(Source: ECI/ABP News/ABP Majha)
போடாத சாலைக்கு பராமரிப்பு கணக்கு காட்டிய ஒப்பந்ததாரர்கள் - ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை
’’போடாத சாலைக்கு பராமரிப்பு செய்ததாக லட்ச கணக்கில் அதிமுக ஒன்றிய செயலாளர், தனது அண்ணண் பற்குணன் பெயரில் சாலை ஒப்பந்தம் பெற்று முறைகேடு’’
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வேட்டங்குடி ஊராட்சியில் பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் வேட்டங்குடி இருந்து கூழையார் வரை சாலைகளை மேம்படுத்த ரூபாய் 4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 21 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் தேதி சாலை போடும் பணி துவங்கியுள்ளனர். ஆனால் சுமார் ஒன்றரை ஆண்டுகள் கழிந்து தற்போதுதான் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாலை போடும் பணியை நிறைவு முழுமையாக நிறைவு செய்துள்ளனர்.
இதில் சாலை முழுமையாக தற்போதுதான் போடப்பட்ட நிலையில், போடாத சாலைக்கு பராமரிப்பு செய்ததாக லட்ச கணக்கில் அதிமுக ஒன்றிய செயலாளர், தனது அண்ணண் பற்குணன் பெயரில் சாலை ஒப்பந்தம் பெற்று முறைகேடு செய்துள்ளதாக அக்கிராம மக்கள் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர். மேலும் அதற்கு ஆதாரமாக சாலை பராமரிப்பு பணி செய்ததாக அதற்கு அறிவிப்பு பலகையும் அப்பகுதியில் வைத்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ள கிராம மக்கள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், வேட்டங்குடி ஊராட்சியில் குடியிருப்புகளுக்கு அருகாமையில் சவுடு மண் குவாரி அமைய உள்ளதை நிறுத்த கோரி, கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
அரவக்குறிச்சி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் காவல்துறைக்கு என தனியாக மண்டகப்படி.. நூதன திருவிழா.
ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து திடீரென கிராம மக்கள் மற்றும் தமிழ்மக்கள் அதிகாரம் இயக்கத்தினர் ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு தங்களது கிராமத்தில் உள்ள பொக்லைன் இயந்திரம் மற்றும் டிராக்டர்களுடன் பேரணியாக புறப்பட்டு சென்று, வேட்டங்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சாதி கயிறு கட்டுவதில் பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல் - சிகிச்சை பெற்ற மாணவர் உயிரிழப்பு
அப்போது கிராம குடியிருப்பு பகுதியில் சவுடு மண் குவாரிக்கு அனுமதி வழங்கக்கூடாது மற்றும் சம்பந்தப்பட்ட சாலையை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வெள்ளகுளம், வேட்டங்குடி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர். இந்நிலையில் திடீரென கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்த நிகழ்வு அப்பகுதி பரபரப்பை ஏற்படுத்தியது