மேலும் அறிய

Headlines : இன்று நடந்தவை என்னென்ன? 8 மணி தலைப்பு செய்திகள்..

இன்றைய மாலை 8 மணி தலைப்பு செய்திகள்

தமிழ்நாடு:

மொழியை காப்பாற்ற உயிரை கொடுத்த இனம் தமிழினம் என சென்னை இலக்கிய திருவிழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.

தமிழ்நாட்டின் வரலாறு தெரியாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுவதா என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். மேலும், அண்ணா வழி வந்தவர்களான தமிழ்நாடே எங்களது கருத்து என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு, வரும் ஜனவரி 10 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு; எம்.ஜி.ஆர் உருவாக்கிய விதிகளை இபிஎஸ் மாற்றுவதாக ஓ.பி.எஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வாதம்.         

தமிழ்நாட்டில் உள்ள சிவன் கோயிலில் ஆருத்ரா தரிசனம், இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.  

உச்சநீதிமன்றம் வழிகாட்டுதலின்படியே, தமிழ்நாட்டில் குவாரிகள் இயங்குவதற்கான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.

ஜனவரி 17 ஆம் தேதி, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு இன்று பந்தகால் நடபட்டது. சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் மாட்டுக்கு கார் பரிசாக வழங்கப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியம் அளித்ததற்காக சுவாதி மீது சென்னை உயர்நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது.

இந்தியா:

டெல்லி மாநகராட்சி கூட்டத்தில்  நடைபெற்ற கவுன்சிலர்கள் பதவியேற்பு விழாவில் ஆம் ஆத்மி மற்றும் பாஜகவுக்கு இடையே மோதல், ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு; கான்பூரில் 25 பேர் பலி

ஜார்க்கண்ட்டில் உள்ள ஜெயின் சமூகத்தின் வழிபாட்டு தளத்தை சுற்றுலா தளமாக அறிவித்ததற்கு பல்வேறு அமைப்பினர் போராட்டம்.

கர்நாடக மாநிலம் பந்திப்பூர் முதுமலை புலிகள் காப்பகத்தில் வேகமாக பரவும் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல்

வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், இந்தியாவில் கிளைகள் அமைக்க யுஜிசி அனுமதி

உலகம்:

ரஷ்யாவில், நாளை பாரம்பரிய கிறிஸ்துமஸ் தினம்; 2 நாள் போர் நிறுத்தம் அறிவித்த அதிபர் புதின்

இலங்கையில் அபகரிக்கப்பட்ட நிலங்கள் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்புகள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.

ராணுவத்துக்கு மேலும் ஆயுதம் சேர்ப்பதற்காகவே, ரஷ்யா போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

சர்வதேச அளவில் 20 கோடி பயனாளர்களின் விவரங்கள் திருடப்பட்டுள்ளதாக இணையதள கண்காணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் குறித்தான உண்மையான தகவல்களை சீனா மறைப்பதால், இதர நாடுகள் கட்டுப்பாடுகள் விதித்ததில்லை தவறில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

விளையாட்டு:

எந்த வகை கிரிக்கெட்டிலும் நோ-பால் வீசுவது குற்றம் என இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான கராச்சி டெஸ்டில் வெறும் 33 பந்துகளில் அரைசதம் அடித்ததன் மூலம்  முழு நேர ஆல்ரவுண்டர் என்பதை நிரூபித்த கபில் தேவின் பிறந்தாள் இன்று.

ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்கா இடையேயான கடைசி கிரிக்கெட் போட்டி, சிட்னியில் பெய்த மழையால் 3நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
"இரவு நேரங்களில் அவசர தேவைனா.. GH போங்க" அலட்சியமாக பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
"இரவு நேரங்களில் அவசர தேவைனா.. GH போங்க" அலட்சியமாக பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Embed widget