மேலும் அறிய
Advertisement
திருத்துறைப்பூண்டியில் பணிகளை விரைந்து முடிக்காத அதிகாரிகளை கடிந்து கொண்ட ஆட்சியர்
திருத்துறைப்பூண்டியில் பணிகளை விரைந்து முடிக்காத அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரரை கடிந்து கொண்ட மாவட்ட ஆட்சியர்.
திருவாரூர் மாவட்ட விதை சான்று துறை சார்பில் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு விதைகள் வழங்கப்பட்டு விவசாயிகள் அதனை பயிரிட்ட பின்பு இரண்டு முறை நேரில் சென்று ஆய்வு செய்து அதிலிருந்து கிடைக்கும் விதைகளைப் பெற்று சீல் வைத்து உரிய முறையில் மாவட்ட விதை சேமிப்பு கிடங்கில் சேமித்து வைத்து மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கும் பணியினை செய்து வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் 500 டன் நெல் விதைகளையும் 360 டன் உளுந்து விதைகளையும் பயிரிட்டு விதைகளாக மீண்டும் வழங்கியுள்ளனர். இதற்காக திருவாரூர் மாவட்ட வேளாண் துறை சார்பில் முன்கூட்டியே விவசாயிகளுக்கு 90 சதவீதம் பணம் வழங்கப்படுகிறது. விதைகளை ஒப்படைத்த பிறகு அவர்களுக்கு மீதமுள்ள தொகை வழங்கப்படுகிறது. அதே போன்று கிலோ ஒன்றுக்கு எட்டு ரூபாய் ஊக்க தொகையாகவும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ விதை சேமிப்பு கிடங்கு மற்றும் வேளாண் விரிவாக்கம் மையத்தில் திடீர் ஆய்வு நடத்தினார். இதில் விவசாயிகளுக்கு இடு பொருட்கள் உரம் போன்றவை தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வேளாண் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதுடன் விதை சான்று துறையின் அடிப்படை பணிகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
மேலும் விதை சுத்திகரிப்பு நிலையத்திலும் ஆய்வு மேற்கொண்டு விதை பதனிடும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பொறுப்பு லட்சுமிகாந்தன் வேளாண் துணை இயக்குனர் ஏழுமலை விதை சான்று துறை வேளாண்மை அலுவலர் சதீஷ் உள்ளிட்ட வேளாண் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
அதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதிகளில் நடைபெறும் கட்டுமான பணிகளை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ திடிர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர் நகர் மன்ற தலைவர் கவிதா பாண்டியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். தண்டலை சேரி அரசு கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டு கல்லூரிக்கு தேவையானவற்றை கேட்டறிந்தார். அடுத்ததாக புதிய பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டு வரும் காய்கனி அங்காடி வளாகத்தை பார்வையிட்ட பின் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு நடைபெற்று வரும் புதிய கட்டட வேலை எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது என கேட்டு இருந்தார். தாமதமாக ஆரம்பிக்கப்பட்டது என தெரிந்ததும் ஏன் தாமதம் தாமதத்திற்கான அபராதம் விதிக்க வா என கடிந்து கொண்டார். அப்பொழுது அங்கு வந்த பொதுப்பணி துறை அதிகாரிகளிடம் வரைப்படத்தை வாங்கிய ஆட்சியர் ஆய்வு செய்த பின் ஏன் பணி தாமதம் என கேட்டார். அப்பொழுது அங்கிருந்த உதவி பொறியாளர் பணி முடிப்பதற்கான காலம் உள்ளது எனக் கூற ஒப்பந்தக்காரர் பத்தாண்டு காலம் கடந்து பணி ஆரம்பித்தால் பத்தாண்டு காலம் பணி முடிப்பதற்கான ஒப்பந்தம் உள்ளது என கூறுவீர்களா? பணி ஒப்பந்தத்தில் என்ன உள்ளதோ அந்த நேரத்திற்குள் அதிகபட்சம் மூன்று மாதத்திற்குள் பணியை முடிக்க வேண்டும் என கடுமையாக தெரிவித்து கொண்டார்.
அப்பொழுது அங்கிருந்த சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து உதவி பொறியாளரிடம் நீங்கள் யார் என கேட்டார் நான்தான் உதவி பொறியாளர் என அவர் கூற நான் பத்துக்கும் மேற்பட்ட சமயங்களில் பணி நடைபெறும் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். ஆனால் உங்களை ஒரு முறை கூட பார்த்ததில்லை என கூறினார். உடனடியாக அவர் நான் இங்கு இன்சார்ஜ் தான் சார் என கேட்டார். இன்சார்ஜ் ஆக இருந்தாலும் பணிக்கு நடைபெறும் இடத்தை பார்ப்பதில்லையா எனக் கூறிய மாரிமுத்து மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தில் மேற்கூரைகள் பழுதடைந்துள்ளது என கூறினார். உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரி அதை சரி செய்து விட்டோம் எனக் கூற அந்த இடத்தை காட்டுங்கள் என மாவட்ட ஆட்சியர் மருந்தகத்திற்கு சென்றார். பார்வையிட்ட மாவட்ட ஆட்சியரிடம் சட்டமன்ற உறுப்பினர் அங்கு வைக்கப்பட்டிருந்த மருந்துகளை காட்டி இங்கு வரும் நோயாளிகளுக்கு மருந்துகளை கவரில் போட்டுக் கொடுக்காமல் எந்தெந்த வேலைக்கு எந்த மருந்தை சாப்பிடுவதை எழுதிக் கொடுக்காமல் வெறுமனே மாத்திரைகளை அள்ளி நோயாளிகள் கையில் அப்படியே திணித்து அனுப்புகின்றனர். இங்கு வரும் எல்லோரும் படித்தவர்கள் அல்ல பாமர மக்கள் அதிகம் வருகின்றனர் என மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தார். உடனடியாக மாவட்ட ஆட்சியர் ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்டதற்கு அங்கிருந்த மருத்துவர் இப்பொழுதுதான் கவருக்கு ஆர்டர் செய்துள்ளோம் எனக் கூற நீங்கள் ஆர்டர் செய்துள்ளீர்கள் ஆனால் நாங்கள் தான் மருந்தை சாப்பிடுகிறோம் என சட்டமன்ற உறுப்பினர் கூற உடனடியாக மாவட்ட ஆட்சியர் கவர் வரும் வரை பேப்பரிலாவது மாத்திரையை மடித்து எந்தெந்த வேலைக்கு உட்கொள்ள வேண்டும் என விவரமாக எழுதிக் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட ஆட்சியரும் அதிகாரிகளை துருவித் துருவி கேள்வி கேட்க பதில் சொல்ல திணறினர் அதிகாரிகள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
அரசியல்
கல்வி
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion