Kanmani Actress | "தொண்டையில மாட்டி துடிச்சுப்போயிட்டேன்” : வடைக்குள் ப்ளாஸ்டிக்.. கதறிய கண்மணி சீரியல் நடிகை..
சன் டிவி சீரியலில் நடித்து வரும் ஷாம்பவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சிகர தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சூழலில் சீரியல்களின் பங்கு முக்கியமானது. தற்போது இருக்கும் பெரும்பாலான சேனல்களில் சீரியல்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்படுகின்றன. இந்த சீரியல் கலாசாரத்தை தொடங்கிவைத்தது சன் டிவி என சொல்லலாம்.
குறிப்பாக ஒரு சேனலை டிஆர்பியில் உச்சம் கொண்டு செல்வதிலும் சீரியல்கள் முக்கியமான இடத்தை வகிக்கின்றன. அந்தவகையில், சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்களை அதிகம் கவர்ந்தது கண்மணி. இந்த சீரியலில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து வரும் ஷாம்பவி குருமூர்த்திக்கு தனி ரசிகர் பட்டாளம் ஏராளம்.
View this post on Instagram
சாம்பவி எப்பொழுது சமுக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஒரு நபர். தன்னை சார்ந்த விஷயங்களை தன்னுடைய ரசிகர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர். இந்தநிலையில் சாம்பவி சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சிகர தகவலுடன் ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டார்.
அந்த பதிவில், சென்னையில் ஷூட்டிங்கின் போது பிரபல ஹோட்டல் ஒன்றில் ஆர்டர் செய்திருந்தேன். அந்த ஆர்டர் செய்யப்பட்ட உணவில் இருந்த வடையில் ஒரு சிறியரக ப்ளாஸ்டிக் துண்டு இருந்தது. இதை தெரியாமல் சாப்பிட்டபோது அது என் தொண்டையில் சிக்கியது.
View this post on Instagram
மிகவும் சிரமப்பட்டுதான் வெளியில் எடுத்தேன். நீங்களும் எந்த ஹோட்டலில் ஆர்டர் செய்யதாலும் கவனமுடன் சாப்பிடுங்கள்.தற்போது அந்த ஹோட்டல் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, ஷாம்பவி தெலுங்கில் தொடங்கியுள்ள புதிய சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதற்கு முன்பாக விஜய் டிவியில் “விண்ணைத்தாண்டி வருவாயா”, தெலுங்கில் “மல்லேஸ்வரி” ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

