Watch Video: யாசிர் அலியால் இந்தியாவுக்கு கிடைத்த விருந்து.. ஈஸியாக கிடைத்த ’ஓசி’ 5 ரன்கள்...!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது நாளில் வங்கதேச அணிக்கு 5 ரன்கள் அபராதம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது நாளில் வங்கதேச அணிக்கு 5 ரன்கள் அபராதம் வழங்கப்பட்டுள்ளது.
நேற்று முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்திருந்தது. இன்று களமிறங்கி சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர், இரண்டாம் நாள் தொடக்கத்திலேயே 86 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய அக்சார் பட்டேல் 14 ரன்களில் வெளியேற, அடுத்து உள்ளே வந்த அஷ்வின் - குல்தீப் ஜோடி வங்கதேச பந்துவீச்சாளர் பந்துகளை பதம் பார்க்க தொடங்கினர். இருவரும் இணைந்து 92 ரன்கள் சேர்க்க, நிதான ஆட்டத்தை வெளிபடுத்தி அரைசதம் கடந்த அஷ்வின் 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்தநிலையில் அஷ்வின் மற்றும் குல்தீப யாதவ் மைதானத்தில் தங்களது திறமையை பேட்டிங்கில் வெளிப்படுத்தி வந்தனர். தைஜுல் இஸ்லாம் பந்துவீச்சில் அஷ்வின் ஸ்டிரைக்கிலும் இருந்தனர். தைஜுல் வீசிய ஓவரின் இரண்டாவது பந்தில் ஷாட்டை ஆடிய அஷ்வின் 2 ரன்களுக்கு ஓடினார்.
5 penalty runs !!
— Cricket Videos (@kirket_video) December 15, 2022
Yasir Ali hits the ⛑️ pic.twitter.com/pMQ373lMWZ
அஸ்வின் ஆடிய ஷாட்டை துரத்தி சென்ற யாசிர் அலி பீல்டிங் செய்து விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹ்மான் நோக்கி வீசினார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் வீசிய பந்து விக்கெட் கீப்பருக்கு பின்னால் வைக்கப்பட்ட ஹெல்மெட் மீது பட்டது. இதையடுத்து, கிரிக்கெட் விதிகளின்படி இந்திய அணிக்கு 5 ரன்களை வழங்கினார். அதாவது தைஜுல் இஸ்லாமின் பந்தில் இந்தியா 2 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், 7 ரன்கள் கிடைத்தது.
தற்போது இந்திய அணி 133.5 ஓவர்களில் 404 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
முதல் இன்னிங்ஸ்:
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், முதல் போட்டி நேற்று காலை 9 மணிக்கு தொடங்கியது. நேற்று தொடங்கிய முதல் டெஸ்டானது சட்டோகிராமில் உள்ள ஜாஹூர் அகமது சவுத்ரி ஸ்டேடியத்தில் டிசம்பர் 14-18 வரையிலும் நடைபெறவுள்ளது. அதேபோல், இரண்டாவது டெஸ்ட் ஷேரே பங்களாவில் உள்ள தேசிய மைதானத்தில் டிசம்பர் 22 முதல் 26 வரை நடைபெறுகிறது.
இந்தநிலையில், வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே.எல். ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களம் இறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் ஸ்கோர் 41 ரன்களாக இருந்தபோது, சுப்மன்கில் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து, அணியின் ஸ்கோர் 45 ரன்களாக இருந்தபோது கே.எல். ராகுல் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அணியின் ஸ்கோர் 48 ரன்களாக இருந்த போது விராட் கோலி 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் 48 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.
இந்த சரிவில் இருந்து மீளுமா என நினைத்துக் கொண்டு இருக்கையில் ரிஷப் பண்ட் மற்றும் புஜாரா கூட்டணி அணியை மெல்ல மெல்ல சரிவில் இருந்து மீட்டது. அதன் பின்னர், அணியின் ஸ்கோர் 112 ரன்களாக இருந்தபோது அதிரடியாக ஆடிவந்த ரிஷப் பண்ட் 45 பந்தில் 46 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன் பின்னர், புஜாராவுடன் கைகோர்த்த ஸ்ரேயஸ் ஐயர் மிகவும் நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். இவர்கள் கூட்டணி தொடர்ந்து இந்திய அணியை வலுவான நிலைக்கு எடுத்துச் சென்றது. இதன்பின்னர், அணியின் ஸ்கோர் 261 ரன்களாக இருந்த போது 203 பந்தில் 90 ரன்கள் குவித்து சதத்தினை நெருங்கிக்கொண்டு இருந்த புஜாரா எதிர்பாராத விதமாக ஆட்டமிழந்தார்.
அஷ்வின் அரைசதம்:
இதன் பின்னர் களமிறங்கிய அக்ஷ்ர் பட்டேல் முதல் நாள் ஆட்டத்தின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்துள்ளது. இந்தநிலையில், சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர், இரண்டாம் நாள் தொடக்கத்திலேயே 86 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய அக்சார் பட்டேல் 14 ரன்களில் வெளியேற, அடுத்து உள்ளே வந்த அஷ்வின் - குல்தீப் ஜோடி வங்கதேச பந்துவீச்சாளர் பந்துகளை பதம் பார்க்க தொடங்கினர். இருவரும் இணைந்து 92 ரன்கள் சேர்க்க, நிதான ஆட்டத்தை வெளிபடுத்தி அரைசதம் கடந்த அஷ்வின் 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ச்சியாக, குல்தீப் யாதவ் 40 ரன்களிலும், உமேஷ் யாதவ் 2 சிக்ஸர்கள் அடித்து 15 ரன்களுடன் வெளியேறினார். இதனால் இந்திய அணி 133.5 ஓவர்களில் 404 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது.