தஞ்சை தேர் விபத்து: சம்பவ இடத்துக்கு நேரில் செல்லும் முதல்வர் ஸ்டாலின்! ரூ.5 லட்சம் நிதியுதவி!
விபத்தில் உயிரிழந்த குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதியுதவியும் அறிவித்துள்ளார்.
தஞ்சை களிமேடு தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்திக்க இருக்கிறார். காலை 11.30 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து தஞ்சாவூர் செல்கிறார்.தேர் மின்கம்பியில் உரசிய விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 15 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், விபத்தில் உயிரிழந்த குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதியுதவியும் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை
தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு கிராமத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற தேர் திருவிழாவில் எதிர்பாராத விதமாக தேர் மின்கம்பியில் உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர் என்ற துயரமான செய்தியினைக் கேள்வியுற்று மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்து இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், இவ்விபத்தில் 15 நபர்கள் தற்போது சிகிச்சையில் உள்ளதாக அறிகிறேன், அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் விபத்து பகுதியில் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல் துறைக்கும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பபத்தாருக்கு தலா ரூபாய் ஐந்து இலட்சம் உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.
#UPDATE | As of now, 10 people died & 15 others suffered injuries after a temple car (of chariot festival) came in contact with a live wire in the Thanjavur district. FIR was registered in the matter: V Balakrishnan, Inspector General of Police, Central Zone, Tiruchirappalli pic.twitter.com/oM5YBGcyE6
— ANI (@ANI) April 27, 2022
Tamil Nadu | At least 10 people died after a temple car (of chariot festival) came in contact with a live wire in the Thanjavur district. More details are awaited. pic.twitter.com/clhjADE6J3
— ANI (@ANI) April 27, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்