Untold Stories 19 : இந்தியாவிற்காக காமன்வெல்த்தில் முதல் தங்கம்.. பயிற்சி முதல் பதக்கம் வரை.. யார் இந்த ரூபா உன்னிகிருஷ்ணன்?
விளையாட்டு உலகில் நாம் இதுவரை அறிந்திராத பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகளை அன்டோல்ட் ஸ்டோரி என்ற தொடர் மூலம் தொடர்ச்சியாக கண்டு வருகிறோம்.
ஒலிம்பிக் போட்டிகளுக்கு பிறகு மிகப்பெரிய அளவுல பார்க்கப்பட்ற விளையாட்டு காமன்வெல்த் போட்டிகள். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு கீழே கட்டுப்பட்டு இருந்த நாடுகளை ஒருங்கிணைச்சு அவங்களுக்கு இடையே மட்டும் இந்த காமன்வெல்த் போட்டியை நடத்திகிட்டு வர்றாங்க. 1911ம் வருஷம் முதல் தொடங்கி நடந்துகிட்டு வர்ற இந்த காமன்வெல்த் போட்டியில இந்தியா 1938ம் வருஷத்துல இருந்து விளையாடிகிட்டு வருது..
இந்தியாவுக்காக காமன்வெல்த் போட்டியில முதல் தங்கப்பதக்கத்தை 1958ம் வருஷம் மில்காசிங் தடகளப் போட்டியில வாங்கித் தந்தாரு. இன்னைக்கே விளையாட்டுத்துறையில பெண்கள் கடுமையான போராட்டத்துக்கு அப்புறம் வர்ற சூழல் இருக்கும்போது, அந்த காலத்துல எவ்ளோ தடை இருக்கும்னு நீங்க யோசிச்சு பாருங்க.. ஆனாலும், முழு முயற்சியோட பல பெண்கள் இந்தியாவுக்காக காமன்வெல்த் போட்டியில போராடுனாங்க.
1934ம் வருஷத்துல இருந்து காமன்வெல்த் போட்டியில விளையாடிகிட்டு வந்த இந்தியாவுக்கு முதன் முதலா பதக்கம் வாங்கித் தந்தவங்க அமிகியாவும், கன்வால் தாக்கர்சிங்கும்தான்.
ரெண்டு பேரும் சேர்ந்து 1974ம் வருஷம் கனடாவுல இருக்கு எட்மாண்டோன் நகரத்துல நடந்த போட்டியில இந்தியாவுக்கு பதக்கத்தை வாங்கித் தந்தாங்க.. மகளிர் பேட்மிண்ட்ன் இரட்டையர் பிரிவுல இந்தியவுக்காக ரெண்டு பேரும் சேர்ந்து வெண்கலப் பதக்கத்தை வாங்கித் தந்தாங்க.. காமன்வெல்த்துல இந்தியாவுக்காக பெண்கள் பதக்கம் வாங்குனாலும், தங்கப்பதக்கம் மட்டும் கிடைக்காம இருந்துச்சுனு ஒரு குறை மட்டும் இருந்துகிட்டே இருந்துச்சு.. அந்த குறையை 1998ம் வருஷம் ரூபா உன்னகிருஷ்ணன் தீத்து வச்சாங்க.. ரூபா உன்னிகிருஷ்ணன் சென்னையில பொறந்து வளந்தவங்க.. ரூபாவோட அப்பா ஒரு போலீஸ் அதிகாரி. அதுமட்டுமில்லாம அவர் ஒரு துப்பாக்கிச்சுடும் வீரரும்கூட.
