மேலும் அறிய
கடைகளை ஏலம் விட்ட தஞ்சை மாநகராட்சி ஆணையருக்கு எதிராக திமுகவினர் சாலை மறியல்...!
திமுக நகர துணை செயலாளர் நீலகண்டன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், மாநாகராட்சி ஆணையர் சரவணகுமாரிடம்மிரட்டும் தோனியில் பேசினர்
![கடைகளை ஏலம் விட்ட தஞ்சை மாநகராட்சி ஆணையருக்கு எதிராக திமுகவினர் சாலை மறியல்...! DMK protests against Tanjore Corporation Commissioner கடைகளை ஏலம் விட்ட தஞ்சை மாநகராட்சி ஆணையருக்கு எதிராக திமுகவினர் சாலை மறியல்...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/11/1f39ed07f14a98ed61c12c472deabb9f_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
போலிசாரிடம் வாக்குவாதம் செய்யும் திமுகவினர்
தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில், மாநகராட்சிக்கு சொந்தமான கடை நேற்று ஏலம் விடப்பட்ட நிலையில், திமுக மற்றும் வணிகர்கள் ஏலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாநகராட்சி ஆணையரை மாற்ற கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
தஞ்சாவூரில், ஸ்மார்ட் சிட்டித்தின் கீழ், 28.73 கோடி மதிப்பில் பழைய பேருந்து நிலையம் மற்றும் திருவையாறு பேருந்து நிலையம் ஆகியவை, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கும் பணிகள் துவங்கி முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், பழைய பேருந்து நிலையத்தின் உள்புறத்தில் 54 கடைகளும், திருவையாறு பேருந்து பகுதிகளில் 39 கடைகளும் என 93 கடைகள் கட்டப்பட்டுள்ளது.
![கடைகளை ஏலம் விட்ட தஞ்சை மாநகராட்சி ஆணையருக்கு எதிராக திமுகவினர் சாலை மறியல்...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/11/1f796dfa53bcdbedeea8cfc77e17b174_original.jpg)
இந்த கடைகளுக்கான ஏலம் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. இதைதொடர்ந்து காலை முதல் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பாக குவிந்தனர். பின்னர், அவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெட்டி ஒன்றில் போட்டனர். காலை முதல் நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சியையும், 10க்கும் மேற்பட்ட எல்ஈடி டிவி மூலம் ஒளிபரப்பு செய்தனர். பின்னர், அந்த பெட்டியை மாநகராட்சி கமிஷனர் சரணவகுமார் முன்னிலையை ஏலம் எடுப்பவர்கள் வழங்கிய விண்ணப்பங்களை அலுவலர்கள் பிரித்தனர்.
அப்போது, தி.மு.க. நகர துணை செயலாளர் நீலகண்டன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், அலுவலகத்தின் முன் வந்து, மாநாகராட்சி ஆணையர் சரவணகுமாரிடம் பலரும் வெளியில் காத்துக்கொண்டு இருப்பதாகவும், குறிப்பிட்ட நேரத்தில் அனைவரையும் வர சொல்லாமல் நடந்துக்கொள்ளவது தவறு என மிரட்டும் தோனியில் பேசினார். ஆனால் கமிஷனர் எதையும் கண்டுக்கொள்ளாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றார்.
![கடைகளை ஏலம் விட்ட தஞ்சை மாநகராட்சி ஆணையருக்கு எதிராக திமுகவினர் சாலை மறியல்...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/11/7f3c6cb488470066de9af45658ab3b14_original.jpg)
இந்நிலையில், ஏற்கனவே பழயை பேருந்து நிலையம் பகுதிகளில் கடை வைத்திருந்த வணிகர்கள், தி.மு.க., நிர்வாகிகள் சிலர், மாநகராட்சி அலுவலகத்தின் வெளியில் நின்றுக்கொண்டு, கடைகளை எங்களை ஓதுக்கீடு செய்ய வேண்டும், திமுகவினரை கண்டு கொள்ளாமல் ஏலம் நடத்துவது தவறு, கொரோனா காலத்தில் எந்தவித பாதுகாப்பும் இல்லாமலும், நீதிமன்ற உத்தரவை மதிக்காமலும் செயல்படும் மாநகராட்சி ஆணையரை உடனே மாற்ற வேண்டும் என கோஷமிட்டு, அவரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர், தஞ்சை மாநகராட்சி ஆணையரை ஒரு சிலர் ஒருமையில் திட்டி கோஷமிட்டனர். இதனால் போலீசாருக்கும், திமுகவினருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. பிற்பகலில் மாநாகராட்சி ஆணையர் சரவணகுமார், திமுக நிர்வாகிகள் மற்றும் வணிகர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கொண்டிருந்த போது, ஆத்திரமடைந்த திமுகவினர், மாநகராட்சி ஆணையரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால், ஆத்திரமடைந்த ஆணையர், அனைவரையும் வெளியேற்ற போலீசாருக்கு உத்தரவிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
![கடைகளை ஏலம் விட்ட தஞ்சை மாநகராட்சி ஆணையருக்கு எதிராக திமுகவினர் சாலை மறியல்...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/11/db539324d4c23e19e6f968f8a4fae631_original.jpg)
தொடர்ந்து தனது அறைக்கு சென்ற ஆணையர் சரவணக்குமார், தி.மு.க.நிர்வாகிகள் மற்றும் வணிகர்களை அழைத்து பேசினார். பின்னர் வணிகர்களின் கோரிக்கை குறித்து ஆலோசனை செய்து முடிவு கூறுகிறேன் என்று பதிலளித்ததின் பேரில் திமுக, வணிகர்கள் வெளியில் வந்தனர்.
இதனால் மாநகராட்சி அலுவலகத்திற்குள் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
வணிகம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion