“முதல்வருக்காகவும் பொன்முடிக்காகவும் சிறை செல்ல நாங்கள் தயார்” - எம்.எல்.ஏ புகழேந்தி
விழுப்புரம் : முதல்வர், அமைச்சர் பொன்முடிக்காக சிறை செல்ல நாங்கள் தயார் - எம்.எல்.ஏ புகழேந்தி
விழுப்புரம் : எத்தனை அமலாக்க துறை வந்தாலும் சமாளிக்க திமுக தயாராக இருப்பதாகவும் எங்களிடம் பூச்சாண்டி வேலை காட்ட வேண்டாம் எனவும் முதலமைச்சருக்காகவும், அமைச்சர் பொன்முடிக்காகவும் சிறை செல்ல நாங்கள் தயாராக இருப்பதாகவும் விக்கிரவாண்டி எம்.எல்.ஏ புகழேந்தி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் திமுக மகளிர் அமைப்பு சார்பாக மணிப்பூர் கலவரம் பூர்வகுடி பழங்குடி இன பெண்கள் நிர்வானப்படுத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் ஒன்றிய பாஜக அரசனை கண்டித்து பல்வேறு இடங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் மணிப்பூரில் இரு பெண்கள் நிர்வான படுத்தப்பட்டதை கண்டித்தும் பாஜக அரசை கண்டித்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட திமுக மகளிர் அமைப்பினர் மாநில மகளிர் அணி செயலாளர் தேன்மொழி மற்றும் தெற்கு மாவட்ட செயலாளரும் திமுக விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது மேடையில் பேசிய விக்கிரவாண்டி திமுக எம் எல். ஏ புகழேந்தி ”எத்தனை அமலாக்க துறை வந்தாலும் சமாளிக்க திமுக தயாராக இருக்கிறது. எங்களிடம் பூச்சாண்டி வேலை காட்ட வேண்டாம். முதலமைச்சருக்காகவும், அமைச்சர் பொன்முடிக்காகவும் சிறை செல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம். அமைச்சர் பொன்முடி மீது இரண்டு பொய் வழக்குகள் போடப்பட்டதில் நிரபராதி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சோதனை என்ற பெயரில் அமலாக்கதுறையை பயன்படுத்தினால் அதனை சமாளிப்போம்” என கூறினார்.
அதனை தொடர்ந்து ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திமுக மகளிர் அமைப்பினர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்