மேலும் அறிய

1330 திருக்குறளையும் கடகடவென ஒப்புவித்து அசத்தும் தஞ்சை அரசுப்பள்ளி மாணவிகள்

கல்வியின் நோக்கம் என்பது எப்படிக் கற்றுக்கொள்வது. கற்றுக் கொண்டதை எப்படி வாழ்க்கையின் மேம்பாட்டுக்கு பயன்படுத்திக் கொள்வது என்பதுதான்.

1330 திருக்குறளையும் அட்சுரம் மாறாமல் அட்டகாசமாக கூறி அசத்தும் தஞ்சை மானோஜிப்பட்டி அரசு ஆதிதிராவிட உயர்நிலைப்பள்ளி மாணவிகள் இருவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இருளில் இருந்து வெளிச்சத்தை நோக்கி பயணிப்பதே கல்வி. அந்த கல்வி என்ற கடலில் முத்தெடுத்து சாதனை சங்கிலியில் கோர்த்து வெற்றி நடை போடும் மாணவிகள் இருவர் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். கல்வியை கற்றுக் கொடுப்பது தொழில் அல்ல தவம். அந்த தவத்தை சிறப்பாக செய்து தன் பள்ளி மாணவிகளின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பவர்கள்தான் ஆசிரியர்கள். அவர்கள் அமைத்து தரும் தடத்தில் திறமையாக நடை போட்டு, கம்பீரமாக சாதனைகள் படைப்பதுதான் மாணவ, மாணவிகளின் கடமையாக இருக்க வேண்டும்.

கல்வியின் நோக்கம் என்பது எப்படிக் கற்றுக்கொள்வது. கற்றுக் கொண்டதை எப்படி வாழ்க்கையின் மேம்பாட்டுக்கு பயன்படுத்திக் கொள்வது என்பதுதான். கல்வியின் மிக உயர்ந்த குணமே சகிப்புத்தன்மைதான் என்பார்கள். தோல்வி என்ற இருள் சூழ்ந்து நின்றாலும், வெற்றி என்பது தூரத்தில் இருந்தாலும் அசராமல் விழி மாறாமல் நடை போட்டு இலக்கை அடைவதுதான். அந்த வகையில் தஞ்சாவூர் மானோஜிப்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த 6ம் வகுப்பு மாணவிகள் இருவர் 1330 திருக்குறளையும் அட்சுரம் மாறாமல் அட்டகாசமாக கூறி அனைவரின் விழிகளையும் உயர்த்த வைக்கின்றனர்.
 
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது... பட்டென்று வெடிக்கும் ஊசி பட்டாசு சத்தமும் குறையாத ஒன்றுதான். மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரிது என்பார்கள். அதுபோல்தான் கடின உழைப்பால் கிடைத்த வெற்றியின் கிரீடம் எப்போதும் அழகுதானே. சிறிது, சிறிதாக கற்றுக் கொண்டு மலைக்க வைக்கும் அளவில் சாதனையாக மாற்றி உள்ளனர் மாணவிகள் சாதனா (11), அபிநயா (11). இருவரும் ஆறாம் வகுப்பு மாணவிகள். 10ல் ஆரம்பித்து 100, 200, 500, 1000 என்று வளர்ந்து முழுமையாக 1330 திருக்குறள்களையும் அட்டகாசமாக கூறி வெற்றிக் கோப்பைகளையும், சான்றிதழ்களையும் தங்கள் வசமாக்கி கொண்டுள்ளனர்.

1330 திருக்குறளையும் கடகடவென ஒப்புவித்து அசத்தும் தஞ்சை அரசுப்பள்ளி மாணவிகள்

திருக்குறளில் எந்த அதிகாரத்தையும் சொல்லலாம். திருக்குறளின் முதல் வார்த்தையை கூறலாம் எப்படி பந்து வீசினாலும் வெளுத்தெடுப்பது போல் உலக பொதுமறையாம் திருக்குறளை தன் நினைவுப்பக்கத்தில் பதித்தெடுத்து தடுமாறாமல், தயங்காமல் படபடவென்று சரவெடியாய் கூறி அசத்துகின்றனர். இதில் அபிநயா தந்தை சுந்தரமூர்த்தி கூலித் தொழிலாளர், அம்மா தாமரைச்செல்வி, தம்பி தினேஷ். 1ம் வகுப்பு படிக்கிறார். தன் நினைவாற்றலால் கடந்த 9 மாதங்கள் கடின பயிற்சி பெற்று 1330 திருக்குறளையும் 1 மணிநேரம் 15 நிமிடங்களில் ஒப்புவிக்கிறார். இதற்காக விருதும், சான்றிதழ்களும் பெற்றுள்ளார். தமிழ் வளர்ச்சித்துறையில் பதிவும் செய்துள்ளார் மாணவி அபிநயா. இடைவிடாத பயிற்சி, தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியைகள், பெற்றோர் கொடுத்த ஒத்துழைப்பால் சாதனை சிகரமாக உயர்ந்து நிற்கிறார் மாணவி அபிநயா.

