சீர்காழி அருகே மூழ்கிய கிராமம்; படகில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்..!
சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கால் கிராமங்களை சூழ்ந்த தண்ணீரால் படகில் மாணவர்கள் பள்ளி செல்லும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அணையின் பாதுகாப்பு கருதி கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி உபரி நீர் கல்லணை வழியாக கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் தற்போது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் வழியாக பழையாறு கடலில் கலந்து வருகிறது. இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்ட சீர்காழி அருகே கொள்ளிடம் கரையோர 7 கிராமங்களில் தண்ணீர் உப்புகுந்துள்ளது.
சீர்காழி தாலுகாவில் அளக்குடி, நாதல்படுகை, முதலைமேடு, வெள்ளமணல் உள்ளிட்ட கிராமங்கள் கொள்ளிடம் கரைக்கு உட்புறம் உள்ள திட்டுப்பகுதியில் அமைந்துள்ளது. இதுபோன்று கோபால சமுந்திரம், வடரங்கம், மாதிரவேலூர் உள்ளிட்ட கிராமங்களில் வெள்ளப்பெருக்கு காரணமாக அப்பகுதியில் வசிக்கும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தது. மேலும் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு தாழ்வான பகுதியில் உள்ளவர்களை மேடான பகுதிகளுக்கு தங்க அறிவுறுத்தி இருந்தனர்.
இந்நிலையில், கொள்ளிடம் ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்வதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரண்டு கரைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் கொள்ளிடம் ஆற்றுப் படுகை கிராமங்களான வெள்ளைமணல், நாதல்படுகை, முதலைமேடுதிட்டு உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் விவசாய விலை நிலங்களில் தண்ணீர் உட்புகுந்துள்ளது. சுமார் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட வெண்டை, கத்திரிக்காய், சோளம் முல்லை பூ உள்ளிட்ட பயிர்களை முற்றிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
Ajith: எப்படி அஜித் உங்களால இதை செய்ய முடியுது? - அமீர்கான் கேள்வியால் ஆடிப்போன ரசிகர்கள்..
இந்நிலையில், ஆற்றில் நான்காவது நாளாக சுமார் இரண்டு லட்சம் கன அடி தண்ணீர் செல்வதால் படுகை கிராமங்களில் உள்ள வீடுகளில் தங்கியுள்ள பள்ளி செல்லும் மாணவர்கள் படகுகளின் மூலம் பள்ளிக்கு செல்கின்றனர். மாணவர்களுக்கு தற்போது தேர்வு நடைபெறுவதால் கடந்த இரண்டு நாட்களாக விடுமுறை அளித்து சிறந்த நிலையில் தற்போது விடுமுறை முடிந்து திங்கள்கிழமை என்பதால் மாணவர்கள் வழக்கம்போல பள்ளிக்கு செல்கின்றனர். நாதல்படுகை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பெற்றோர்கள் அவர்களை படகில் பாதுகாப்பாக அழைத்து வந்து கரையில் விட்டு செல்கின்றனர். அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்