கொளுத்த தொடங்கிய கோடை வெயில்..! மயிலாடுதுறை கோயில் யானைக்கு ஃபேன் அமைத்து கொடுத்த விலங்கு ஆர்வலர்
மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் யானைக்கு ஏற்கெனவே ஷவர் மற்றும் வெள்ளி கொலுசு ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மின்விசிறி வசதியும் செய்து தரப்பட்டுள்ளது
கடந்த சில தினங்களுக்கு மயிலாடுதுறை மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்தே காணப்படுகிறது. வெயிலின் தாக்கத்தை குறைக்க மனிதர்களே போராடி வரும் நிலையில் கால்நடைகளான விலங்குகளின் பாடு திண்டாட்டம்தான். இந்நிலையில், மயிலாடுதுறையில் அமைந்துள்ளது திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான மாயூரநாதர் கோயிலுக்கு சொந்தமான 60 வயதான அபயாம்பாள் என்ற யானை உள்ளது.
இந்த அபயாம்பாள் யானை இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் செல்லப்பிள்ளை, கோயிலுக்கு குழந்தைகளுடன் குடும்பத்துடன் வருபவர்கள் அபயாபாளை கண்டு மகிழ்ச்சி அடைவதுடன் அதனிடம் ஆசீர்வாதம் பெற்றுச் செல்வர். கோயிலின் முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்திலும் அபயாம்பாள் யானை கலந்துக் கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்கும்.
TNPSC Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! மறந்துடாதீங்க!
இந்த சூழலில் வெயில் தாக்கம் காரணமாக காலை வேளையில் கொட்டகையில் இருந்து அவிழ்த்து வரப்பட்டு, கோயில் தோட்டத்தில் அபயாம்பாள் யானை கட்டப்படுகிறது. இதனால் உற்சாகம் அடைந்து தோட்டத்தில் உள்ள மண்ணை ரசனையுடன் தனது துதிக்கையால் உறிஞ்சி தனது தலையில் கொட்டிக் கொண்டு விரும்பி விளையாடுகிறாள் அபயாம்பாள். அதனை தொடர்ந்து அபயாம்பாள் யானை குளித்து மகிழ்வதற்காக கோயிலில் ஏற்கெனவே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு யானை ஆர்வலர் ஒருவரால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஷவரில் கோடையின் வெப்பத்தை போக்கிக் கொள்ள தினசரி ஷவர் பாத்தும் எடுத்துவருகிறாள். உதவி யானை பாகன் வினோத் ஷவர் பாத்தில் குளிக்க வைக்க, அபயாம்பிகை யானை ஷவர் பாத்தில் நனைந்து ஆனந்தம் அடைந்து உற்சாகத்துடன் குளித்து வெய்யிலின் தாக்கத்தை தணித்து குதூகலமடைகிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டு செல்வந்தர் ஒருவர் யானைக்கு வெள்ளிக்கொலுசு அணிவித்து அழகு பார்த்தார். இந்த சூழலில், இரவு மற்றும் பெரும்பாலான நேரங்களில் யானை அபயாம்பாள் கொட்டகையில் வெயிலின் தாக்கதால் அவதியடைவதை எண்ணி வருந்திய, வனவிலங்கு ஆர்வலர் நட்சத்திரா குழுமத் தலைவர் ஆடிட்டர் குரு.சம்பத்குமார் என்பவர் மயிலாடுதுறை யானை கொட்டகையில் இரண்டு மின்விசிறி அமைத்துத் தந்துள்ளார். 50 ஆண்டுகளாக இல்லாத வகையில் கொட்டகையில் காற்று வீசுவதால் யானை அபயாம்பாள் ஈக்களின் தொந்தரவு நீங்கி, கோடையின் தாக்கம் குறைந்து குதூகலமடைந்து, அடிக்கடி உற்சாகமாக பிளிறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறது.