மேலும் அறிய

சாதி கயிறு கட்டுவதில் பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல் - சிகிச்சை பெற்ற மாணவர் உயிரிழப்பு

”பள்ளியில் மதிய வேளையில் சாதிக்கயிறு கட்டியிருப்பது தொடர்பாக இரு தரப்பு மாணவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கோஷ்டி மோதலாக மாறியதால் பரபரப்பு”

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே பாப்பாக்குடி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (48). விவசாயி. இவரது மனைவி உச்சிமாகாளி (42). இவர்களுக்கு செல்வசூர்யா (17) என்ற மகனும், பவித்ரா (15) என்ற மகளும் உள்ளனர். செல்வசூர்யா இடைகாலை அடுத்த பள்ளக்கால் புதுக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். அதே பள்ளியில் செல்வசூர்யாவின் சகோதரி பவித்ராவும் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி  மதிய வேளையில் அதே பள்ளியில் படிக்கும் 3 மாணவர்கள் செல்வ சூர்யாவின் நண்பர்கள் கையில் கயிறு கட்டியிருப்பது தொடர்பாக பிரச்சினை செய்து உள்ளனர். அதனை பார்த்த செல்வ சூர்யா பிரச்சினை வேண்டாம் என தடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது மாணவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

சாதி கயிறு கட்டுவதில் பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல் - சிகிச்சை பெற்ற மாணவர் உயிரிழப்பு

அப்போது செல்வ சூர்யாவுக்கு ஆதரவாக இரண்டு மாணவர்களும், பிளஸ் 1 மாணவருக்கு ஆதரவாக அதே வகுப்பில் படிக்கும் பள்ளக்கால் புதுக்குடி பகுதியைச் சேர்ந்த 2 மாணவர்களுக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி உள்ளனர். இதில் கீழே கிடந்த கல்லை எடுத்து செல்வசூர்யாவை எதிர்தரப்பு மாணவர்கள் தாக்கியதாக தெரிகிறது. அப்போது இடது பக்க காதில் காயம் ஏற்பட்டு பலத்த ரத்தம் கொட்டி உள்ளது. இதனை பார்த்த பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களிடையே சமரசம் ஏற்படுத்தி அனுப்பி வைத்து உள்ளனர், செல்வ சூர்யா இரத்த காயத்துடன் வீட்டிற்கு சென்று உள்ளார். நடந்த தகவலை பெற்றோரிடம் சொல்லிய நிலையில் செல்வசூர்யாவை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்று உள்ளனர், அங்கு உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு செல்வ சூர்யா சிகிச்சை பெற்று வந்தார்.

சாதி கயிறு கட்டுவதில் பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல் - சிகிச்சை பெற்ற மாணவர் உயிரிழப்பு

மேலும் மாணவர்கள் இடையே மோதல் நடந்தது குறித்து தகவல் அறிந்த பாப்பாகுடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். செல்வசூர்யாவின் தாய் உச்சிமாகாளி அளித்த புகாரின் பேரில் மூன்று பிளஸ் 1 மாணவர்கள் மீது 294 (b), 324, 506 (2) ஆகிய 3  பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி முதல் பாளையங்கோட்டை அரசு மருத்துவானையில் சிகிச்சை பெற்று வந்த மாணவர் செல்வசூர்யா இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செல்வசூர்யா உயிரிழந்ததால், ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்த மூன்று பிரிவுகளில் 294 (b) என்ற பிரிவை மாணவர் கொலை செய்யப்பட்டதால் 302 என கொலை வழக்காக பதிவு செய்து, கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 3 மாணவர்களையும் தேடி வருகின்றனர்.

சாதி கயிறு கட்டுவதில் பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல் - சிகிச்சை பெற்ற மாணவர் உயிரிழப்பு

சாதி ரீதியான மோதலை தடுக்க மாணவர்களுக்கிடையே காவல்துறையினர் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர், அதோடு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சாதி அடையாள கயிறை கட்டக்கூடாது எனவும் அறிவுரைகளும் வழங்கப்பட்டு வருகிறது, இருப்பினும் இந்த சம்பவத்தால் மாணவர் ஒருவர் உயிரிழந்திருப்பது பள்ளி நிர்வாகத்தின் அலட்சிய போக்கையே காட்டுகிறது, சாதி கயிறை கட்டிக்கொண்டு பள்ளிக்கு மாணவர்கள் பள்ளி வருவதை பள்ளி நிர்வாகம் கண்டித்திருந்தால் இந்த உயிரிழப்பை தடுத்திருக்க முடியும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது. 

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget