மேலும் அறிய
எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி சென்னையில் இருந்து நாகை வரை 354 கி.மீ சைக்கிளில் பயணித்த இளைஞர்
மிதிவண்டி பயணம் உடல்நலத்திற்கு ஆரோக்கியம் எனவும் பொதுமக்களிடம் பிரச்சாரத்தை மேற்கொண்டதாக ஹரிஹர மாதவன் தெரிவித்தார்

சைக்கிள் பயணம் செய்த இளைஞர்
பெட்ரோல் சிக்கனம் மற்றும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் நாகையை சேர்ந்த பொறியியல் மாணவர் விழிப்புணர்வு சைக்கிள் பிரச்சாரம் மேற்கொண்டார். நாகப்பட்டினம் ஆரிய நாட்டு தெருவை சேர்ந்தவர் ஹரிஹர மாதவன், சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஏரோஸ்பேஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சுற்றுச்சூழல் மாறுபாடு மற்றும் பெட்ரோல் டீசல் சிக்கனத்தை வலியுறுத்தி சென்னையில் இருந்து கடந்த 12ஆம் தேதி சைக்கிள் பிரச்சார பயணத்தை தொடங்கிய அவர், கல்பாக்கம், மரக்காணம் புதுச்சேரி சிதம்பரம் சீர்காழிகாரைக்கால் காரைக்கால், திருப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு நாகை வந்து சேர்ந்தார்.

நாகை வந்த ஹரிஹர மாதவனுக்கு இளைஞர்களும், அரசியல் பிரமுகர்களும் மாலை சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். தினமும் 40 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் ஹரிஹர மாதவன், உலக வெப்பமயமாதலுக்கு எதிராக சென்னை தொடங்கி நாகை வரை 354 km நடைபெற்ற சைக்கிள் பயணம் பெட்ரோல் டீசலை அத்தியாவசியதிற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும், மிதிவண்டி பயணம் உடல்நலத்திற்கு ஆரோக்கியம் எனவும் பொதுமக்களிடம் பிரச்சாரத்தை மேற்கொண்டதாக ஹரிஹர மாதவன் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பட்ஜெட் 2025
பட்ஜெட் 2025
பட்ஜெட் 2025
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion