மேலும் அறிய
தடகள வீராங்கனை தனலட்சுமிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
தடகளப் போட்டியில் பி.டி.உஷாவின் சாதனையை முறியடித்த தமிழக வீராங்கனை தனலட்சுமிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Dhanalaxmi

தடகளப் போட்டியில் 23 ஆண்டு கால பி.டி.உஷாவின் சாதனையை தமிழக வீராங்கனை தனலட்சுமி தகுதிச்சுற்றில் முறியடித்தார். இதையடுத்து, அவருக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், விளையாட்டு வானில் மீண்டும் ஒரு தமிழக நட்சத்திரம். தடகளப் போட்டிகளில் சாதனை மங்கையாக விளங்கும் திருச்சியைச் சேர்ந்த தனலட்சுமிக்கு வாழ்த்துகள். மின்னலென ஓடும் அவரது சாதனைச் சிறகுகள், அவரை மேலும் பல உயரங்களுக்கு அழைத்துச் செல்லட்டும் என பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
அரசியல்





















