மேலும் அறிய

விருதுநகரில் 123 ஆண்டுகளுக்கு முன்.. தண்ணீர் தர்மம் செய்த கல்வெட்டு கண்டுபிடிப்பு: ஆச்சரிய தகவல்!

கி.பி.13-ம் நூற்றாண்டில், குலசேகரப்பாண்டியன் ஆட்சியில் மக்களின் பயன்பட்டுக்காக ஒரு துலாக்கிணறு விழுப்பனூரில் தோண்டப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் முழுவதும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்ட சமயங்களில் இத்தகைய கிணறு, குளங்களை தனி நபர்களும் அமைத்துக் கொடுத்துள்ளனர். 

விருதுநகர் அருகே மல்லாங்கிணரில் கல்வெட்டு கண்டெடுப்பு
 
விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணரில், 123 ஆண்டுகளுக்கு முன்பு ஊர்மக்களுக்கு தர்மமாக கருங்கற்களால் ஆன தண்ணீர்க் கிணறு அமைத்துக் கொடுத்த தகவல் சொல்லும் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. மல்லாங்கிணரில் இருந்து கல்குறிச்சி செல்லும் சாலையில் முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியன் நினைவிடம் அருகில் கருங்கற்களால் சதுர வடிவில் கட்டப்பட்ட கிணற்றின் மேல் விளிம்பில் ஒரு கல்வெட்டு இருப்பதை, ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, நூர்சாகிபுரம் சு.சிவகுமார் ஆகியோர் கண்டெடுத்துள்ளனர்.
 
தண்ணீர் தானம் மிகப் புண்ணியமாக கருதப்பட்டது
 
இதுபற்றி அவர்கள் கூறியதாவது...,” பழங்காலம் முதல் மன்னர்கள், வணிகர்கள், ஜமீன்தார்கள், கிராம ஆட்சியாளர்கள், மக்கள் எனப் பலரும் தானம் செய்து அதைக் கல்வெட்டுகளாகவும் செப்பேடுகளாகவும் பதிவு செய்துள்ளனர். இதில் தண்ணீர் தானம் மிகப் புண்ணியமாக கருதப்பட்டது. கிணற்றின் விளிம்பில் இரண்டு வரியில் உள்ள கல்வெட்டு, கலியுகம் 5002, பிலவ ஆண்டு மாசி மாதம், இங்கிலிஸ் வருடம் 1902-ல் மல்லாங்கிணர் க.நாகம நாயக்கர் குமாரர் கணக்கு குப்புசாமி நாயக்கர் ஊர் மக்களின் பயன்பாட்டுக்காக தர்மமாக கருங்கற்களால் ஆன இக்கிணற்றை அமைத்துக் கொடுத்ததாகத் தெரிவிக்கிறது.
 
பெருமாள் கோயிலில் மடப்பள்ளி ஒன்றைக் கட்டிக்கொடுத்துள்ளார்
 
இதில் கலி, தமிழ், ஆங்கில ஆண்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் 1904-ல் நாகமநாயக்கர் இவ்வூர் சென்னகேசவப் பெருமாள் கோயிலில் மடப்பள்ளி ஒன்றைக் கட்டிக்கொடுத்துள்ளார் என அக்கோயில் கல்வெட்டில் உள்ளது. அக்காலகட்டத்தில் இக்கிராமத்தின் ஆட்சியாளர்களாக இவர்கள் இருந்திருக்கலாம்.
 
எண்கோண வடிவ கிணற்றையும் உபயமாகச் செய்துள்ளனர்
 
கி.பி.13-ம் நூற்றாண்டில், குலசேகரப்பாண்டியன் ஆட்சியில் மக்களின் பயன்பட்டுக்காக ஒரு துலாக்கிணறு விழுப்பனூரில் தோண்டப்பட்டுள்ளது. இம்மாவட்டம் முழுவதும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்ட சமயங்களில் இத்தகைய கிணறு, குளங்களை தனி நபர்களும் அமைத்துக் கொடுத்துள்ளனர். நரிக்குடியில் உலகப்பன் சேருவைக்காரர், குண்டுகுளத்தில் கருப்பணக்குடும்பன் குளங்களையும், சோலைசேரியில் பெத்தநல்லுநாயக்கர் எண்கோண வடிவ கிணற்றையும் உபயமாகச் செய்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
 
தலைப்பு செய்திகள்

CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Free Health Insurance: அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
பூவிருந்தவல்லி - வடபழனி மெட்ரோ ரெடி! ஆனா ரயில் ஓடாது... பின்னணியில் பகீர் காரணம்!
பூவிருந்தவல்லி - வடபழனி மெட்ரோ ரெடி! ஆனா ரயில் ஓடாது... பின்னணியில் பகீர் காரணம்!
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Gold and silver rate today : இன்று நகை வாங்க சூப்பர் சான்ஸ்.! ஒரே நாளில் திடீர் ட்விஸ்ட்.- இன்றைய விலை நிலவரம் இதோ..
இன்று நகை வாங்க சூப்பர் சான்ஸ்.! ஒரே நாளில் திடீர் ட்விஸ்ட்.- இன்றைய விலை நிலவரம் இதோ..
Free Health Insurance: அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Skoda Superb: 40KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் டிசைன், வசதிகள் - ஸ்கோடா சூப்பர்ப் வந்தாச்சு - டெலிவரி எப்போ?
40KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் டிசைன், வசதிகள் - ஸ்கோடா சூப்பர்ப் வந்தாச்சு - டெலிவரி எப்போ?
Embed widget