது என்றார். அப்போது, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் குறித்த மக்களின் எண்ணம் ஈரோடு இடைத்தேர்தலில் எதிரொலித்துள்ளது - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

மேலும் கருத்து கேட்டு கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகளில் பலரை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நீ,வா, போ என ஒருமையில் பேசிய நிலையில், விவசாயி ஒருவர் விவசாயிகளை கூப்பிட்டு வைத்து அவமானம் படுத்தி விட்டீர்களா என கேட்டுவிட்டு கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினார். இதனால் சிறிது நேரம் கூட்ட அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Veera Dheera Sooran Release: ரசிகர்கள் தலையில் இடி! வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் தடை
Veera Dheera Sooran Release: ரசிகர்கள் தலையில் இடி! வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் தடை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Udhayanidhi : ஜனநாயகன் vs பராசக்தி விஜய்யுடன் மோதும் உதயநிதி! அரசியல் ஆயுதமான சினிமாEPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMKEPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Veera Dheera Sooran Release: ரசிகர்கள் தலையில் இடி! வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் தடை
Veera Dheera Sooran Release: ரசிகர்கள் தலையில் இடி! வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் தடை
ஹோட்டலில் திடீரென கத்தியை எடுத்து தாக்க முயன்ற நபர்! பரபரப்பை கிளப்பும் சிசிடிவி காட்சிகள்!
ஹோட்டலில் திடீரென கத்தியை எடுத்து தாக்க முயன்ற நபர்! பரபரப்பை கிளப்பும் சிசிடிவி காட்சிகள்!
'நீ போ, நான் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறேன்': காதலனுடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்!
'நீ போ, நான் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறேன்': காதலனுடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்!
Singappenne: சிங்கப்பெண்ண அசிங்கப்பெண் ஆக்கிட்டீங்களே.!! சன் டிவிக்கு எதிராக குமுறும் தாய்க்குலங்கள்...
சிங்கப்பெண்ண அசிங்கப்பெண் ஆக்கிட்டீங்களே.!! சன் டிவிக்கு எதிராக குமுறும் தாய்க்குலங்கள்...
ஓபிஎஸ்க்கு தகுதி இல்லை; திமுகதான் எதிரி; அப்போ பாஜக? –இபிஎஸ் போடும் கணக்கு! டெல்லியில் நடந்தது என்ன?
ஓபிஎஸ்க்கு தகுதி இல்லை; திமுகதான் எதிரி; அப்போ பாஜக? –இபிஎஸ் போடும் கணக்கு! டெல்லியில் நடந்தது என்ன?
Embed widget