இதுனால, ரூபாவுக்கும் துப்பாக்கிச் சுட்றது மேல ஆர்வம் தானாவே வந்துடுச்சு.. அப்பா கூட துப்பாக்கிச் சுட்ற ட்ரெயினிங் சென்டருக்கு போன ரூபா தன்னோட 12 வயசுலயே துப்பாக்கிச் சுட்ற ப்ராக்டீசை தொடங்கிட்டாரு. ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வந்த உடனே தினமும் 3 மணி நேரம் ப்ராக்டீஸ் பண்ணுறதை ரூபா வழக்கமா வச்சுருந்துக்காங்க.. அதுவும் அவங்களோட ப்ராக்டீசோட தொடக்கத்துல துப்பாக்கியை லோட் பண்றதுக்கும், அதை ஹேண்ட்ல் பண்றதுக்குமே போயிருக்கு..
ரூபாவோட திறமையால அவங்க தன்னோட 14 வயசுலயே தேசிய சாம்பின்ஷிப் போட்டியில கலந்துகிட்டாங்க.. கலந்துகிட்டது மட்டுமில்லாம பதக்கங்களையும் ஜெயிச்சு அசத்துனாங்க.. தேசிய அளவுல துப்பாக்கிச்சுடுதல்ல அசத்துன ரூபாவுக்கு சர்வதேச அளவுல விளையாட வாய்ப்பு கிடைச்சது… 1994ம் வருஷம் கனடாவுல இருக்குற எட்மாண்டோன் நகரத்துல நடந்த காமன்வெல்த்துல 50 மீட்டர் ரைபிள் போட்டியில ரூபா பார்ட்டிசிபேட் பண்ணாங்க.. அந்த போட்டியில வெள்ளிப்பதக்கத்தை ஜெயிச்சு அசத்துனாங்க.. ஆனாலும், அவங்களோட தங்கம் ஜெயிக்கனுங்குற தாகம் மட்டும் அடங்கவே இல்ல…
1998ம் வருஷம் மலேசியாவுல இருக்கு கோலாலம்பூர்ல நடந்த காமன்வெல்த் போட்டியில ரூபா களமிறங்குனங்க.. இந்த முறை அதே 50 மீட்டர் ரைபிள் பிரிவுல 8 போட்டியாளர்கள் கூட இறுதிப்போட்டியில மோதுனாங்க.. யாருக்கும் எந்த சான்சும் கொடுக்காம 590 பாயின்ட்சை குவிச்சு முதலிடத்தை பிடிச்சாங்க.. அதுமட்டுமில்லாம காமன்வெல்த் போட்டியில இந்தியாவுக்காக முதல் தங்கப்பதக்கம் வாங்குன பெண் அப்படிங்குற வரலாற்றுச் சாதனையையும் படைச்சாங்க…
இந்தியாவுக்காக கிட்டத்தட்ட 10 நாடுகள்ளல விளையாடி அசத்துனது மட்டுமில்லாம காமன்வெல்த் தங்கம் வாங்குன முதல் பெண் அப்படிங்குற சாதனை படைச்ச ரூபா உன்னிகிருஷ்ணனுக்கு மத்திய அரசு அர்ஜூனா விருது கொடுத்து கவுரவப்படுத்துனுச்சு.. 2003க்கு பிறகு ரூபா உன்னிகிருஷ்ணன் அமெரிக்காவுக்கு போயிட்டாங்க.. 2013ம் வருஷம் அமெரிக்காவுலயே சிட்டிசன்ஷிப் வாங்கி இப்போ அங்கயே செட்டிலும் ஆயிட்டாங்க.. இருந்தாலும் இந்திய ரைபிள் வீராங்கனைகளுக்கு ரூபா உன்னிகிருஷ்ணன் இன்னைக்கு வர்ற ஒரு ரோல் மாடலாதான் இருக்காங்க..
இன்னும் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை அடுத்தடுத்த எபிசோட்களில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க : Untold Stories Episode 18 : ரிக்ஷா ஓட்டுனர் மகள் டூ உலக சாம்பியன்..! கேரமில் கோலோச்சிய சென்னைப் பெண்...!
மேலும் படிக்க : Untold Stories Episode 17: பெருங்கடல்களின் பேரரசன்..! நீச்சல் உலகின் சக்கரவர்த்தி..! யார் இந்த மிஹிர்சென்..!