மேலும் அறிய
ABP IMPACT: திருவாரூரில் உரம் பதுக்கிய 2 கடைகளுக்கு உரம் விற்பனை செய்ய தடை
யூரியாவின் தேவை 16,376 மெட்ரிக் டன்னாக உள்ளது. ஆனால் தற்போதைய கையிருப்பு 2956 மெட்ரிக் டன் மட்டுமே உள்ளது. இதேபோல டிஏபி தேவை 6,764 மெட்ரிக் டன்களாக உள்ளநிலையில் 2030 மெட்ரிக் டன் மட்டுமே உள்ளது.

உரக்கடைகளில் ஆய்வு
காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உரிய நேரத்தில் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதன் காரணமாக நடப்பாண்டில் சுமார் 1.36 லட்சம் ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு, தற்போது அறுவடை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல சம்பா சாகுபடியை பொருத்தவரை 2 லட்சத்து 30 ஆயிரத்து 800 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்போது வரை ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 800 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதேபோல தாளடி சாகுபடியை பொருத்தவரை ஒரு லட்சத்து 37 ஆயிரத்து முன்னூற்று அறுபது ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது வரை 2000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது சம்பா சாகுபடி பயிர்களுக்கு அடி உரம் தெளிக்க வேண்டிய அவசியத்தில் விவசாயிகள் உள்ளனர் குறிப்பாக யூரியா, டிஏபி, பொட்டாஷ் போன்ற அடி உரங்களை 30 முதல் 40 நாட்கள் வயதுடைய சம்பா பயிர்களுக்கு தெளித்தால் தூர் நன்றாக வளர்ந்து அதிக மகசூல் கிடைக்கும். ஆனால் மாவட்டம் முழுவதும் இந்த மூன்று உரங்களுக்கும் மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வேளாண் விற்பனை நிலையங்கள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக மானிய விலையில் அரசு சார்பில் உரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது உரங்களின் கையிருப்பு மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளது. திருவாரூர் மாவட்டத்திற்கு மட்டும் சம்பா மற்றும் தாளடி சாகுபடிகளுக்கான யூரியாவின் தேவை 16 ஆயிரத்து 376 மெட்ரிக் டன்னாக உள்ளது. ஆனால் தற்போதைய கையிருப்பு 2956 மெட்ரிக் டன் மட்டுமே உள்ளது. இதேபோல டிஏபி இன் தேவை 6 ஆயிரத்து 764 மெட்ரிக் டன்களாக உள்ளநிலையில் 2030 மெட்ரிக் டன் மட்டுமே கையிருப்பில் உள்ளது. பொட்டாஷ் உரத்தின் தேவையும், கையிருப்பும் கிட்டத்தட்ட சமநிலையில் உள்ளது.

முதற்கட்டமாக 40 நாட்கள் வயதுடைய சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு அடி உரங்கள் இட வேண்டிய தேவையில் விவசாயிகள் உள்ளனர். இந்த நிலையில் உரங்களின் தட்டுப்பாடு விவசாயிகளை மேலும் கவலையடையச் செய்துள்ளது. உரம் மத்திய அரசின் தொகுப்பிலிருந்து மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து மத்திய தொகுப்பிலிருந்து தேவையான உரங்களை பெற்று விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் மேலும் தனியார் கடைகளில் உரங்களைப் பதுக்கி வைத்து அதிக அளவிற்கு விற்பனை செய்து வருகிறார்கள் இதனை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர் இது குறித்த செய்தி ஏபிபி நாடு இணையதளத்தில் செய்தி வெளியான நிலையில் வேளாண்மை இணை இயக்குனர் ஸ்டாமின் தலைமையில் அதிகாரிகள் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கடைகளை ஆய்வு செய்தனர்.

அப்பொழுது திருவாரூர் மற்றும் நன்னிலம் பகுதிகளில் உள்ள இரண்டு தனியார் உர கடைகளில் பதிவேட்டில் உள்ள இருப்புக்கும் உண்மை இருப்புக்கும் முரண்பாடாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செயல் சட்டத்தை மீறியதாக கூறி இரண்டு கடைகளும் ஒரு வார காலம் உரம் விற்பனை செய்வதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் அனைத்து தனியார் கடைகளிலும் pos இயந்திரம் மூலமாகவே விற்பனை செய்ய வேண்டும். மேலும் விவசாயிகள் ஆதார் எண் பெற்றுக் கொண்டு அவர்களின் பெயரில் எவ்வளவு கொடுக்கிறோம் என்பதை பதிவு செய்ய வேண்டும் அதுமட்டுமன்றி கடைகளின் வாசலில் விலைப்பட்டியலை வைக்க வேண்டும் இல்லை என்றால் தனியார் கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
கல்வி
கல்வி
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement