கலோரி உடன் கூடிய உணவுப்பொருள் தயாரிப்பில் இந்தியா இரண்டாம் இடம்-நிதிஆயோக் உறுப்பினர் ரமேஷ்சந்த்
’’இந்தியாவில் கடந்த 2019-20 ஆம் ஆண்டில் 291.95 மில்லியன் டன்கள் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், 2020-21ஆம் ஆண்டில் 308.65 மில்லியன் டன்கள் உற்பத்தி’’
தஞ்சாவூரிலுள்ள இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகம், 1967 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மத்திய உணவு பதனிடுதல் தொழில்கள் அமைத்தக்கத்தின் கீழ் ஆய்வு மற்றும் கல்வி நிறுவனமாக இயங்கி வருகிறது. இங்கு உணவு பதப்படுத்துதல் சார்பில் ஆய்வு மேற்கொள்ளுதல், கல்வி அளிப்பது, விவசாயகள், தொழில்முனைவோர் மற்றும் இளைஞர்களுக்கு உணவ பதப்படுத்துதல் சார்ந்த தொழில் மேற்கொள்வதற்கு பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றது. தஞ்சாவூர் இந்திய உணவு பதன தொழில்நுட்ப கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் திருப்பதியிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி) இயக்குநர் என். சத்திய நாராயணா சிறப்புரையாற்றி, 116 மாணவர்களக்கு மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்றவர்களுக்குத் தங்கப் பதக்கம் அணிவிக்கப்பட்டது. தஞ்சாவூரிலுள்ள இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இணையவழியில் பங்கேற்ற நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் ரமேஷ் சந்த் பேசுகையில், உலக அளவில் உணவு தானிய உற்பத்தியில் இந்தியா முன்னணி வகிக்கிறது. இந்தியாவில் 2019-20 ஆம் ஆண்டில் 291.95 மில்லியன் டன்கள் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், 2020-21ஆம் ஆண்டில் 308.65 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. கலோரியுடன் கூடிய உணவு உற்பத்தியில் இந்தியா உலக அளவில் இரண்டாவது பெரிய நாடாகத் திகழ்கிறது. பால், வாழை, மா, மசாலா பொருள்கள், இறால், பயறு வகைகள், காய்கறிகள், தேயிலை போன்றவற்றில் உலக அளவில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. உலக அளவில் உற்பத்தி, நுகர்வு, ஏற்றுமதி போன்றவற்றின் வளர்ச்சியில் இந்தியா ஐந்தாமிடத்தைப் பெற்றுள்ளது.
இந்திய அரசு விவசாயிகளின் வருவாயை இரு மடங்காக உயர்த்துவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளது. என்றாலும், இதற்கு தடைகள் இல்லாமல் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளால் விநியோகத் தொடரில் பாதிப்பு ஏற்பட்டு, கணிசமான அளவுக்கு நட்டத்தை ஏற்படுத்துவது வருத்தமளிக்கிறது. இந்தியா உணவு, பழங்கள், காய்கறிகள் உற்பத்தியிலும், மீன் வளத்திலும், கால்நடை வளர்ப்பிலும் வளமான நாடாகத் திகழ்கிறது. ஆனால், நீடித்த உணவில் 3.10 சதவீதமும், பால், மீன், இறைச்சி, முட்டை போன்ற மெதுவாக அழுகக்கூடிய பொருள்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றில் 10.20 சதவீதமும், தோட்டக்கலைப் பயிர்களில் 5 .6 சதவீதமும் இழப்பு ஏற்படுகிறது. இந்தியாவின் உணவு சந்தையில் உணவு பதப்படுத்துதல் தொழிலகங்கள் 32 சதவீதமாக இருக்கிறது. விவசாயிகளின் உழைப்புக்கு ஏற்ப அவர்களுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். உணவு பதன தொழில் மிகப் பெரிய வளர்ச்சி அடைந்து வருகிறது. இத்துறை மிகச் சிறந்த எதிர்காலத்தைக் கொண்டுள்ளது என்றார். இறுதியில் முனைவர் எம். லோகநாதன் நன்றி கூறினார்.