மயிலாடுதுறை : புதிதாக பணி நியமனம் செய்யப்பட்ட 60 கிராம நிர்வாக உதவியாளர்கள் பணியிடங்களை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு..
அரசாணை வழிமுறைகளை பின்பற்றாமல் பணி நியமன ஆணை வழங்கியதாக கூறி மயிலாடுதுறை மாவட்டத்தில் பணிநியமனம் செய்யப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர்கள் பணியிடங்கள் ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் ஆணை பிறப்பித்துள்ளார்.
அரசாணை நிலை எண் 574-இல் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றாமல் தன்னிச்சையாக பணிநியமன ஆணை வழங்கி விதிமீறல்கள் செய்ததாக கூறி மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக பணிநியமனம் செய்யப்பட்ட 60 கிராம நிர்வாக உதவியாளர்கள் பணியிடங்கள் அனைத்தையும் ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உட்பட்ட மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், தரங்கம்பாடி ஆகிய நான்கு தாலுக்காக்களில் காலியாக உள்ள கிராம நிர்வாக உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்காக வருவாய்த்துறை மூலம் காலிபணியிடங்கள் நிரப்புவதற்கு செய்தி நாள் வழியாக கடந்த பிப்ரவரி மாதம் விளம்பரம் வெளியிப்பட்டது. அதன்படி கிராம நிர்வாக உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் கடந்த மார்ச் மாதம் 7-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதிவரை அந்தந்த தாலுக்கா அலுவலகங்களில் நடைபெற்றது. மயிலாடுதுறை 16, குத்தாலம் 14, சீர்காழி, தரங்கம்பாடி தலா 15 என்று மொதத்தம் 60 பணியிடங்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு, கடந்த வாரம் பணிநியமன ஆணையும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த பணி நியமனத்தில் அரசியல் தலையீடு, உயரதிகாரிகள் தலையீடு, பணம் பெற்றுக் கொண்டு பணி வழங்குதல் உள்ளிட்டவை நடைபெற்ற உள்ளதாக குற்றச் சாட்டுகளை பொதுமக்கள் கூறி வந்தனர். இந்த சூழலில் இதில் வெளிப்படை தன்மையின்றியும், அரசாணை நிலை எண் 574-இல் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளை முழுமையாக பின்பற்றாமல் தன்னிச்சையாக பணிநியமன ஆணை வழங்கி விதிமீறல்கள் செய்ப்பட்டுள்ளது தெரியவருகிறது என கூறி, அரசு விதிகள் மற்றும் அரசாணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றாமல் மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிநியமனம் தொடர்பாக மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் தாசில்தார்களால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விளம்பர அறிவிப்பு முதல் பணிநியமனம் ஆணை வழங்கப்பட்டது வரை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா ஆணை பிறப்பித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் எனவும், மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக நான்கு தாலுக்கா வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் வருவாய்த்துறையினர் மத்தியில் மற்றும் இன்றி அனைத்தும் தரப்பு மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு சுமார் 8 லட்சம் வரை கொடுத்து பலர் வேலை வாங்க முயன்றதாகவும், அவ்வாறு பணம் கொடுத்து வேலை பெற்றவர்கள் தற்போது நியமன ஆணை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் பணி ஆணை பெற்றவர்களிடமும் அரசு விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.