Nagapattinam: கடைமடைக்கு வந்தது காவிரி நீர்; விவசாயிகள் மலர்கள் தூவி வரவேற்பு - பெண்கள் கும்மி பாடல் பாடி உற்சாகம்
கடைமடைக்கு வந்தது காவிரி நீர் ; ஓடம்போக்கி ஆற்றில் பாய்ந்த காவிரி நீரை விவசாயிகள் நெல் மணிகள் மற்றும் மலர்கள் தூவி வரவேற்பு: பெண்கள் கும்மி பாடல் பாடி உற்சாகம்.
![Nagapattinam: கடைமடைக்கு வந்தது காவிரி நீர்; விவசாயிகள் மலர்கள் தூவி வரவேற்பு - பெண்கள் கும்மி பாடல் பாடி உற்சாகம் Cauvery water reached Nagai district today Farmers welcome by sprinkling rice beads and flowers TNN Nagapattinam: கடைமடைக்கு வந்தது காவிரி நீர்; விவசாயிகள் மலர்கள் தூவி வரவேற்பு - பெண்கள் கும்மி பாடல் பாடி உற்சாகம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/23/fcb0bfa40e3b5af5fecec560acc49b521687527411519113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஓடம்போக்கி ஆற்றில் பாய்ந்த காவிரி நீரை விவசாயிகள் நெல் மணிகள் மற்றும் மலர்கள் தூவி வரவேற்றனர்.
மேட்டூர் அணையில் போதிய நீர் இருந்ததால் குறுவை சாகுபடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறந்து வைத்தார். மேலும் நாகை மாவட்டத்தில் 3 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பில் 378 கிலோ மீட்டர் தொலைவில் வாய்க்கால்கள், 48 ஆறுகளில் தூர்வாரும் பணிகள் நிறைவடைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து கடைமடை பகுதியான நாகை மாவட்டத்திற்கு காவிரி நீர் இன்று வந்து சேர்ந்தது. மாவட்டத்தின் கடைசி நீர் ஒழுங்கியான பாப்பாகோவில் அடுத்த நரியங்குடி ஓடம்போக்கியாறு வந்து சேர்ந்த காவிரி நீரை பொதுமக்களும், விவசாயிகளும் ஆரத்தி எடுத்தும், குலவையிட்டும் மலர் மற்றும் நெல்மணிகள் தூவி உற்சாகமாக வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து பெண்கள் மகிழ்ச்சியுடன் கும்மியடித்து, பாட்டுப்பாடி காவிரித்தாயை வணங்கினர். காவிரி நீர் கடைமடை பகுதிக்கு வந்துள்ளதால் டெல்டா பகுதியில் 50 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெறும் எனவும், 5 லட்சம் விவசாயிகளும் விவசாய தொழிலாளர்களும் வருவாய் பெறுவார்கள் என்றும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
உரிய நேரத்தில் காவிரி நீரை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள், தமிழகத்திற்கு இந்தாண்டு கர்நாடக அரசு வழங்க வேண்டிய 9 டிஎம்சி தண்ணீரை உடனடியாக விவசாயிகளுக்கு கேட்டு பெற்றுத் தர வேண்டும் என நாகை கடைமடை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)