மேலும் அறிய

Vijay Tamil Cinema: இனி விஜய் இல்லாத தமிழ் சினிமாவும் திரைத்துறை வணிகமும் எப்படி இருக்கும் தெரியுமா? ஒரு பார்வை

Vijay Tamil Cinema: சினிமாவில் இருந்து விலகப்போவதாக விஜய் அறிவித்துள்ள நிலையில், அவரது முடிவு திரைத்துறையில் எத்தகைய தாகக்த்தை ஏற்படுத்தும் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

Vijay Tamil Cinema: அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய் சினிமாவில் இருந்து விலகுவது, திரைத்துறைகயுலகின் வணிகத்திற்கு பெரிய இழப்பாக கருதப்படுகிறது.

அரசியலில் நடிகர் விஜய்:

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் வேளையிலேயே நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். அவரது இந்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது தான் என்றாலுமே, தற்போது அவர் தமிழ் சினிமாவில் பிடித்துள்ள இடம் என்பது யாருமே எதிர்பார்க்காதது தான். அப்படி தமிழ் சினிமாவின் உச்சாணிக் கொம்பில் இருக்கும் நேரத்தில், சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்து இருப்பது தான் ஆச்சரியத்தை அளிக்கிறது. 

உச்சாணிக் கொம்பில் விஜய்..!

ஆரம்ப காலங்களில் உருவ கேலிக்கு ஆளான விஜய், வருடங்கள் கடந்தோட கடின உழைப்பால் தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டார். குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் அவர் பெற்றுள்ள வளர்ச்சியான அசுரத்தனமானது என்றே கூறலாம். கேட்கும் கோடிகளை சம்பளமாக கொடுத்து அவரது படத்தை தயாரிக்க, தயாரிப்பாளர்கள் காத்துக் கிடக்கின்றனர். வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும், திரையரங்குகள் பக்கம் இழுத்து படம் பார்க்க வைக்கும் ஒரு சில தமிழ் நடிகர்களில் விஜய்க்கு மிக முக்கிய இடம் உண்டு. இதன் காரணமாகவே சுமாரான படமாகவே இருந்தாலும் சில நூறு கோடிகளை வசூலாக வாரிக் குவிப்பது என்பது விஜய் படங்களுக்கு சர்வ சாதாரண செயலாகிவிட்டது. அதற்கு உதாரணம் தான் மோசமான விமர்சனங்களை பெற்று இருந்தாலும், 300 கோடிகளை வாரிக் குவித்த வாரிசு திரைப்படம்.

தமிழ் திரையுலகின் வசூல் சக்ரவர்த்தியாக திகழும் விஜய்:

இந்தியாவின் பன்மொழி திரைத்துறைகளில், தமிழ் சினிமாவின் கோலிவுட்டிற்கு என தனி இடம் உண்டு. தரமான படங்களை தயாரிப்பதோடு, சிறந்த பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த படங்களை வழங்குவதிலும் தமிழ் சினிமா கைதேர்ந்தது. ஆனாலுமே, அதன் பெரும்பாலான வணிகம் என்பது இன்னும் ஒரு சில குறிப்பிட்ட நடிகர்களையே அதிகளவில் சார்ந்துள்ளது. அதில் மிக முக்கிய நபர் மற்றும் தவிர்க்க முடியாத நபர் தான் விஜய்.

உதாரணமாக கொரோனா காலத்தில் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே துவண்டு கிடந்தது. பொதுமக்கள் திரையரங்கிற்கு வர அஞ்சியதால், சில நடிகர்கள் தங்களது படத்தை நேரடியாக ஒடிடியில் வெளியிட்டனர். ஆனால், விஜயோ ஊரடங்கு முடியும் வரை காத்திருந்து, தனது மாஸ்டர் படத்தை திரையரங்குகளில் வெளியிட்டார். 50 சதவிகித இருக்கைகளுடன் மட்டுமே வெளியான இந்த படம், மொத்தமாக 300 கோடி ரூபாய் வரை வசூலிது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இது அவரது ரசிகர் பட்டாளத்தின் பலத்தை மட்டுமின்றி, விஜய் படம் என்றால் குடும்பம் குடும்பமாக திரையரங்குகளில் கூட்டம் குவியும் என்பதை உரக்க உணர்த்தியது.   இப்படி இருக்கையில், சினிமாவில் இருந்து விலகுவதாக விஜய் எடுத்துள்ள முடிவு அவரது சினிமா ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, தமிழ் சினிமாவின் வணிகத்திலும் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

இனி இந்த பிரச்னைகள் இருக்காது?  

  • இனி தலயா, தளபதியா என்ற அநாவசிய தலைப்பிலான சமூக வலைதள விவாதங்கள் இருக்காது என நம்பலாம்
  • தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார், வசூல் சக்ரவர்த்தி யார் என்ற தலைப்பில் அஜித் - விஜய் ரசிகர்கள் இடையேயான வரம்பு மீறும் சண்டைகள் இருக்காது
  • மிக மோசமான வார்த்தைகளை உள்ளடக்கிய ஹேஷ்டேக்குகள் அஜித் - விஜய் ரசிகர்களால் தேசிய அளவில் டிரெண்டாகாது
  • விஜய் படங்களில் இடம்பெறும் அரசியல் வசனங்களால் ஏற்படும் சர்ச்சைகள் இனி குறைந்து விடும் (நேரடியாகவே அரசியல் பேசுவார்)
  • முதல் நாள் முதல் காட்சிக்கு என கூறிக்கொண்டு நள்ளிரவு முதலே திரையரங்க வளாகங்களில் காத்திருக்கும் விஜய் ரசிகர்கள் கூட்டம் காணாமல் போகும்
  • விஜய் படத்திற்கு அநாவசியமாக கூடுதல் கட்டணம் கொடுத்து டிக்கெட் வாங்கும் பிரச்னை இருக்காது 

தமிழ் சினிமா வணிகம் பாதிக்குமா?

  • என்ன தான் சிறிய படங்கள் வெளியானாலும், திரைப்பட விநியோகஸ்தர்களுக்கு அதிக லாபம் தருவது என்றால் அது உச்சநட்சத்திரங்களின் படங்கள் தான். அந்த லிஸ்டில் இருந்து விஜய் விலகுவது, விநியோகஸ்தர்களுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது
  • திரையரங்குகளில் கூட்டம் குவிந்தால் தான் அதன் உரிமையாளர்களுக்கு லாபம். அப்படி ஒட்டுமொத்த மக்களையும் திரைக்கு இழுக்கும் வல்லமை கொண்ட விஜய் படம் இனி வராது என்பது திரையரங்க உரிமையாளர்களுக்கும் இழப்பே.
  • விஜய் போன்ற ஒரு சில நடிகர்களின் படங்களை தான் ஒடிடி நிறுவனங்கள் 100 கோடி ரூபாய் வரை கொடுத்து விலைக்கு வாங்கும். அந்த வருவாயையும் தமிழ் சினிமா இழக்கும்
  •  விஜயின் நூறு கோடியை கடந்த ஊதியம் மற்றும் அவரது படங்கள் வசூலிக்கும் சில நூறு கோடிகள் மூலம் கிடைக்கும் அரசுக்கான வரி வருவாயும் தடைபடும் 
  • தொலைக்காட்சிகளில் விஜய் படம் ஒளிபரப்பானால் அன்றைய நாளின் டிஆர்பி வின்னர் அதுவாக தான் இருக்கும். அந்த வகையில் ஒளிபரப்ப இனி புதிய படங்கள் எதுவும் கிடைக்காது.
  • விஜய் படம் வெளியாகிறது என்றாலே அதற்கான மார்கெட்டிங் என்பது மும்முரமாக நடைபெறும். எங்கு திரும்பினாலும் அந்த படத்தை பற்றி பேசும் வகையில் தான் விளம்பரங்கள் இருக்கும். இனி அந்த துறையும் இழப்பை சந்திக்கும்.
  • விஜய் படம் என்றாலே திரைத்துறையின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அந்த வாய்ப்பும் இனி பறிபோகும் 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

G.O.A.T Release Issue | G.O.A.T ரிலீஸில் சிக்கல்! அப்செட்டில் விஜய் FANSKN Nehru Lalkudi MLA | ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
ஈரோட்டில் நடந்ததுதான் விக்கரவாண்டி இடைத்தேர்தலிலும் நடக்கும் - எடப்பாடி பழனிசாமி
ஈரோட்டில் நடந்ததுதான் விக்கரவாண்டி இடைத்தேர்தலிலும் நடக்கும் - எடப்பாடி பழனிசாமி
Embed widget