மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
ராஜஸ்தானில் பெண் மருத்துவர் தற்கொலையை கண்டித்து திருவாரூரில் மருத்துவர்கள் வேலை நிறுத்தம்
115 தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் 300க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை புறநோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்து வேலை நிறுத்தம்
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் அர்ச்சனா சர்மா நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து உள்ளார். இதனை அடுத்து காவல் துறையினர் அர்ச்சனா சர்மா மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த அர்ச்சனா சர்மா தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் இன்று இந்திய மருத்துவ கழகம் சார்பில் நாடு முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் புறநோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 115 தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் 300க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை புறநோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்,மருத்துவர் அர்ச்சனா சர்மா மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கு காரணமாக இருந்த காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட அர்ச்சனா சர்மா குடும்பத்தினருக்கு உரிய நிதி வழங்க வேண்டும். மருத்துவர்களின் நீண்டகால கோரிக்கையான மருத்துவர்களை வன்முறையில் இருந்து பாதுகாக்க மத்திய அரசு உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும். மருத்துவர்களை குற்றவாளியாக பதிவு செய்யும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு களில் மாற்றம் கொண்டு வர வேண்டும். நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மற்றும் அதிக இழப்பீடு கேட்கும் வழக்குகளில் இருந்து மருத்துவத்துறைக்கு விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
மருத்துவர்களின் இந்த திடீர் போராட்டத்தின் காரணமாக புறநோயாளிகள் சிகிச்சை பெறமுடியாமல் திரும்பிச் செல்லக் கூடிய நிலை ஏற்பட்டது. அவசர சிகிச்சை போன்ற சிகிச்சைகளை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மேற் கொள்வார்கள் எனவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இந்திய மருத்துவ கழக திருவாரூர் கிளையின் செயலாளர் மருத்துவர் கார்த்திகேயன் கூறும்போது பல ஆண்டுகளாக மருத்துவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம் ஆனால் மருத்துவர்கள் மீதான தாக்குதல் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தும் நபர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion