மேலும் அறிய
Advertisement

தஞ்சாவூர்: இடியுடன் கூடிய மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
நேற்று மாலை பலத்த இடி மின்னலுடன் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மழை
தஞ்சாவூர் நகர் மற்றும் மாவட்டத்தின் வல்லம், ஆலக்குடி, பூதலூர் பகுதிகளில் மிக கனத்த மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதில் தஞ்சை நகர் பகுதியில் மாலை தொடங்கிய கனத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. பணி முடிந்து வீட்டுக்கு செல்ல முடியாமல் பெண்கள் வெகுவாக சிரமப்பட்டனர்.
சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த மழையால் நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. மேலும் தெற்கு வீதி பகுதியில் கழிவுநீர் சாக்கடை கட்டும் பணிகளால் சாக்கடை நீர் சாலைகளில் மழை நீரோடு பெருக்கெடுத்து ஓடியது.
இதே போல் தஞ்சை மாவட்டம் வல்லம், ஆலக்குடி மற்றும் பூதலூர் பகுதிகளில் மிக கனத்த மழை பெய்தது. தற்போது விவசாயிகள் குறுவை சாகுபடிக்காக நாற்று நட்டுள்ள நிலையில் இந்த பலத்த மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இடி மற்றும் மின்னலுடன் பெய்த கனமழையால் ஓரிரு இடங்களில் மரக்கிளைகள் மற்றும் சிறிய வகை மரங்கள் முறிந்து விழுந்தது. தஞ்சையில் இருந்து கரம்பை வழியாக ஆலக்குடி, புதுக் கல்விராயன் பேட்டை, சித்திரக்குடி, பூதலூர் பகுதிகளுக்கு பணி முடிந்து திரும்பிய பொதுமக்கள் இந்த மழையால் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

மேலும் பலத்த காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்ததால் மின்தடையும் ஏற்பட்டது. தஞ்சையின் சுற்று பகுதிகளில் தொடர்ந்து மூன்று மணி நேரத்துக்கு மேல் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. முக்கியமாக கிராமப்புறங்களில் தஞ்சை திருச்சி போன்ற பகுதிகளில் பணிக்கு சென்று விட்டு திரும்பியவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.தஞ்சை மாவட்டம் பூதலூர் நால்ரோடு பகுதியில் சாலைகளில் தண்ணீர் வெல்லம் போல் பெருக்கெடுத்து ஓடியது எதனால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் வாகனத்தை இயக்க முடியாமல் தவித்தனர். மேலும் மின்தடையும் இருந்ததால் வெகுவாக அவதிக்குள்ளாகினர்.
குறுவை சாகுபடிக்காக நாட்டு நட்டு ஒரு வாரமே ஆன நிலையில் இந்த மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி இளம் நாற்றுக்கள் அழுகி பாதிப்பை ஏற்படுத்தும் என்று விவசாயிகள் தரப்பில் கவலையுடன் தெரிவித்தனர். நால்ற பறித்து நற்று இரண்டு வாரங்களுக்கு மேல் ஆன நிலையில் இந்த மழையால் பயிர்களுக்கு சேதம் ஏற்படும் நிலையும் உள்ளது என விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர். தமிழக அரசு வழங்கிய குறுவைத் தொகுப்புகளை இன்னும் ஏராளமான விவசாயிகள் பெறாமல் உள்ளனர். காரணம் இன்னும் அவர்கள் சாகுபடி பணிகளை தொடங்காமல் உள்ளது தான். இந்நிலையில் நேற்று பெய்த இந்த கனமழையால் விவசாயிகள் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளது. தொடரும் என்ற நிலை ஏற்பட்டால் சாகுபடி பணிகளில் வெகுவாக சுணக்கம் ஏற்படும் என்றும் விவசாயிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
க்ரைம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion