மேலும் அறிய
Advertisement
விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு; நாகையில் விவசாயிகள் கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்
விவசாய நிலங்களை கையகப்படுத்தும் சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து வரும் 4ம் தேதி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
சிபிசிஎல் நிறுவனத்திற்கு இடம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கையகப்படுத்தாத விவசாய நிலங்களில் விளைவிக்கப்பட்ட பயிர்களுக்கு குறுவை தொகுப்பு, சிட்டா அடங்கல் வழங்க மறுக்கும் நாகை மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்ணில் கருப்பு துணி கட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாகை மாவட்டம் பனங்குடியில் உள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் நிறுவன விரிவாக்க பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சிபிசிஎல் நிறுவனத்திற்கு தேவையான 720 ஏக்கர் நிலத்தில் இதுவரை 260 ஏக்கர் நிலம் விவசாயிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் விவசாய நிலங்களுக்கு மிகக் குறைந்த அளவிலான தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் சுமார் 420 ஏக்கர் விவசாய நிலங்களை வழங்க விவசாயிகள் மறுத்து கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கையகப்படுத்தாத நிலத்தில் குறுவை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு வருவாய்த் துறையினர் சிட்டா அடங்கல் வழங்க மறுத்து வருகின்றனர். மேலும் குறுவை தொகுப்பு குறைய முடியாமலும் தவித்து வரும் அவர்கள் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் கண்ணில் கருப்பு துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து விவசாயிகள் கண்டனம் கோசங்களை எழுப்பினர்.
மேலும், தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்பதால் சிபிசிஎல் நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணியை தமிழக அரசு கைவிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். மேலும், விவசாய நிலங்களை கையகப்படுத்தும் சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து வரும் 4ம் தேதி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
ஆட்டோ
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion