School Leave: மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை.. மகிழ்ச்சியில் துள்ளிய மாணவர்கள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் கன மழையின் காரணமாக பள்ளி மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. கடந்த சனிக்கிழமை பருவமழை தொடங்கிய நிலையில் இரண்டு நாட்களாக லேசான மழையாக பெய்து வந்த நிலையில், நேற்று முதல் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது வருகிறது. நேற்று தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்தது. திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. வேலூர், திருப்பத்தூர்,தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் பிற்பகலுக்கு பின் மழை பெய்தது.
சென்னை, செங்கல்பட்டு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அதிகாலையில் இருந்து கனமழை பெய்தது. முக்கியமாக சென்னையில் நேற்று அதிகாலையில் இருந்து மழை பெய்து வருகிறது. அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி பகுதிகளில் அதிகாலையில் கனமழை பெய்தது. வடபழனி, திருவொற்றியூர், எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை பகுதிகளில் 2 மணி நேரமாக மழை பெய்தது. மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்தது.
எழும்பூர், ஆவடி, வேளச்சேரி, தி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் தற்போது மழை பெய்ய தொடங்கி உள்ளது. அதிகாலையிலேயே பெய்யும் மழை காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த தொடர் மழை காரணமாய் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் விடாமல் மழை பெய்து வருகிறது. நேற்று காலை இந்த மாவட்டங்களில் மழை தொடங்கி இப்போது வரை விடாமல் பெய்து கொண்டு இருக்கிறது. இதனால் சாலைகளில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. தமிழ்நாட்டில் மேலும் 5 நாட்கள் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் தமிழ் நாட்டில் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி புதுச்சேரியில் 5 நாள்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய் கிழமை கன முதல் மிக கனமழை பெய்யும் எனவும் கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சென்னை மாவட்டங்களில் செவ்வாய் கிழமை மிக கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் சம்பா சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு தற்போது பெய்துள்ள இந்த மழை சாதகமாக இருக்கும் என்றும் இதனால் சம்பா சாகுபடி பணியில் விவசாயிகள் ஆர்வமுடன் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற