நடிகர் வடிவேலு கொரோனாவில் இருந்து மீண்டு வர ஆதரவற்ற குழந்தைகள் பிரார்த்தனை
நடிகர் வடிவேலு கொரோனா தொற்றிலிருந்து விரைவில் குணமடைந்து மீண்டு வர வேண்டும் என்பதற்காக சீர்காழியில் அன்பாலயம் காப்பகத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் பிரார்த்தனை
![நடிகர் வடிவேலு கொரோனாவில் இருந்து மீண்டு வர ஆதரவற்ற குழந்தைகள் பிரார்த்தனை Mayiladuthurai actor Vadivelu prays for helpless children to recover from corona நடிகர் வடிவேலு கொரோனாவில் இருந்து மீண்டு வர ஆதரவற்ற குழந்தைகள் பிரார்த்தனை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/27/f379d7235b2da8d58a279274c7749a80_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நகைச்சுவை நடிகர் வடிவேலு சுராஜ் இயக்கத்தில் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அப்படத்தின் இசையமைப்பு வேலைகள் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதற்காக படக்குழுவினருடன் லண்டன் சென்றிருந்த நடிகர் வடிவேலு 10 நாட்களுக்கும் மேலாக அங்கு தங்கியிருந்து இசையமைப்பு தொடர்பான பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லண்டனில் இருந்து சென்னை திரும்பியுள்ளார். அப்போது வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது அவருக்கு லேசான கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. அதனை அடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Omicron Cases India: இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 653ஆக உயர்வு: அலர்ட் மக்களே!
இந்நிலையில் மயிலாடுதுறையில் உள்ள பிரபல தனியார் விடுதி (மில்லியன் டே) ஒன்றின் உரிமையாளரும், நடிகர் வடிவேலுவின் மிக நெருங்கிய நண்பருமான அப்துல் காதர் மைதீன் என்பவரின் விடுதியினை நட்பின் காரணமாகவும் அவர்மீது கொண்ட அன்பினால் அந்த தனியார் விடுதியை வடிவேலுவே நேரில் வந்து திறந்து வைத்தார். தற்போது வடிவேலுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அறிந்து வருந்தியவர். நடிகர் வடிவேலு விரைவில் குணம் அடைய வேண்டும் என்பதற்காக சீர்காழியில் உள்ள அன்பாலயம் ஆதரவற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகள் இல்லத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு ஒருநாள் மூன்று வேளையும் உணவு வழங்க ஏற்பாடு செய்தார்.
சிதிலமடைந்த ராஜராஜசோழனின் தாத்தா கட்டிய அய்யனார் கோயில் - கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசுகள்
அதனை தொடர்ந்து அன்பாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் அந்த குழந்தைகள் அனைவரும் இறை பாடல் பாடி, தொழுது, நடிகர் வடிவேலு விரைவில் நலம்பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர் . இந்த சிறப்பு பிரார்த்தனையில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் மற்றும் அதன் ஆசிரியர்கள் நிர்வாகிகளும் பங்கேற்றனர். தற்போது சிகிச்சையில் இருக்கும் வடிவேலுவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது
ABP நாடு செய்திகளை Goole News - ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)