Tamilnadu Election updates : வாக்களிக்க சைக்கிளில் வந்த விஜய்.. ட்ரெண்டாகும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு
கொரோனா பாதிப்பு உள்ளதால் வாக்காளர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது ; மக்கள் அனைவரும் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்
LIVE
Background
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 3998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதோடு சேர்த்து கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. நடிகர் அஜித், கமல், சூர்யா, ரஜினிகாந்த் ஆகியோர் காலையிலேயே வந்து தங்கள் வாக்குகளை செலுத்தினர். இதுவரை 13 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவாகி உள்ளன
தமிழகத்தில் 72.78 சதவீதம் வாக்குகள் பதிவு; அதிகபட்சமாக பாலக்கேட்டில் 87.33 சதவீதம் பதிவு
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நிறைவு பெற்ற நிலையில், தமிழகம் முழுவதும் பதிவான வாக்குப்பதிவு முழு விபரம் சற்று முன் கிடைத்துள்ளது. அதன் படி 72.78 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக பாலகோட்டில் தொகுதியில் 87.33 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக வில்லிவாக்கத்தில் 55.52 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இத்தகவலை தெரிவித்துள்ளார்
வாக்கு எண்ணும் மையத்தில் கமல்ஹாசன் ஆய்வு
கோவை தெற்கு தொகுதியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் நடிகரும், மக்கள் நீதிமய்ய தலைவருமான கமல்ஹாசன் நேரில் ஆய்வு
பணப்பட்டுவாடா நடைபெறுவதாக தேர்தல் அதிகாரியிடம் கமல்ஹாசன் நேரில் புகார்
கோவை தெற்கு தொகுதியில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக, அங்குள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை நேரில் பார்த்த பின்பு நிருபர்களிடம் அந்த தொகுதியின் வேட்பாளரான கமல்ஹாசன் கூறியிருந்தார். இதையடுத்து, கோவை தெற்கு தொகுதியில் டோக்கன் மூலம் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக கமல்ஹாசன் தேர்தல் அதிகாரியிடம் நேரில் புகார் அளித்துள்ளார்.
பேரனுடன் சென்று வாக்களித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதல்வரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தனது சொந்த கிராமமான சிலுவம்பாளையத்தில் தனது பேரனுடன் சென்று வாக்களித்தார்.
ஜனநாயக திருவிழாவை வலுப்படுத்துங்கள் : பிரதமர் வேண்டுகோள்
தமிழ்நாட்டில் இன்று தேர்தல் நடைபெறுவதால், அதிக அளவில் வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும் என்று தமிழக மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்