மயிலாடுதுறையில் விவசாய நிலத்தில் மாவட்ட அரசு மருந்துகிடங்கு அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு!
வேப்பங்குளம் கிராமத்தில் விவசாய நெல்களத்தில் மாவட்ட அரசு மருந்துகிடங்கு அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் இடத்தை அளவீடு செய்ய வந்த அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியத்திற்கு உட்பட்ட திருவிழந்தூர் ஊராட்சி வேப்பங்குளம் கிராமத்தில் 2500 -க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். அப்பகுதி விவசாயிகளின் வசதிக்காக அறுவடை செய்யும் நெல்லை அடிப்பதற்கான நெற்களம் அமைக்கப்பட்டு அதனை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அந்த களத்தில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கான அரசு மருந்துகிடக்கு வரப்போவதாக அதிகாரிகள் கடந்த அக்டோபர் மாதம் கிராம மக்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதனால், விவசாயம் பாதிக்கப்படும் சிரமம் என்று கூறி, மாவட்டம் மருந்து கிடங்கு தங்கள் பகுதியில் அமைக்கக்கூடாது என்று, வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர். இந்த சூழலில் நில அளவையர்கள் மற்றும் அதிகாரிகள் வேப்பங்குளம் கிராமத்தில் உள்ள நெல்களத்தினை அளவீடு செய்ய வந்திருந்தனர். அவர்கள் வருவதை அறிந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதனை அடுத்து நெற்களத்தை அளக்க வந்த அதிகாரிகள் தங்கள் பணியை மேற்கொள்ளலமால் திரும்பி சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறையில் குத்துச்சண்டை போட்டியில் பதக்கங்களை குவித்த நரிக்குறவர் சமூக மாணவர்கள்!
மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் தேர் ஓடும் வீதியில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் டாஸ்மார்க் பார் அமைக்க பொருட்களை ஏற்றி வந்த லாரியை சிறை பிடித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாடல் பெற்ற மாயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் தேரோடும் வடக்கு வீதியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பள்ளிவாசல் நூலக கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு பொது பயன்பாட்டிற்கான அலுவலகங்கள், குடியிருப்புகள் மற்றும் கடைகள் அமைந்துள்ளன. இந்நிலையில் இப்பகுதியில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் எலைட் டாஸ்மாக் பார் திறப்பதற்காக லாரியில் பொருட்களை ஏற்றி வந்து இறக்க முயற்சித்துள்ளனர்.
Watch Video: யாசிர் அலியால் இந்தியாவுக்கு கிடைத்த விருந்து.. ஈஸியாக கிடைத்த ’ஓசி’ 5 ரன்கள்...!

இதனை அறிந்த அப்பகுதி மக்கள், பல்வேறு கட்சிகளை சார்ந்த பிரமுகர்கள் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பார் அமைப்பதற்கு பொருட்கள் ஏற்றி வந்த லாரியை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு வந்த மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையிலான காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தையின் மூலம் இந்த பகுதியில் டாஸ்மாக் கடை வராமல் நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.






















