மாவட்டத்திற்கு என்று தனி அலுவலர் ஒருவரை நியமனம் செய்ய வேண்டும் - ஆவின் முகவர்கள்
கெட்டுபோன பாலை மாற்றிதருவதாக கூறி ஆவின் நிறுவனம் ஏமாற்றுவதாகவும் ஆவின் பாலுக்கான கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தியும், ஆவின் முகவர்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
ஆவின் நிறுவனம் கெட்டுபோன பாலை மாற்றிதருவதாக கூறி ஏமாற்றுவதாகவும், ஆவின் பாலுக்கான கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தியும், ஆவின் முகவர்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம் ஆவின் முகவர்கள் நல சங்க பொறுப்பாளர்கள் மனு ஒன்றை அளித்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
தஞ்சாவூர் மண்டலத்தில் இருந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஆவின் பால் மற்றும் உபபொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட ஆவின் பால் முகவர்கள் இருந்து வருகிறோம். பல ஆண்டுகளாக கமிஷன் தொகை உயர்த்தி வழங்கப்படாமல் இருப்பதால் மின் கட்டணம் உயர்வு, ஆட்கள் சம்பள உயர்வு ஆகியவற்றால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம்.
கடந்த சில மாதங்களாக ஆவின் பால் விநியோகம் உரிய நேரத்திற்கு வருவதில்லை, பால் லிக்கேஜ் பாட்கேட்டுகள் மாற்றிகொடுப்பதும் கிடையாது. இதனால் முகவர்கள் நஷ்டமடைய வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. தனியார் பாலை விட அதிக அளவில் ஆவின் பால் விற்பனை செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். காலதாமதம் இன்றி உரிய நேரத்தில் பால் முகவர்களுக்கு வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும், கடந்த மாதம் 16-ம் தேதி முகவர்களுக்கு கெட்டுபோன பால் வழங்கியதை மாற்றி தருவதாக கூறி பால் வழங்காமல் நிறுவனம் ஏமாற்றுவதாகவும்,
முகவர்களின் குறைகளை மற்றும் பொருட்கள் தேவை, இருப்பு குறித்து தெரிவிப்பதற்கு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு என்று தனி அலுவலர் ஒருவரை நியமனம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது, தொடர்ந்து அதனை பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
TN Assembly: வணிக வரி தொடர்பாக சமாதான திட்டம் - 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு..