மேலும் அறிய

மயிலாடுதுறை: பூம்புகார் கடலில் தொடரும் உயிரிழப்புகள்! 11-ஆம் வகுப்பு மாணவன் கடலில் மூழ்கி உயிரிழப்பு..!

பூம்புகார் கடலில் குளிக்கச்சென்ற 11-ஆம் வகுப்பு மாணவன் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் நெய்வாசல் கிராமத்தை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் 11ம் வகுப்பு படிக்கும் ஆதித்யன் வயது 16  மற்றும் உறவினர்கள் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பூம்புகார் கடற்கரைக்கு பொழுதுபோக்கிற்காக சென்றுள்ளனர். அப்போது உறவினர்களுடன் கடலில் குளித்துக் கொண்டிருந்த ஆதித்யன் கடல் தீடீரென ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கி காணாமல் போயுள்ளார். இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த ஆதித்யனின் உறவினர்கள் உடனடியாக இது குறித்து பூம்புகார் காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். அதனையடுத்து கடலோர காவல் படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கடலோர காவல் படையினர், மற்றும் தீயணைப்புத் துறையினர் அப்பகுதி மீனவர்கள் உதவியுடன் கடலில் மாயமான மாணவனின் உடலை தேட தொடங்கினர். 

மயிலாடுதுறை: பூம்புகார் கடலில் தொடரும் உயிரிழப்புகள்! 11-ஆம் வகுப்பு மாணவன் கடலில் மூழ்கி உயிரிழப்பு..!

இந்நிலையில் மாணவன் உடல் நீண்ட நேரம் தேடியும் கிடைக்காததால்.  தொடர்ந்து இரண்டாவது நாளாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது மாணவன் ஆதித்யன் உடல் பூம்புகார் கடற்கரையோரம் கொட்டி வைத்துள்ள கருங்கற்கள் இடையில்  சிக்கியுள்ளதை கண்டுபிடித்தனர். அதனைத் தொடர்ந்து நீண்ட நேரம் போராடி கடலோர காவல்படையினர் மற்றும் தீயணைப்பு படையினர்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை: பூம்புகார் கடலில் தொடரும் உயிரிழப்புகள்! 11-ஆம் வகுப்பு மாணவன் கடலில் மூழ்கி உயிரிழப்பு..!

தமிழ்நாட்டில் உள்ள மாமல்லபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட கடற்கரைகள் போன்று பூம்புகார் கடற்கரையும் பிரசித்தி பெற்ற ஒன்று. சிலப்பதிகாரம் பெயர் பெற்ற பூம்புகார் கடற்கரையில் இந்திர விழா உள்ளிட்ட வரலாற்று பிரசித்தி பெற்ற நிகழ்வுகள் நடைபெற்ற  இடம் என்பதால் இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் கோவலன் கண்ணகியின் வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில் இங்கு வந்து செல்கின்றனர். அதுமட்டுமின்றி மாவட்டத்திலுள்ள மக்கள் தங்களின் பொழுதுபோக்கு இடமாக பூம்புகார் கடற்கரை திகழ்ந்து வருகிறது. 

மயிலாடுதுறை: பூம்புகார் கடலில் தொடரும் உயிரிழப்புகள்! 11-ஆம் வகுப்பு மாணவன் கடலில் மூழ்கி உயிரிழப்பு..!

இந்த சூழலில் கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆர்வமிகுதியால் விபரீதம் அறியாமல் கடலில் இறங்கி குளிக்கின்றனர். இதனால் கடல் சீற்றம் காரணமாக இயலும் ராட்சத அலைகள் சிக்கி பலரும் இறப்பது, தொடர்கதையாக இருந்து வருகிறது. குறிப்பாக மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், அரியலூர் உள்ளிட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிக அளவு கடற்கரைக்கு படை எடுப்பதும் கடலில் குளித்து கடல் அலையில் சிக்கி உயிரிழப்பதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்த உயிரிழப்புகளை தடுக்க அரசு கூடுதல் கவனம் செலுத்தி கடற்கரை பகுதிகளில் காவலர்களை நியமித்து பள்ளி,கல்லூரி மாணவர்கள்கடலில் இறங்கி குளிப்பதை கண்காணிக்க வேண்டும் எனவும், தற்போது உள்ள கடலோர காவல்துறை விடுமுறை நாட்களிலாவது பூம்புகார் கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

என்ன நடக்குது? ஒரே நாளில் ஆசிரியை, வழக்கறிஞர் கொடூர கொலை! ஆளுங்கட்சிக்கு பெரும் தலைவலி!

Teacher Death: அரசு இடங்களில்கூட பாதுகாப்பு துளியும் இல்லை: தஞ்சை ஆசிரியை கொலைக்கு ஈபிஎஸ் கண்டனம்

அநீதி; தஞ்சை அரசுப்பள்ளியில் ஆசிரியை குத்திக்கொலை- பாடம் நடத்தும்போது நேர்ந்த துயரம்- அதிர்ச்சிப் பின்னணி!

CBSE Boards 2025: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சிபிஎஸ்இ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
CBSE Boards 2025: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சிபிஎஸ்இ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

AR Rahman on Divorce : ”இப்படி பண்ணிட்டியே சாய்ரா..சுக்குநூறா உடைஞ்சுட்டேன்” மனம் திறந்த AR.ரஹமான்AR Rahman Saira Divorce Reason : ”வலியும், வேதனையும் அதிகம்”ஏ.ஆர் - சாய்ரா பகீர்!BJP Controversy Video |’’நாங்க ஆட்சிக்கு வரலனா..உங்கள சூறையாடிருவாங்க!’’பாஜக மதவெறி வீடியோGym Master Death | காதில் ரத்தம்..பாத்ரூமில் சடலம்..ஜிம் உரிமையாளர் திடீர் மரணம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
என்ன நடக்குது? ஒரே நாளில் ஆசிரியை, வழக்கறிஞர் கொடூர கொலை! ஆளுங்கட்சிக்கு பெரும் தலைவலி!
என்ன நடக்குது? ஒரே நாளில் ஆசிரியை, வழக்கறிஞர் கொடூர கொலை! ஆளுங்கட்சிக்கு பெரும் தலைவலி!
Teacher Death: அரசு இடங்களில்கூட பாதுகாப்பு துளியும் இல்லை: தஞ்சை ஆசிரியை கொலைக்கு ஈபிஎஸ் கண்டனம்
Teacher Death: அரசு இடங்களில்கூட பாதுகாப்பு துளியும் இல்லை: தஞ்சை ஆசிரியை கொலைக்கு ஈபிஎஸ் கண்டனம்
அநீதி; தஞ்சை அரசுப்பள்ளியில் ஆசிரியை குத்திக்கொலை- பாடம் நடத்தும்போது நேர்ந்த துயரம்- அதிர்ச்சிப் பின்னணி!
அநீதி; தஞ்சை அரசுப்பள்ளியில் ஆசிரியை குத்திக்கொலை- பாடம் நடத்தும்போது நேர்ந்த துயரம்- அதிர்ச்சிப் பின்னணி!
CBSE Boards 2025: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சிபிஎஸ்இ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
CBSE Boards 2025: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சிபிஎஸ்இ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபர் கைது: பின்னணி என்ன?

இலங்கை அரசின் தொடரும் சதி; தமிழக மீனவர்களை காப்பாற்றுமா தி.மு.க. அரசு?

நடுவானில் வந்த மாரடைப்பு! 2 ஆண்டுகளுக்கு பிறகு வீட்டுக்கு வந்த பெண் மரணம் - சோகத்தில் கள்ளக்குறிச்சி

AR Rahman Divorce: டைவர்ஸ்க்குனு தனி APP! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விவாகரத்து வாங்கித் தந்த வழக்கறிஞர் யாரு தெரியுமா?

Embed widget