மேலும் அறிய

இந்திய ஏற்றுமதி கடன் உத்தரவாதக் கழகம் அறிவித்துள்ள அருமையான வேலை வாய்ப்பு

மத்திய அரசு நிறுவனத்தில் வேலை எதிர்பார்க்கிறீர்கள் என்றால் இந்த வாய்ப்பிற்கு கட்டாயம் விண்ணப்பிக்கலாம். தொடக்கமே ரூ.88 ஆயிரத்திற்கு மேல் சம்பளத்துடன் அரசு பணியை பெறலாம்.

தஞ்சாவூர்: மத்திய அரசு வேலை தேடுபவர்களுக்கு செம மெகா அறிவிப்பு வெளியாகி இருக்கு. தொடக்கமே ரூ.88 ஆயிரம் மேல் நிச்சய சம்பளம், டிகிரி முடித்து இருந்தால் போதுமாம். வாங்க என்ன வேலை வாய்ப்பு அறிவிப்பு என்று பார்த்திடலாம்.

நீங்கள் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை எதிர்பார்க்கிறீர்கள் என்றால் இந்த வாய்ப்பிற்கு கட்டாயம் விண்ணப்பிக்கலாம். தொடக்கமே ரூ.88 ஆயிரத்திற்கு மேல் சம்பளத்துடன் அரசு பணியை பெறலாம். ஆமாங்க ECGC என்ற பொதுத்துறை நிறுவனம் ப்ரொபஷனரி அதிகாரிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய ஏற்றுமதி கடன் உத்தரவாதக் கழகம் (ECGC), நிர்வாக பிரிவில் ப்ரொபஷனரி அதிகாரி பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 30 காலிப்பணியிடங்களுக்கு பொது மற்றும் சிறப்பு பிரிவின் கீழ் ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். இப்பணிக்கு அதிக சம்பளம் என்பதால், அரசு பணிக்கான தேர்விற்கு தயாராகி வரும் நபர்களுக்கு சூப்பர் வாய்ப்பாக அமையும். எனவே இந்த வாய்ப்பை தவற விட்டு விடாதீங்க.

ப்ரொபஷனரி அதிகாரி (பொது) 28
ப்ரொபஷனரி அதிகாரி (சிறப்பு பிரிவு) 2  என மொத்தம் 30 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டில் 1 பணியிடம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு நிறுவனத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு 01.11.2025 தேதியின்படி, குறைந்தபட்ச வயது என்பது 20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகபடியான வயது 30 ஆகும். விண்ணப்பதார்கள் 02.11.1995 தேதி முன்னர் பிறந்திருக்கக்கூடாது. அதே போன்று, 01.11.2004 தேதிக்கு பின்னர் பிறந்திருக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவையில்லாமல், எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஓபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள், முன்னாள் ராணுவத்தினருக்கு 5 வருடங்கள் தளர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

01.11.2025 தேதியின்படி, குறைந்தபட்ச கல்வித்தகுதி என்பது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் இருந்து பெற்ற இளங்கலை பட்டப்படிப்பு ஆகும். அதற்கான அனைத்து மதிப்பெண் பட்டியல் மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ்களை விண்ணப்பதார்கள் பெற்றிருக்க வேண்டும்.

சிறப்பு பிரிவில் உள்ள 2 இடங்களுக்கு மட்டும் இந்தி மொழியில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது இந்தி மொழியை ஒரு பாடமாக கொண்டு ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ப்ரொபஷனரி அதிகாரி பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.88,635 முதல் அதிகபடியாக ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். கொடுப்பனை, அகவிலைப்படி, மருத்துவ காப்பீடு, போக்குவரத்து செலவு உள்ளிட்ட சலுகைகள் உண்டு. இப்பணிக்கு தகுதியானவர்கள் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 2 தாள்கள் கொண்டு தேர்வு நடைபெறும். முதல் தாள் 200 மதிப்பெண்கள் கொள்குறி வகையில் அமையும். இரண்டாம் தாள் 40 மதிப்பெண்களுக்கு விரிவாக விடையளிக்கும் வகையில் அமையும்.

முதல் தாள் - நுண்ணறிவு, ஆங்கிலம், கணினி திறன், பொது விழிப்புணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் நடைபெறும். இரண்டாம் தாள் - கட்டுரை எழுதுதல் வடிவில் 2 கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் நடைபெறும்.

முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்களின் இரண்டாம் தாள் மட்டுமே திருத்தப்படும். கட்-அஃப் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வில் நெகட்டிங் மார்க் உள்ளது. சென்னை, கோயம்புத்தூரில் தேர்வு மையம் அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வில் தேர்வானவர்கள், நேர்காணலுக்கு செல்வார்கள். டெல்லி அல்லது மும்பையில் நேர்காணல் நடைபெறும். 60 மதிப்பெண்களுக்கு குறைந்தபட்சம் 40 சதவீதம் எடுக்க வேண்டும்.

நேர்காணலின் போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்பிக்க வேண்டும். தேர்வு மற்றும் நேர்காணல் ஆகிய இரண்டு கட்டத்திலும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வானவர்களின் பட்டியல் வெளியிடப்படும்.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://main.ecgc.in/english/ என்ற இணைப்பின் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு கட்டணமாக ரூ.950 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூ.175 செலுத்தினால் போதும். கடந்த 11ம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. வரும் டிசம்பர் 2ம் தேதி வரை ஆன்லைன் விண்ணப்பம் திறந்து இருக்கும். இதற்கான தேர்வு ஜனவரியில் நடைபெறும். விண்ணப்பம் திருத்தம் 06.12.2025 - 07.12.2025, தேர்விற்கு முந்தைய பயிற்சி 15.12.2025, அட்மிட் கார்டு ஜனவரி 2026 முதல் வாரம்.

ஆன்லைன் தேர்வு 11.01.2026 மதியம் 1 மணி முதல் 5 மணி வரை. முடிவுகள் 31.01.2026 அன்று வெளியாகும். நேர்காணல் பிப்ரவரி/ மார்ச் 2026. இறுதிபட்டியல் பின்னர் அறிவிக்கப்படும். தேர்விற்கான அட்மிட் கார்டு மற்றும் இதர விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். https://www.ecgc.in/ என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பத்தை அனுப்பிடுங்கள். செம சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Embed widget