மேலும் அறிய

தஞ்சை பூமாலை காதி கிராப்டில் சிறப்பு விற்பனை - கலெக்டர் தொடங்கி வைப்பு

பூமாலை வணிக வளாகத்தில் காதி கிராப்டில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மற்றும் தீபாவளியை ஒட்டி சிறப்பு விற்பனையை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடக்கி வைத்தார்.

தஞ்சாவூர் காந்திஜி சாலையில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் காதி கிராப்டில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மற்றும் தீபாவளியை ஒட்டி சிறப்பு விற்பனையை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடக்கி வைத்தார்.

ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளியை ஒட்டி காதி கிராப்டில் சிறப்பு விற்பனை தொடங்கப்படும். அதேபோல் இந்தாண்டும் நேற்று காந்தி ஜெயந்தியை ஒட்டி சிறப்பு விற்பனையை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில், தஞ்சை மாவட்டத்திற்கு கதர் விற்பனை இலக்காக இந்த ஆண்டு ரூ.58 லட்சத்து 22 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு விற்பனைக்கு கதர், பருத்தி, பட்டு, பாலியஸ்டர் ஆகியவற்றுக்கு 30 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இதேபோல் உல்லனுக்கு 20 சதவீதமும் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. பொதுமக்களும் கதர் ஆடைகளை வாங்கி தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தஞ்சை பூமாலை காதி கிராப்டில் சிறப்பு விற்பனை - கலெக்டர் தொடங்கி வைப்பு

விழாவில் கதர் கிராம தொழில்கள் உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பிரேமலதா, அலுவலக கண்காணிப்பாளர் பிரான்சிஸ் தெரசா மேரி, காதி கிராப்ட் மேலாளர் சாவித்திரி, மகளிர் திட்ட அலுவலர் சரவணபாண்டியன், போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கைத்தறித்துணி விற்பனையை அதிகரிக்கச் செய்வதன் மூலம் நெசவாளர்கள் வாழ்வில் ஒளியேற்ற முடியும். தமிழக நெசவாளர்கள் தரமான, அதேசமயம் விலை குறைந்த கதர் மற்றும் கைத்தறித் துணிகளை கண்கவரும் வடிவமைப்புடன் நெய்வதில் வல்லவர்கள். வர்த்தகப்போட்டி காரணமாக, பல கோடி மதிப்பிலான காதி மற்றும் கைத்தறி துணிகளை விற்பனை செய்வதில் சிரமம் உள்ளது.

தஞ்சை பூமாலை காதி கிராப்டில் சிறப்பு விற்பனை - கலெக்டர் தொடங்கி வைப்பு

நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் தொடர் வேலைவாய்ப்பு வழங்க இயலாமல் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. தமிழக அரசின் காதி மற்றும் கைத்தறித் துறையின்கீழ் நெசவுப் பணி செய்யும் நெசவாளர்களுக்கு உதவும் வகையில், அவர்களால் தயாரிக்கப்பட்ட துணிகள் மற்றும் பொருட்களை காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி விற்பனையாக தள்ளுபடியில் விற்கப்படுகிறது. மக்கள் கொடுக்கும் ஆதரவு நெசவாளர்களுக்கு மிக முக்கியமானதாகும்.

'கதரின் தலைநகர் திருப்பூர்' என்று, கடந்த 1925ல் திருப்பூர் பொதுக்கூட்டத்தில் மகாத்மா காந்தி பேசும் போது குறிப்பிட்டார். கதர் என்பது வெறும் துணி மட்டுமல்ல. அது ஒரு கொள்கையாகவும், கருத்தாகவும் தேச மக்கள் மனதில் இன்னும் ஆழமாக ஊடுருவத்தான் வேண்டும். அப்போதுதான் கதர் நெசவாளர்களின் உழைப்பும், பெருமையும் தெரிய வரும். இதற்கு முழுமையாக கல்லூரி மாணவ, மாணவிகள் ஒத்துழைப்பு நல்கினால் கதர் விற்பனை இலக்கை தாண்டி செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Travis Head:
Travis Head: "இந்தியானாலே அடிப்பேன்" எப்படி போட்டாலும் அடிக்கும் டிராவிஸ் ஹெட் புது ரெக்கார்ட்!
Car Launch 2024: விதவிதமா, ரகரகமா..! 2024ல் இந்தியாவில் அறிமுகமான கார்கள் - எஸ்யுவி தொடங்கி  ஈவி வரை, இவ்வளவா?
Car Launch 2024: விதவிதமா, ரகரகமா..! 2024ல் இந்தியாவில் அறிமுகமான கார்கள் - எஸ்யுவி தொடங்கி ஈவி வரை, இவ்வளவா?
ADMK Meeting: சட்டை கிழியாமல்? பாட்டில் பறக்காமல்? இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு - அடக்குவாரா ஈபிஎஸ்?
ADMK Meeting: சட்டை கிழியாமல்? பாட்டில் பறக்காமல்? இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு - அடக்குவாரா ஈபிஎஸ்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Travis Head:
Travis Head: "இந்தியானாலே அடிப்பேன்" எப்படி போட்டாலும் அடிக்கும் டிராவிஸ் ஹெட் புது ரெக்கார்ட்!
Car Launch 2024: விதவிதமா, ரகரகமா..! 2024ல் இந்தியாவில் அறிமுகமான கார்கள் - எஸ்யுவி தொடங்கி  ஈவி வரை, இவ்வளவா?
Car Launch 2024: விதவிதமா, ரகரகமா..! 2024ல் இந்தியாவில் அறிமுகமான கார்கள் - எஸ்யுவி தொடங்கி ஈவி வரை, இவ்வளவா?
ADMK Meeting: சட்டை கிழியாமல்? பாட்டில் பறக்காமல்? இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு - அடக்குவாரா ஈபிஎஸ்?
ADMK Meeting: சட்டை கிழியாமல்? பாட்டில் பறக்காமல்? இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு - அடக்குவாரா ஈபிஎஸ்?
General Knowledge: இதெல்லாம் உண்மையா? இந்தியாவிற்கு இப்படி ஒரு பெருமையா? கூகுளின் வேகம் என்ன? எத்தனை ட்வீட்கள்?
General Knowledge: இதெல்லாம் உண்மையா? இந்தியாவிற்கு இப்படி ஒரு பெருமையா? கூகுளின் வேகம் என்ன? எத்தனை ட்வீட்கள்?
TN Rain Update: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, எங்கெல்லாம் கனமழை கொட்டும்? வானிலை அறிக்கை
TN Rain Update: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, எங்கெல்லாம் கனமழை கொட்டும்? வானிலை அறிக்கை
Ajithkumar: எத்தனை வருஷம் ஆச்சு இப்டி பாத்து! அமர்க்களம் அஜித்தை அப்படியே கொண்டு வந்த ஆதிக்!
Ajithkumar: எத்தனை வருஷம் ஆச்சு இப்டி பாத்து! அமர்க்களம் அஜித்தை அப்படியே கொண்டு வந்த ஆதிக்!
Rasipalan December 15: மிதுனத்துக்கு நம்பிக்கை! விருச்சிகத்திற்கு வெற்றி - இன்றைய ராசி பலன்!
Rasipalan December 15: மிதுனத்துக்கு நம்பிக்கை! விருச்சிகத்திற்கு வெற்றி - இன்றைய ராசி பலன்!
Embed widget