மேலும் அறிய

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக வாகனத்திற்கு அனுமதி மறுப்பு - கண்டனம் தெரிவித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டம்

26 ந் தேதி நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு பங்கேற்க அனுமதியில்லை என்பது தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு விடுதலைப் போராட்ட வீரர்களையும் அவமதிக்கிறது

குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண்டு தோறும் தலைநகர் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கரிக்கப்பட்ட ஊர்திகளும், கலைக்குழுக்களும் பங்கேற்கும். இதில் தமிழகத்தின் பண்பாடு, கலாச்சாரம், வீரம் செறிந்த சுதந்திர போராட்ட வரலாறுகள் இடம் பெற்று,  அனைவரின் கவனத்தையும் ஈர்த்து சிறப்பான விருதுகளும், பரிசுகளும் பெற்று, தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளது. இந்த நிலையில் வரும் 26 ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு   பங்கேற்க அனுமதியில்லை என்ற அறிவிப்பை கண்டித்து தஞ்சை ஸ்மார்ட் சிட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு தஞ்சை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக வாகனத்திற்கு அனுமதி மறுப்பு - கண்டனம் தெரிவித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்துஉத்திராபதி தலைமை வகித்தார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, தஞ்சை மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன், மாநகரச் செயலாளர் வடிவேலன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் காசிநாதன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் சி.பக்கிரிசாமி, சி.சந்திரகுமார், வீரமோகன், கோ.சக்திவேல், திமுக தஞ்சை மாநகர துணை செயலாளர் ஆர். கே.நீலகண்டன்,தமிழர் தேசிய முன்னணி தேர்தல் பணிக்குழு உறுப்பினர் அய்யனாபுரம் சி.முருகேசன், காங்கிரஸ் பேரியக்கத்தின்   தஞ்சை  மாநகர துணை தலைவர் வயலூர் ராமநாதன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  மாவட்ட செயலாளர் ஜெய்னுலாப்தீன், மக்கள் அதிகாரம் மாநகரச் செயலாளர் தேவா,மாதர் சங்க நிர்வாகிகள் ம.விஜயலட்சுமி, ம.மாலதி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக வாகனத்திற்கு அனுமதி மறுப்பு - கண்டனம் தெரிவித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டம்

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வீரமங்கை ராணி வேலுநாச்சியார் காலனி ஆதிக்கத்தை ஆரம்ப நிலையிலேயே எதிர்த்து போராடியவர், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் இழந்த மண்ணை மீட்டவர் இவர் ஒருவர் மட்டும் தான்,தியாக வேங்கை வ.உ.சிதம்பரனார் காலனி ஆதிக்கத்தை  எல்லா முனைகளிலும் எதிர்த்துப்  போராடியவர். நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் 30 வயதில் 40 ஆண்டுகால தீவாந்திர  சிறை தண்டனை பெற்றவர். கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக சுதேசி கப்பல் போக்குவரத்தை நடத்திய மகத்தான வீரர், பிரிட்டீஷ் காலனி ஆதிக்கத்திற்கு எதிரான விடுதலைப் போராட்டத்தை, தனது கனல் மூட்டும் கவிதைகளாலும், கருத்தாயுதம் தரும் கட்டுரைகளாலும் எழுச்சியூட்டிய புரட்சியாளர் மகாகவி பாரதியார் காலத்தை வென்று வாழ்பவர். இவர்களது தியாக வாழ்வை சித்தரிக்கும் ஊர்திகளுக்கு குடியரசு தின அணி வகுப்பில் இடமில்லை என்று கூறியிருப்பதால்,  தமிழகம் கொந்தளிக்கும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும். உடனடியாக தமிழ்நாடு அரசின் ஊர்திகள் அனுமதி அளிக்கும்  அறிவிப்பை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டதுடன் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டன. 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- சட்டவிரோத குவாரி நடத்தியவர்களுக்கு 9 கோடி ரூபாய் அபராதம் - நீதிமன்றத்தில் அரசுத்தரப்பு தகவல்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூர் பெரிய கோயிலில் பாதுகாப்புக்காக புதிய கேமராக்கள்: பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிரடி நடவடிக்கை!
தஞ்சாவூர் பெரிய கோயிலில் பாதுகாப்புக்காக புதிய கேமராக்கள்: பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிரடி நடவடிக்கை!
தஞ்சையில் மூத்த குடிமக்கள் எழுச்சி! 39-ம் ஆண்டு விழாவில் அரசுக்கு நன்றி
தஞ்சையில் மூத்த குடிமக்கள் எழுச்சி! 39-ம் ஆண்டு விழாவில் அரசுக்கு நன்றி
கிரிப்டோ மோசடி: கும்பகோணத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என போலீசார் அறிவிப்பு #CryptoScam #TamilNews
கிரிப்டோ மோசடி: கும்பகோணத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என போலீசார் அறிவிப்பு #CryptoScam #TamilNews
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வு: 30,080 பேர் பங்கேற்பு!
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வு: 30,080 பேர் பங்கேற்பு!
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hormuz Trump New Warning: “ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
“ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
Mahindra Discount: ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி..! தூக்கி கொடுத்த மஹிந்த்ரா - எந்தெந்த SUV, EVக்கு எவ்வளவு ஆஃபர்?
Mahindra Discount: ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி..! தூக்கி கொடுத்த மஹிந்த்ரா - எந்தெந்த SUV, EVக்கு எவ்வளவு ஆஃபர்?
Gas Shortage: நாலே பேருக்கு தான்..! கேஸ் சிலிண்டர் - மத்திய அரசு திட்டவட்டம், யாருக்கு முக்கியத்துவம் தெரியுமா?
Gas Shortage: நாலே பேருக்கு தான்..! கேஸ் சிலிண்டர் - மத்திய அரசு திட்டவட்டம், யாருக்கு முக்கியத்துவம் தெரியுமா?
விஜய் குடும்ப விவகாரம்.. பஞ்சாயத்து பண்ண ரெடி.. லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி!
விஜய் குடும்ப விவகாரம்.. பஞ்சாயத்து பண்ண ரெடி.. லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி!
Innova Hycross: ரூ.1.8 லட்சம் போதும்..! இன்னோவா ஹைக்ராஸ்-க்கான EMI திட்டம் - ஹைப்ரிட் காரில் பறக்கலாம்..
Innova Hycross: ரூ.1.8 லட்சம் போதும்..! இன்னோவா ஹைக்ராஸ்-க்கான EMI திட்டம் - ஹைப்ரிட் காரில் பறக்கலாம்..
Embed widget