மேலும் அறிய

டிகிரி முடித்தவர்கள் கவனத்திற்கு... அருமையான வேலை வாய்ப்பு அறிவிப்பு

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு திறன் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தஞ்சாவூர்: டிகிரி படித்தவர்களுக்கு தேசிய நிறுவன சட்டம் தீர்ப்பாயத்தில் வேலை வாய்ப்பு வந்துள்ளது. மாதம் ரூ.50,000 சம்பளங்க.

மத்திய அரசின் தேசிய நிறுவன சட்டம் தீர்ப்பாயத்தில் காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர்கள் மற்றும் தனிச் செயலாளர்கள் பதவிகளுக்கான அறிவிப்பு வெளியாகி, விண்ணப்பங்கள் வரும் அக்டோபர் மாதம் வரை பெறப்படுகிறது.

தேசிய நிறுவன சட்டம் தீர்ப்பாயத்தில் காலியாக உள்ள 32 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரூ.45 மற்றும் 50 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தனிச் செயலாளர் (Private Secretaries) 14
சுருக்கெழுத்தாளர் (Stenographers) 18 என மொத்தம் 32 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

சென்னையில் தனிச் செயலாளர் பதவிக்கு 3 மற்றும் சுருக்கெழுத்தாளர் பதவிக்கு 2 காலிப்பணியிடங்கள் உள்ளன. பெங்களூரில் தலா 1 இடமும், டெல்லியில் தனிச் செயலாளர் பதவிக்கு 3 இடங்களும் உள்ளன. இந்தூர், கட்டாக், அமராவதி, கவுகாத்தி, சண்டிகர், மும்பை, கொல்கத்தா மற்றும் ஜெய்பூர் ஆகிய இடங்களில் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

இப்பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது. பட்டதாரிகள் மட்டுமின்றி ஓய்வு பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது.

தனிச் செயலாளர் பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 25 வயது இருக்க வேண்டும். சுருக்கெழுத்தாளர் பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 28 வயது இருக்க வேண்டும். ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் அதிகபடியாக 62 வயது வரை இருக்கலாம்.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பதார்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் ஆங்கிலத்தில் ஒரு நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் என்ற வீதம் Dictation மற்றும் கணினியில் ஒரு நிமிடத்திற்கு 50 வார்த்தைகள் என்ற விதம் Transcription திறன் அவசியமாகும்.

மேலும், விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் சுருக்கெழுத்தராக மற்றும் தனி செயலாளராக 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்தாளர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.45,000 மற்றும் தனிச் செயலாளர் பதவிக்கு மாதம் ரூ.50,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு திறன் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆட்சேர்ப்பு நடவடிக்கை குறித்த முழு விவரம் இமெயில் மற்றும் செல்போன் எண்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விண்ணப்பதார்கள் தொடர்பு எண்களை செயலில் வைத்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். திறன் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்படும். தேர்வு செய்யப்படும் நபர்கள் முதலில் 1 வருடத்திற்கு பணி நியமனம் செய்யப்படுவார்கள். தேவையின் அடிப்படையில் 3 வருடங்கள் வரை அதிகரிக்கப்படலாம்.

https://nclt.gov.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க அக்டோபர் 8-ம் தேதியே கடைசி நாள் ஆகும். திறன் தேர்வு பின்னர் அறிவிக்கப்படும்

சுருக்கெழுத்து திறனுடன் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் பட்டப்படிப்பு தகுதியுடன் அனுபவம் உள்ளவர்களுக்கு சிறப்பான வாய்ப்பாக அமைகிறது. 

தலைப்பு செய்திகள்

தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுத் துறைக்கு மாற்றும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுத் துறைக்கு மாற்றும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
தெருவிளக்குகள் எரியலை... விஷபூச்சிகள் அச்சத்தால் தவிக்கும் சிவகாமிபுரம் மக்கள்
தெருவிளக்குகள் எரியலை... விஷபூச்சிகள் அச்சத்தால் தவிக்கும் சிவகாமிபுரம் மக்கள்
அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget