மயிலாடுதுறையில் கோயில் வெள்ளி படிச்சட்டத்தை திருடிய 2 அர்ச்சகர்கள் கைது
மயிலாடுதுறை பரிமள ரெங்கநாதர் கோயிலில் 7 ஆண்டுகளுக்கு முன்பு களவு போன வெள்ளி படிச்சட்டம் திருட்டில் ஈடுபட்ட இருவரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மாவட்டம் மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் திருக்கோயிலவ் அமைந்துள்ளது. இக்கோயில் உற்சவ மூர்த்தியை தூக்கி செல்ல பயன்படும் "படிச்சட்டம்” தோளுக்குகினியாள் என்றழைக்கப்படும். இது மரத்தினால் செய்யப்பட்டு மேலே வெள்ளி தகடுகளால் கவசம் இடப்பட்டு இருக்கும்.
இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்த படிச்சட்டத்தில் கவசமாக போடப்பட்டிருந்த வெள்ளி தகடுகள் உரித்து எடுக்கப்பட்டு களவாடப்பட்டது. இந்த களவு செயல் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கண்டுபிடிக்காத நிலையில்,
புதியதாக படிச்சட்டம் ஒன்று வெள்ளி தகடுகளுடன் செய்து பழையது போன்றே கோயிலில் வைத்திட குற்றவாளிகளால் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது என்றும், இதன் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சென்னை K.K நகரைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் சிலை தடுப்பு பிரிவில் புகார் அளித்துள்ளார். இந்த மனுவின் மீது பூர்வாங்க விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அம்மனுவினை பேரில் 01.02.2022 ம் தேதி சிலை திருட்டு தடுப்பு பிரிவு எண். 03/2022 u/s 403, 406, 409, 202, 120-B, 454(2), 380(2), 468, 471 IPC பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இவ்வழக்கில் அக்கோயில் பணிபுரிந்துவரும் ஸ்ரீநிவாச ரெங்க பட்டர், முரளிதர தீட்சிதர் ஆகியோரை விசாரணை செய்ததில் இவர்கள் படிச்சட்டத்தில் வெள்ளி தகடுகளை உரித்து களவாடியுள்ளார்கள் என்பது தெரியவந்தது.
மேலும் பழைய படிச்சட்டத்தை போன்றே வெள்ளி தகடுகள் பதித்து புதியதாக படிச்சட்டம் செய்திட மயிலாடுதுறை A.R.C ஸ்ரீ காமாட்சி ஜீவல்லரியில் பழைய படிச்சட்டத்திலிருந்து உரித்து எடுத்து உருக்கி வெள்ளிகட்டிகளை கொடுத்தும், மேலும் போதாததற்கு நன்கொடையாளர்கள் மூலம் பணம் கொடுக்க செய்தும் உள்ளது தெரியவந்தது. இந்த இருவரையும் கைது செய்து. அவர்களிடம் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தின் படி A.R.C ஸ்ரீ காமாட்சி ஜீவல்லரியில் புதிதாக செய்யப்பட்ட புதிய படிச்சட்ட வெள்ளி உருப்படிகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட எதிரிகள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட உள்ளனர். மேலும் புதியதாக செய்யப்பட்ட படிச்சட்டத்திற்கு வெள்ளி பொருட்கள் 15 கிலோ எடையில் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.