மேலும் அறிய

இந்தியன் வங்கியில் தலைமை மேனேஜர் உட்பட 171 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

இப்பணியிடங்களுக்கு கல்வி மற்றும் வயது வரம்பு 01.09.2025 தேதியின்படி நிரண்யிக்கப்பட்டுள்ளது. தலைமை மேனேஜர் பதவிக்கு 28 முதல் 36 வயது வரை இருக்கலாம்.

தஞ்சாவூர்: இந்தியன் வங்கியில் 171 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. எப்படி விண்ணப்பிப்பது என்ற அனைத்து விவரங்களும் இதோ உங்களுக்காக!!!

இந்தியன் வங்கியில் சிறப்பு அதிகாரிகள் பிரிவில் காலியாக உள்ள 171 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தலைமை மேனேஜர், சீனியர் மேனேஜர், மேனேஜர் ஆகிய பதவிகள் நிரப்பப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு வரும் அக்டோபர் 13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

2025-ம் ஆண்டுக்கான இந்தியன் வங்கியில் சிறப்பு அதிகாரிகள் பிரிவில் பல்வேறு துறைகளில் உள்ள ஏராளமான காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறும் பணி தொடங்கியுள்ளது. தகவல் தொழில்நுட்பம், கார்ப்பரேட் கிரெடிட் அனலிஸ்ட், நிதி அனலிஸ்ட், ரிஸ்க் மேனேஜ்மெண்ட், ஐடி ரிஸ்க் மேனேஜ்மெண்ட், டேட்டா அனலிஸ்ட், கம்பெனி செயலாளர் மற்றும் சிஏ ஆகிய பிரிவுகளில் தலைமை மேனேஜர், சீனியர் மேனேஜர், மேனேஜர் ஆகிய பதவிகள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 171 காலிப்பணியிடங்களுக்கு அக்டோபர் 13-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தலைமை மேனேஜர் 41
சீனியர் மேனேஜர் 70
மேனேஜர் 60
மொத்தம் 171
இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 காலிப்பணியிடங்கள் உள்ளன.

இப்பணியிடங்களுக்கு கல்வி மற்றும் வயது வரம்பு 01.09.2025 தேதியின்படி நிரண்யிக்கப்பட்டுள்ளது. தலைமை மேனேஜர் பதவிக்கு 28 முதல் 36 வயது வரை இருக்கலாம். சீனியர் மேனேஜர் பதவிக்கு 25 முதல் 33 வரை இருக்கலாம். மேனேஜர் பதவிக்கு 23 முதல் 31 வரை இருக்கலாம்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு கணினி அறிவியல், கணினி பயன்பாடு, தகவல் தொழில்நுட்பம், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேஷன் உட்பட பிரிவுகளில் 4 வருட பொறியியல் படிப்பு அல்லது முதுகலைப் பட்டப்படிப்பு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் சான்றிதழ் படிப்புகள் தேவை. 

கடன் துறையில் உள்ள சிஏ, பட்டப்படிப்புடன் 2 வருட எம்பிஏ/ பிஜி டிப்ளமோ ஆகியவற்றை முடித்திருக்க வேண்டும். ரிஸ்க் மேனேஜ்மெண்ட் துறைகளில் CA / CFA அல்லது கணிதம், நிதி, பொருளாதாரம், புள்ளியியல் ஆகியவற்றில் இளங்கலை பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு அல்லது பொறியியல், முதுகலை டிப்ளமோ ஆகியவற்றை முடித்திருக்க வேண்டும்.

முதலீட்டாளர் சேவை செல், கணக்கு துறை ஆகியவற்றில் உள்ள பணியிடங்களுக்கு ICSI/ICAI/MBA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், பதவிக்கு ஏற்ப அனுபவத்தை பெற்றிருக்க வேண்டும்.

மேனேஜர் பதவிக்கு ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படுகிறது. சீனியர் மேனேஜர் பதவிக்கு ரூ.85,920 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படும். தலைமை மேனேஜர் பதவிக்கு ரூ.1,02,300 முதல் ரூ.1,20,940 வரை சம்பளம் வழங்கப்படும்.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து தகுதியின் அடிப்படையில் நேர்காணல் நடைபெறும் அல்லது எழுத்துத் தேர்விற்கு பின்னர் நேர்காணல் என தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத்தேர்வு ஆங்கிலம், பணிக்கான அறிவு, பகுத்தறிவு, நுண்ணறிவு ஆகியவற்றில் 160 கேள்விகளுடன் 220 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் நெகட்டிங் மதிப்பெண்கள் உள்ளன. கட்-ஆஃப் அடிப்படையில் இதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வு மட்டும் நடைபெற்றால் மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.

இந்தியன் வங்கி சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதிபெற்றவர்கள் https://indianbank.bank.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு கட்டணமாக ரூ.1000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. SC/ST/PWBD பிரிவினர் ரூ.175 கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பம் கடந்த 23-ம் தேதி முதல் தொடங்கப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 13-ம் தேதி ஆகும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தகுதியானவர்களுக்கு அறிவிக்கப்படும்

எழுத்துத் தேர்வு நடைபெற்றால் சென்னை, மதுரை, திருநெல்வேலி, சேலம், திருச்சி, வேலூர், கோய்மபுத்தூர், விருதுநகர், தஞ்சாவூர், நாகர்கோவில், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே உங்களின் விண்ணப்பத்தை அனுப்பி பயன் பெறுங்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
Parijatham Serial: இசையால் கடுப்பாகிய விஷால்... ஸ்ரீஜாவின் அப்பாவின் கிரிமினல் வேலை - பாரிஜாதத்தில் இன்று
Parijatham Serial: இசையால் கடுப்பாகிய விஷால்... ஸ்ரீஜாவின் அப்பாவின் கிரிமினல் வேலை - பாரிஜாதத்தில் இன்று
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
Parijatham Serial: இசையால் கடுப்பாகிய விஷால்... ஸ்ரீஜாவின் அப்பாவின் கிரிமினல் வேலை - பாரிஜாதத்தில் இன்று
Parijatham Serial: இசையால் கடுப்பாகிய விஷால்... ஸ்ரீஜாவின் அப்பாவின் கிரிமினல் வேலை - பாரிஜாதத்தில் இன்று
Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை- அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.?
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை- அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.?
Pongal Gift: 2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
சொந்த ஊர் செல்வோருக்கு நற்செய்தி: இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் தொடக்கம்!
சொந்த ஊர் செல்வோருக்கு நற்செய்தி : இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் தொடக்கம்!
Upcoming midsize SUVs 2026: ப்ராண்டுக்கு ஒன்னு கன்ஃபார்ம்.. வரிசை கட்டும் மிட்-சைஸ் எஸ்யுவிக்கள், 2026ல் பெஸ்ட் சாய்ஸ் எது?
Upcoming midsize SUVs 2026: ப்ராண்டுக்கு ஒன்னு கன்ஃபார்ம்.. வரிசை கட்டும் மிட்-சைஸ் எஸ்யுவிக்கள், 2026ல் பெஸ்ட் சாய்ஸ் எது?
Embed widget