மேலும் அறிய

நாகையில் சாலையே தெரியாத அளவிற்கு 3வது நாளாக கடும் பனிப்பொழிவு - வாகன ஓட்டிகள் சிரமம்

அன்றாட பணிகளுக்கு செல்வோரும் பாதசாரிகளும் உடற்பயிற்சி மேற்கொள்வோரும் இந்த பனிப்பொழிவு காரணமாக கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

நாகை  மாவட்டத்தில்  சாலையே தெரியாத அளவிற்கு 3வதுநாளாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது.  முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடியே வாகன ஓட்டிகள் சென்றனர்.
 
நாகை மாவட்டம் முழுவதும் 3வது நாளாக கடும் பனிப்பொழிவு காரணமாக சாலைகள் அனைத்தும் புகை மண்டலமாக மாறி காட்சியளிக்கிறது. காலை 8 மணிக்குப் பின்னர் 9 மணியை நெருங்கும் நிலையிலும் பனிமூட்டம் கடுமையாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சாலை தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி தங்களது வாகனங்களில் செல்கின்றனர். மேலும் அன்றாட பணிகளுக்கு செல்வோரும் பாதசாரிகளும் உடற்பயிற்சி மேற்கொள்வோரும் இந்த பனிப்பொழிவு காரணமாக கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாகையில் சாலையே தெரியாத அளவிற்கு 3வது நாளாக கடும் பனிப்பொழிவு - வாகன ஓட்டிகள் சிரமம்
 
நாகை, நாகூர், தேவங்குடி, வேளாங்கண்ணி, கீவளூர், கீழையூர், திருக்குவளை திருப்பூண்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. கிராமப்புறத்தில் உள்ள குளம் ஆறு வாய்க்கால் உள்ளிட்ட நீர்நிலைகளும் பனியால் முழுமையாக சூழ்ந்து பனி போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கிறது.காலை 8 மணியைக் கடந்தும் பனிப்பொழிவின் தாக்கம் குறையாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தப் பனிப்பொழிவு காரணமாக சம்பா நெற்பயிர்களை கொள்ளிக்கருப்பான் நோய் தாக்கி இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் உளுந்து பயிர்களில் சாம்பல் நோய், மஞ்சளில் இலை கருகல் நோய்  உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டிப்பதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

என்ன செய்ய வேண்டும்? 
நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget