மேலும் அறிய
Advertisement
திருவாரூர் கலெக்டருக்கு கொரோனா; தனியார் மருத்துவமனையில் அனுமதி!
ஆட்சியர் சாந்தாவிற்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 சதவீதம் நுரையீரல் தொற்று இருப்பதால் தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வருகிற 7ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 585 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நன்னிலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா கேர் சென்டர்களிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் மூன்று பேர் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை திருவாரூர் மாவட்டத்தில் 29 ஆயிரத்து 226 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 5859 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒட்டுமொத்தமாக இதுவரை 189 பேர் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
மேலும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சாந்தா அறிவுறுத்தி வருகிறார். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட ஆட்சியர் சாந்தா உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆட்சியர் சாந்தாவிற்கு காய்ச்சல் மற்றும் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்ததை அடுத்து கொரோனா பரிசோதனை செய்துள்ளார் . இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நுரையீரல் பாதிப்பு இருக்கிறதா என்பதற்காக பரிசோதனை செய்திருக்கிறார். இதில் 5% நுரையீரல் தொற்று இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதனை அடுத்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா திருவாரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உயர் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தற்போது மாவட்ட ஆட்சியர் சாந்தா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் . அங்கு மருத்துவர்களால் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளில் மாவட்ட ஆட்சியர் சாந்தா ஈடுபட்ட பொழுது அவருடன் சக ஊழியர்கள் மற்றும் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். ஆகையால் அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
சென்னை
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion