மேலும் அறிய

சீர்காழி அருகே கட்டுமரம் கடலில் கவிழ்ந்து மீனவர் உயிரிழப்பு

சீர்காழி அருகே கடல் சீற்றத்தால் கட்டுமரம் அலையில் சிக்கி கவிழ்ந்ததில் மீனவர் கடல் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா தொடுவாய் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜாங்கம் என்பவரின் மகன் 60 வயதான சண்முகம். இவர் நேற்று மாலை 5 மணிக்கு தனது கட்டுமரத்தில் தொடுவாய் கடற்கரையில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். ஒரு மணி நேரத்தில் கரை திரும்ப வேண்டிய இவர் நீண்ட நேரமாகியும் கரை திரும்பாததால்,  கட்டுமரம் கவிழ்ந்தது சண்முகம் மாயமானது உறவினர்களுக்கு தெரியவந்தது.  இதனை அறிந்த சக மீனவர்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த கடற்கரை காவல் நிலைய போலீசார் மீனவர்கள் உதவியுடன் 3 படகுகளில் கடலுக்குள் சென்று சண்முகத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கு கடலோர காவல்படை அழைக்கப்பட்டு தேடுதல் பணியில் ஈடுப்பட்டனர். 

சீர்காழி அருகே கட்டுமரம் கடலில் கவிழ்ந்து மீனவர் உயிரிழப்பு

Chinese Spy Ship: இலங்கையில் சீன ‘உளவு’ கப்பல்.. இந்தியாவின் ப்ளான் என்ன? நிலைமையைச் சொன்ன அமைச்சர் ஜெய்சங்கர்!

இந்நிலையில் இன்று காலை கொட்டாயமேடு கடற்கரைப்பகுதியில் சண்முகத்தின் உடல் கரை ஒதுங்கியது. உடலை கைப்பற்றிய கடலோரபடை போலீசார் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர். மேலும்  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலில் மூழ்கி மீனவர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரையும், கிராம மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

AIADMK : ''சொந்தக் காலில் நிற்பேன்.. ஓபிஎஸ் உடன் இணைய வாய்ப்பில்லை'' - திட்டவட்டமாக கூறிய ஈபிஎஸ்!

சீர்காழி அருகே கடற்கரையில் நடந்த மேலும் ஒரு சோக சம்பவம்

மயிலாடுதுறை  மாவட்டம் சீர்காழியை அடுத்த பழையார் மீனவர் கிராமத்தில் மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது. இங்கிருந்து பழையாறு, மடவாமேடு, தர்காஸ், கொட்டாய்மேடு, கொடியம்பாளையம் உள்ளிட்ட 6 கிராமங்களை சேர்ந்த 8 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் 350 விசைப்படகு, மற்றும் 1000க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

சீர்காழி அருகே கட்டுமரம் கடலில் கவிழ்ந்து மீனவர் உயிரிழப்பு

14 Years of Virat Kohli: 14 ஆண்டுகளுக்கு முன்பு... இதே நாள்.! பெருமையை நெகிழ்ச்சியாய் பகிர்ந்த விராட் கோலி!

இதன்மூலம் இந்த மீன்பிடி துறைமுகத்தில் நாள் ஒன்றுக்கு 3 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறுகிறது. இத்துறைமுகத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு மீன் மற்றும் உலர் கருவாடு ஏற்றுமதியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பழையார் மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் ஆழம் குறைவு காரணமாக இரண்டு படகுகள் அடுத்தடுத்து தரை தட்டி மூழ்கியது.

சீர்காழி அருகே கட்டுமரம் கடலில் கவிழ்ந்து மீனவர் உயிரிழப்பு

Kamalhassan: உருவாகிறது கமலின் மாஸ்டர் பீஸ் படத்தின் 2 ஆம் பாகம்...ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இதில் பழையார் மீனவ கிராமத்தை சேர்ந்த சுரேந்திரன் மற்றும் செழியன் இரண்டு மீனவர்களுக்கு சொந்தமான தல 50 லட்சம் மதிப்பிலான  இரண்டு விசைபடகுகள் சேதமடைந்து முகத்துவார பகுதியில் மூழ்கியது. படகில் இருந்த மீனவர்கள் படகில் இருந்து பாதுகாப்பாக குதித்து வெளியேறிய நிலையில் தண்ணீர்  மூழ்கிய படகுகளை மீட்கும் பணியில் சக மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Fengal Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.!  எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.! எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Fengal Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.!  எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.! எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
டங்ஸ்டன் விவகாரம்; அழகர் மலையில் ஒன்று கூடிய அரிட்டாபட்டி 48 தாய் கிராம மக்கள்
டங்ஸ்டன் விவகாரம்; அழகர் மலையில் ஒன்று கூடிய அரிட்டாபட்டி 48 தாய் கிராம மக்கள்
Sabarimala Temple: சபரிமலை கோயிலில் எத்தனை பேர் சாமி தரிசனம்? எவ்வளவு வசூல் தெரியுமா..?
சபரிமலை கோயிலில் எத்தனை பேர் சாமி தரிசனம்? எவ்வளவு வசூல் தெரியுமா..?
தம்பியை கொன்ற அண்ணனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
தம்பியை கொன்ற அண்ணனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Embed widget