மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழா - அரசின் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறிய திமுகவினர்
குத்தாலம் ஒன்றியம் மாந்தை ஊராட்சியில் அதிமுக கட்சியில் இருந்து விலகி 200-க்கும் மேற்பட்டவர்கள் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா.முருகன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
தமிழ்நாட்டின் கடந்த சில ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்துவந்த உள்ளாட்சி தேர்தல் முதல் கட்டமாக கிராம ஊராட்சிகளுக்கு நடைபெற்று முடிந்தது. அதனை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெறும் என பலரும் ஆர்வமுடன் காத்திருந்தனர். இந்த சூழலில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. மேலும் தேர்தலுக்கான தேதிகளும் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் வெற்றிக்கான வியூகங்களை வகுக்க தொடங்கி உள்ளன.
பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தில் 500 கோடி ஊழல் - எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் குற்றச்சாட்டு
மேலும், கொரோனா பாதிப்பும் பிப்ரவரி மாதம் குறையலாம் எனச் சென்னை ஐஐடி ஆய்வுக்குழு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர். இதனால் பிப்ரவரி பிற்பகுதியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறலாம் எனக் கூறப்படுகிறது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் தேர்தல் தொடர்பான அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் வெளியிடும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குத்தாலம் ஒன்றியம் மாந்தை ஊராட்சியில் அதிமுகவினர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணையும் நிகழ்வு நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் குத்தாலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர் தலைமையில் 200 பேர் அதிமுகவில் இருந்து விலகி நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா.முருகன் முன்னிலையில் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாநில திமுக கொள்கை பரப்பு துணை செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான க.அன்பழகன் ஒன்றிய பெருந்தலைவர்கள் மகேந்திரன், நந்தினி ஸ்ரீதர், செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக், மற்றும் கழக நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பொறுப்பாளர்கள் பலர் உடனிருந்தனர்.
மேலும் கொரோனோ வைரஸ் தொற்று பரவ அதிகப்பு காரணமாக திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மேல் கலந்து கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில் திமுகவின் இந்நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதும், அதில் பலர் முக கவசம், சமூக இடைவெளியை பின்பற்றாததும் சட்டம் எல்லாம் சாமானியனுக்கு மட்டும்தானா? என்ற கேள்வியை எழுப்புவதாய் அமைந்துள்ளது.
ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரி சிறைப்பிடிப்பு - அரிசியை சாலையில் கொட்டி போராட்டம்