திருக்குறளை ஒப்புவிக்க கூறினால் ஆயிரம் வாலா பட்டாசாக பட், பட்டென்று, கடகடவென்று ஒப்புவிக்கும் மாணவியின் நினைவாற்றல் வியக்க வைக்கிறது.

மற்றொரு மாணவி சாதனாவின் தந்தை அந்தோணிராஜ் சிலிண்டர் கம்பெனி தொழிலாளர், அம்மா ரூபி. சகோதரிகள் சிந்தனா, சுதர்சனா முறையே 9 மற்றும் 10ம் வகுப்பு படிக்கின்றனர். சாதனாவும் 1330 திருக்குறளையும் 1.30 மணி நேரத்தில் ஒப்புவித்து அசரடிக்கிறார். இவரும் வெற்றிக் கோப்பைகள், விருதுகள், சான்றிதழ்களை குவித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் வேளாண் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற கோபிசிங் என்ற தன்னார்வலர் திருக்குறளை சரியான முறையில் ஒப்புவிக்கும் வகையில் பயிற்சிகளை வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக அளித்து வருகிறார். இதனால் இரு மாணவிகளும் குறிப்பிட்ட நேரத்தில் திருக்குறளை தவறின்றி ஒப்புவித்து காண்பிக்கின்றனர். இது வைரத்தை மேலும் மேலும் பட்டைத்தீட்டி மதிப்புமிக்கதாக மாற்றுவதாக அமைந்துள்ளது.

மாணவிகளின் இந்த திறமை குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரமௌலி கூறுகையில், “அபிநயா, சாதனா இருவரும் 1330 குறளையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறமை கொண்டவர்கள். சிறிது சிறிதாக கற்றுக் கொண்டு இன்று முழுமையாக ஒப்புவிக்கின்றனர். இந்த இரு மாணவிகளின் அபார நினைவாற்றல் அவர்களை மேலும் மெருகேற்றும். இப்பள்ளியில் 100, 200, 300 என்று திருக்குறளை ஒப்புவிக்கும் மாணவ, மாணவிகள் பலர் உள்ளனர். அவர்களும் முழுமையாக 1330 குறளையும் ஒப்புவிக்கும் நாள் விரைவில் வரும். ஏழ்மை நிலை என்று எண்ணாமல் திறமையை படிக்கட்டுக்களாக கொண்டு முன்னேற நினைக்கும் மாணவ, மாணவிகளுக்கு நான் உட்பட மற்ற ஆசிரிய, ஆசிரியைகளும் முழு ஒத்துழைப்பும், உதவியும் அளிப்போம்” என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: கடலுக்குள் மாட்டிக்கொண்ட 6 மீனவர்கள்; ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!
Fengal Cyclone LIVE: கடலுக்குள் மாட்டிக்கொண்ட 6 மீனவர்கள்; ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: கடலுக்குள் மாட்டிக்கொண்ட 6 மீனவர்கள்; ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!
Fengal Cyclone LIVE: கடலுக்குள் மாட்டிக்கொண்ட 6 மீனவர்கள்; ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Red Alert: நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; எங்கெல்லாம் அதி கனமழைக்கு வாய்ப்பு? வானிலை சொல்வது என்ன?
Red Alert: நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; எங்கெல்லாம் அதி கனமழைக்கு வாய்ப்பு? வானிலை சொல்வது என்ன?
Chennai Red Alert: நாளை சென்னைக்கு மிக கனமழை வாய்ப்பு; நவ.30 ரெட் அலர்ட்: வானிலை அப்டேட் இதுதான்!
Chennai Red Alert: நாளை சென்னைக்கு மிக கனமழை வாய்ப்பு; நவ.30 ரெட் அலர்ட்: வானிலை அப்டேட் இதுதான்!
Chennai Rain Alert: ஃபெங்கல் புயல்; நவ.29, 30-ல் அடித்து வெளுக்கப்போகும் கனமழை- வெதர்மேன் எச்சரிக்கை!
Chennai Rain Alert: ஃபெங்கல் புயல்; நவ.29, 30-ல் அடித்து வெளுக்கப்போகும் கனமழை- வெதர்மேன் எச்சரிக்கை!
Embed widget