மேலும் அறிய

தமிழ்நாடு குழந்தைகள் நலத்துறையில் 12 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேலை வாய்ப்பு அறிவிப்பு

பணியிடங்களுக்கு ஆட்கள் நேரடியாக தேர்வு செய்யப்படுகிறார்கள். அந்த வகையில், 3 பதவிகளில் 12 காலிப் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

தஞ்சாவூர்: தமிழ்நாடு குழந்தைகள் நலத்துறையில் ரூ.45,000ல் சம்பளம். மொத்தம் 12 காலிப்பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. சரிங்க இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? விபரங்கள் உள்ளே.

தமிழ்நாடு அரசு துறைகளில் தேர்வில்லாமல் வேலை எதிர்பார்ப்பவர்களுக்கு மகிழ்ச்சியான ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையில் சென்னையில் உள்ள பணி வாய்ப்புகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சரி இதற்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்கள் உங்களுக்காக…. 

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் சென்னை அலுவலகத்தில் குழந்தைகள் உதவி மையம் கட்டுபாட்டு அறை செயல்படுகிறது. இங்குள்ள பணியிடங்களுக்கு ஆட்கள் நேரடியாக தேர்வு செய்யப்படுகிறார்கள். அந்த வகையில், 3 பதவிகளில் 12 காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு அதிகப்படியாக ரூ.45,000 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணியிடங்கள் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது. பட்டதாரிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளலாம்.

உதவி எண் நிர்வாகி (Help Line Administrator) 1
ஐடி சூப்ரவைசர் ( IT Supervisor) 1
கால் ஆபரேட்டர் (Call Operator) 10 என மொத்தம் 12 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

சென்னையில் உள்ள குழந்தை உதவி எண் சேவை மைய கட்டுபாட்டு அறையில் உள்ள பணியிடங்களுக்கு 01.05.2025 தேதியின்படி, விண்ணப்பிக்க அதிகபடியாக 42 வயது வரை இருக்கலாம். அவசர உதவி எண் அல்லது குழந்தை உதவி எண் ஆகியவற்றில் ஏற்கனவே பணி அனுபவம் பெற்றவர்களுக்கு கூடுதலாக 10 ஆண்டுகள் வரை தளர்வு வழங்கப்படும்.

உதவி எண் நிர்வாகி பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் சட்டம், சமூகப் பணி, சமூகவியல், சமூக அறிவியல், உளவியல் ஆகியவற்றில் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும், அரசு அல்லது அரசு சாரா நிறுவனங்களில் குழந்தைகள் சார்ந்தவற்றில் 5 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 1 வருடம் கலந்தாய்வு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சென்னை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

ஐடி சூப்ரவைசர் பதவிக்கு கணினி அறிவியல் அல்லது ஐடி ஆகியவற்றில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் டேட்டா மேனேஜ்மெண்ட், டாக்குமெண்டேஷன், வீடியோ கான்பரஸ் ஆகியவற்றில் 3 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

கால் ஆபரேட்டர் பதவிக்கு கம்யூனிகேஷன் திறன் அவசியமாகும். தமிழ் அல்லது ஆங்கிலத்தில் நன்கு பேச தெரிந்திருக்க வேண்டும். டெலிகாம் அல்லது வெப் அடிப்படையிலான பணியில் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

உதவி எண் நிர்வாகி பதவிக்கு மாதம் ரூ.45,000 சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐடி சூப்ரவைசர் பதவிக்கு மாதம் ரூ. 33,000 வழங்கப்படும். கால் ஆபரேட்டர் பதவிக்கு மாதம் ரூ.17,500 வழங்கப்படும். 

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் கல்வித்தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவார்கள். நேர்காணல் அல்லது அடுத்தக்கட்ட தேர்வு முறை குறித்து தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்படும். இப்பணிக்கு தகுதி பெறுபவர்கள் 1 வருடத்திற்கு பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமும் கொண்டவர்கள் https://dsdcpimms.tn.gov.in/ அல்லது https://www.tn.gov.in/job_opportunity.php ஆகிய இணையதளங்களில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களுடன், தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களுடன் இணைத்து தபால் வழியாகவோ, நேரில் சென்றோ அல்லது இமெயில் முகவரி மூகமாகவோ அனுப்பி வைத்து விண்ணப்பிக்கலாம். இதற்கான அறிவிப்பு கடந்த செப்டம்பர் 18-ம் தேதி வெளியானது. வரும் அக்டோபர் 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 

தபால் மூலம் அனுப்ப முகவரி: குழந்தைகள் நலம் மற்றும் சிறப்பு சேவைகள் இயக்குநரகம், எண். 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லிஸ், சென்னை - 600 010, இமெயில் முகவரி : chlrecruitment.dcwss@gmail.com

விண்ணப்பத்தில் கீழ் கண்டவை நிச்சயம் இடம் பெற்றிருக்க வேண்டும்.

பெயர்
தந்தை/ கணவர் பெயர்
பிறந்த தேதி/ பிறப்பு சான்றிதழ் (சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்)
வயது
வீட்டு முகவரி
மொபைல் எண்
இமெயில் ஐடி
கல்வித்தகுதி (சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்)
அனுபவம் (சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்)
விண்ணப்பதாரர் புகைப்படம்

விண்ணப்பிக்க கடைசி நாள் 03.10.2025 காலை 11 மணி வரை

இப்பணியிடங்களுக்கு முழுமையான பூர்த்தி செய்யப்பட்டு, ஆவணங்கள் இணைக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். தகுந்த தகுதி உடையவர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறலாம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Embed widget