மேலும் அறிய

Sabarimala Temple: சபரிமலை கோயிலில் எத்தனை பேர் சாமி தரிசனம்? எவ்வளவு வசூல் தெரியுமா..?

Sabarimala Ayyappan Temple: சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 9 நாட்களில் 6 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இதன் மூலம் 41 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 15 ஆம் தேதி திறக்கப்பட்டது. அதற்கு அடுத்த நாள் முதல், தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், முன் எப்போதும் இல்லாத வகையில் இந்தாண்டு சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்து கொண்டிருப்பதால், கடந்த 9 நாட்களில் மட்டும் 6 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். அவர்களின் வருகையால், 41 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தேவசம் போர்டு  தெரிவித்துள்ளது.

நவம்பர் 16 ஆம் தேதி முதல் 6 லட்சத்து 12 ஆயிரத்து 290 பக்தர்கள் வந்துள்ளனர் என்றும் கடந்தாண்டு இதே தருணத்தில் சுமார் 3 லட்சம் பக்தர்கள் மட்டுமே வருகை தந்ததாக கூறப்படுகிறது. மேலும் பம்பையில் ஸ்பாட் புக்கிங் வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆதார் கார்டுடன் வந்தால் அனைவருக்கும் தரிசனத்திற்கான பாஸ் வழங்கப்படுகிறது. இருமுடிக்கட்டில் பாலிதீன் பொருட்களை தவிர்க்க வேண்டும் என்று தந்திரியும், தேவசம்போர்டும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் நிர்வாகத்தின் சார்பில்  கூறுகையில், சபரிமலை வரும் பக்தர்கள் அதிகளவில் பாலிதீன் வருவது கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது எனவும், அரசு, தேவசம்போர்டு நடவடிக்கையால் ஒன்பது நாட்களாக தரிசனம் சுமுகமாக நடைபெற்றது. மொத்தம், 6 லட்சத்து, 12,290 பேர் தரிசனம் செய்துள்ளனர். இந்த ஒன்பது நாட்களில் நேற்று முன்தினம், 84,000 பேர் வந்தபோதும், அனைவரும் நல்ல தரிசனம் செய்து திருப்தியாக திரும்பினர். இதனால் ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையை கூட்டும் எண்ணம் தேவசம் போர்டுக்கு இல்லை. தேவைப்படுபவர்களுக்கு பம்பையில் ஸ்பாட் புக்கிங்கில் அனுமதி வழங்கப்படும். தேவைப்பட்டால் பம்பையில் ஸ்பாட் புக்கிங் கூடுதல் கவுன்டர் திறக்கப்படும். ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் வர முடியாத பட்சத்தில், அதை ரத்து செய்ய, சம்பந்தப்பட்டவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. ஆனாலும், ஏராளமானோர் அதை ரத்து செய்வதாக தெரியவில்லை. தினமும் 10 முதல் 15,000 பேர் வரை வராமல் இருக்கின்றனர். இது வேண்டுமென்றே திட்டமிட்டு யாராவது செய்கின்றனரா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

Sabarimala Temple: சபரிமலை கோயிலில் எத்தனை பேர் சாமி தரிசனம்? எவ்வளவு வசூல் தெரியுமா..?

மேலும் 18 படிகளில் போலீசாரின் பணி நேரத்தை 20-ல் இருந்து 15 நிமிடமாக குறைத்தது நல்ல பலனை தந்துள்ளது. 20 நிமிடமாக இருந்த போது, கடைசி ஐந்து நிமிடத்தில் போலீசார் மிகவும் சோர்வுற்று படி ஏற்றும் வேகம் குறைந்தது. அத்துடன் 18 படிகளில் ஏறியதும் கொடி மரத்தின் இரண்டு பக்கங்கள் வழியாக நேரடியாக சென்று மூலவரை வழிபடும் திட்டம், நடப்பு சீசனுக்கு பின்னர் பரிசோதனை ரீதியாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக கேரள அரசு, உயர் நீதிமன்றம், மாஸ்டர் பிளான் கமிட்டி, தந்திரி உள்ளிட்ட அனைவரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் .இவ்வாறு மூலவரை தரிசிக்க ஏற்பாடு செய்யும் போது பக்தர்களுக்கு அதிக நேரம் தரிசனம் கிடைக்கும்.

ஒரு நிமிடத்தில், 80 பேர் மட்டுமே படியில் ஏறுவதால் அந்த 80 பேரும் அந்த குறிப்பிட்ட நேரத்துக்குள் நேரில் தரிசிக்க முடியும் என்பது தேவசம் போர்டு கருத்து. மொத்த வருமானத்தை கணக்கிட்டால் இந்த ஆண்டு 41 கோடியே, 64 லட்சத்து, 65 ரூபாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இது, 28 கோடியே, 30 லட்சத்து 20,364 ரூபாயாக இருந்தது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 13 கோடியே 33 லட்சத்து 79,801 ரூபாய் கூடுதலாக கிடைத்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.!  எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.! எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
சேலத்தில் சோகம்.... 2 குழந்தைகளுடன் கர்ப்பிணி கிணற்றில் விழுந்து தற்கொலை
சேலத்தில் சோகம்.... 2 குழந்தைகளுடன் கர்ப்பிணி கிணற்றில் விழுந்து தற்கொலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.!  எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.! எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
சேலத்தில் சோகம்.... 2 குழந்தைகளுடன் கர்ப்பிணி கிணற்றில் விழுந்து தற்கொலை
சேலத்தில் சோகம்.... 2 குழந்தைகளுடன் கர்ப்பிணி கிணற்றில் விழுந்து தற்கொலை
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
Schools Leave: வெளியான அறிவிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர் உத்தரவு!
Schools Leave: வெளியான அறிவிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர் உத்தரவு!
Embed widget