மேலும் அறிய

சீர்காழி அருகே டேங்கர் லாரி மீது அரசு பேருந்து மோதல் - கோர விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

சீர்காழி அருகே பெட்ரோலிய டேங்கர் லாரி மீது அரசு விரைவு பேருந்து மோதிய கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பாதரக்குடி புறவழிச்சாலையில் பழுதடைந்து நின்று கொண்டிருந்த டேங்கர் லாரியின் பின் பகுதியில் அரசு விரைவு பேருந்து மோதிய கோர விபத்தில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் பேருந்தில் பயணம் செய்த 44 பேரில் 15 பேர் படுகாயத்துடன் சீர்காழி அரசு மருத்துவமனை மற்றும் சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 11 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து அரசு விரைவு பேருந்து பயணிகள் ஏற்றிக்கொண்டு நேற்று நள்ளிரவு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது, அப்பொழுது சீர்காழி அருகே பாதரகுடி என்ற இடத்தில் உள்ள புறவழிச்சாலை ஓரத்தில் நாகை மாவட்டம் நரிமணத்திலிருந்து பெட்ரோலிய குருடு ஆயில் ஏற்றி கொண்டு சென்னை சென்ற டேங்கர் லாரி பழுதாகி சாலையோரம் நின்றுள்ளது.  


சீர்காழி அருகே டேங்கர் லாரி மீது அரசு  பேருந்து மோதல் - கோர விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

அப்பொழுது லாரியின் பின்னால் அதிக வேகத்தில் வந்த அரசு பேருந்து ஓட்டுனர் மோதாமல் இருக்க முயற்சித்துள்ளார்‌. ஆனால், டேங்கர் லாரி மீது பேருந்தில் ஒருபுறம் மோதியதில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து எதிரே சிதம்பரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த இருசக்கர வாகனத்தில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கியது, இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த சிதம்பரம் பள்ளிப்படை பகுதி சேர்ந்த குருக்கள் பத்மநாபன், அவரது மகன் அருள்ராஜ் மற்றும் பாலமுருகன் ஆகிய மூன்று பேரும்  சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பேருந்து முன் பகுதி டேங்கர் லாரியில் மோதி முற்றிலும் பலத்த சேதமடைந்தது. இதில் பேருந்தின் முன் பகுதியில் அமர்ந்திருந்த நடத்துநர் திருவண்ணாமலையை சேர்ந்த விஜயசாரதி  சீட்டுடன் பேருந்துக்கு வெளியே தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். 


சீர்காழி அருகே டேங்கர் லாரி மீது அரசு  பேருந்து மோதல் - கோர விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

மேலும் விபத்துக்கான காரணமாக விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நடைபெறும் நான்கு வழிச்சாலை பணிக்காக சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சாலை முழுவதும் பழுதடைந்தும் ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டு இரு பக்கம் வரக்கூடிய பேருந்துகள் ஒரே சாலையில் சென்று வருகிறது. சாலைகள் போடும் பணியால், மின்விளக்கு இல்லாமல் இருளில் சாலை எது என தெரியாத அளவில் இருட்டு பகுதியாக உள்ளதால் டேங்கர் லாரி பழுதடைந்து நின்றது தெரியாமல் அரசு பேருந்து ஓட்டுனர் மோதி கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது என காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  மேலும், இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். இறந்தவர்களின் உடல் சீர்காழி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது‌.


சீர்காழி அருகே டேங்கர் லாரி மீது அரசு  பேருந்து மோதல் - கோர விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

இந்த விபத்து தொடர்பாக சீர்காழி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து ஓட்டுநர் பழனியை சேர்ந்து பிரதாப் மற்றும் லாரி ஓட்டுனர் கேரளாவை சேர்ந்த ஜான்பியர்  ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். லாரியின் பின் பகுதி உடைந்து குருடாயில் வெளியே சாலையில் ஊற்றி கொண்டிருப்பதால் தீயணைப்பு துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மயிலாடுதுறை - சிதம்பரம் பாதையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் விபத்தில் காயமடைந்தவர்களை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்து, சிகிச்சை பெற்றுவருபவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வாகன ஏற்பாடுகள் செய்ய உத்தரவிட்டார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
Embed widget